Home | 8 ஆம் வகுப்பு | 8வது சமூக அறிவியல் | மதராஸின் தோற்றம் மற்றும் வளர்ச்சி

ஆங்கிலேயர் ஆட்சியில் நகர்ப்புற – மாற்றங்கள் | அலகு 7 | வரலாறு | எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் - மதராஸின் தோற்றம் மற்றும் வளர்ச்சி | 8th Social Science : History : Chapter 7 : Urban changes during the British period

   Posted On :  17.08.2023 06:26 am

எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : அலகு 7 : ஆங்கிலேயர் ஆட்சியில் நகர்ப்புற – மாற்றங்கள்

மதராஸின் தோற்றம் மற்றும் வளர்ச்சி

மதராஸ்நகரத்தின்தொடக்கம் இந்தியாவில் பிரிட்டிஷ் வணிக நிறுவனத்திற்கு முன்பிருந்தே உள்ளது. ஆங்கில கிழக்கிந்திய வணிகக்குழு கி.பி.(பொ.ஆ.)1600இல் தொடங்கப்பட்டது.

மதராஸின் தோற்றம் மற்றும் வளர்ச்சி

மதராஸ்நகரத்தின்தொடக்கம் இந்தியாவில் பிரிட்டிஷ் வணிக நிறுவனத்திற்கு முன்பிருந்தே உள்ளது. ஆங்கில கிழக்கிந்திய வணிகக்குழு கி.பி.(பொ.ஆ.)1600இல் தொடங்கப்பட்டது. பன்னிரெண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் மேற்கு கடற்கரையில் சூரத்தில் ஒரு தொழிற்சாலை அமைக்கப்பட்டது. பின்னர் ஆங்கில வணிகர்களின் ஜவுளி வர்த்தகத்தேடல் கிழக்கு கடற்கரையிலும் துறைமுகத்தைக் பெற வழிவகுத்தது.


ஆங்கிலேயர்கள் சில முயற்சிகளுக்குப் பிறகு மசூலிப்பட்டினத்தில் ஒரு தொழிற்சாலையைக் கட்டும் உரிமையைப் பெற்றனர். இது பருவக்காற்று பாதிப்பிலிருந்து நன்கு பாதுகாக்கப்பட்டது. அதனால் பின்னர் மசூலிப்பட்டினம் பஞ்சத்தின் பிடியில் சிக்கியது. பாதுகாப்பின் ஒவ்வொரு உத்தரவாதமிருந்தும் மத்தியிலும், ஆங்கில வர்த்தகம் அவ்விடத்தில் செழிக்கவில்லை

பின்னர் ஆங்கில வணிகர்கள் புதிய தளத்தைத் தேடினர். மசூலிப்பட்டின கழக உறுப்பினர் மற்றும் ஆர்மகான் தொழிற்சாலையின் தலைவரானபிரான்சிஸ்டே 1637ஆம்ஆண்டு ஒருபுதியகுடியேற்றத்திற்கான தளத்தை தேர்ந்தெடுக்கும் நோக்கில் ஒரு ஆய்வு பயணத்தை மேற்கொண்டார். இறுதியில் மதராசப்பட்டினத்தைத் தேர்ந்தெடுப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. பிரான்சிஸ் டே அந்த இடத்தை ஆய்வு செய்து, அது தொழிற்சாலை அமைப்பிற்கு ஏற்ற இடம் என்பதைக் கண்டறிந்தார்.

சந்திரகிரி (திருப்பதிக்கு மேற்கே 12 கி.மீ) அரசரின் பிரதிநிதியான தமர்லா வெங்கடபதி அவர்களால் அதிகாரபூர்வமான மானியமாக நிலம் வழங்கப்பட்டது. கூவம் நதிக்கும் எழும்பூருக்கும் இடையில் ஒரு சிறுபகுதி நிலத்தைத் தமர்லா பிரிட்டிஷாருக்கு வழங்கினார். ஒப்பந்த பத்திரம் ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியின் பிரான்சிஸ் டே அவர்களால் 1639ஆம் ஆண்டில் கையெழுத்திடப்பட்டபோது அவருடன் மொழிபெயர்ப்பாளரான பெரி திம்மப்பா மற்றும் உயர் அலுவலர் ஆண்ட்ரு கோகன்

(மசூலிப்பட்டினம் தொழிற்சாலையின் தலைவர்) உடனிருந்தனர். பிரான்சிஸ் டே மற்றும் ஆண்ட்ரு கோகன் ஆகியோருக்கு வணிகதளத்துடன் கூடிய தொழிற்சாலைக்கும் மதராசப்பட்டினத்தில் ஒரு கோட்டையை அமைப்பதற்கும் 1639ஆம் ஆண்டில் அனுமதி வழங்கப்பட்டது. இக்கோட்டை குடியிருப்பு பின்னர் புனித ஜார்ஜ் குடியிருப்பு எனப் பெயர் பெற்றது. இது வெள்ளை நகரம் எனவும் குறிப்பிடப்படுகிறது. இதன் அருகாமையில் உள்ள கிராமங்களில் மக்கள் வசித்த பகுதி கருப்பு நகரம் எனவும் அழைக்கப்பட்டது. மதராஸ் வெள்ளை நகரம் மற்றும் கருப்பு நகரம் எனவும் சேர்த்து அழைக்கப்பட்டது.


 

மதராசபட்டினம்

தமர்லா வெங்கடபதி ஆங்கிலேயருக்கு மதராசப்பட்டனத்தை மானியமாக வழங்கினார். இவர் சந்திரகிரியின் அரசரான வெங்கடபதி ராயலுவின் கட்டுப்பாட்டில் இருந்தார். வெங்கடபதியைத் தொடர்ந்து 1642இல் ஸ்ரீரங்கராயலு பதவிக்கு வந்தார். அவர் ஆங்கிலேயருக்கு 1645இல் ஸ்ரீரங்கராயப்பட்டினம் எனும் புதிய மானியத்தை வழங்கினார். வெங்கடபதி அவரது தந்தை சென்னப்ப நாயக்கர் பெயரால் ஆங்கிலேயர்களின் புதிய கோட்டை மற்றும் குடியேற்றங்கள் சென்னப்பட்டினம் என்று அழைக்கப்பட வேண்டும் என விரும்பினார். ஆனால் ஆங்கிலேயர் இரண்டு ஐக்கிய நகரங்களையும் மதராசப்பட்டினம் என்று அழைக்க விரும்பினார்கள்.

 

சென்னை உருவாதல்

இரண்டு ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி வணிகர்கள் வருகை புரியும் வரை கிராமங்களின் தொகுப்பாகவும் பனைமரங்கள் மற்றும் நெல் வயல்களுக்கிடையேயும் சென்னை அமைந்திருந்தது. சந்திரகிரியின் ராஜா மஹால் அரண்மனையால் கிழக்கிந்திய கம்பெனியை சேர்ந்த சர் பிரான்சிஸ் டேவிற்கு 1639இல் தொழிற்சாலை கட்டுவதற்காக நிலம் மானியமாக வழங்கப்பட்டு, அது பின்னர் மதராஸ் என பெயரிடப்பட்டது. புனித ஜார்ஜின் தினமான ஏப்ரல் 23, 1640 அன்று இதன் முதல் தொழிற்சாலை கட்டிமுடிக்கப்பட்டு அதற்கு

கோட்டைக்குள் கடல் நுழைவாயில் வழியாக நுழைந்தால் முதலில் காணப்படும் கட்டடம் தமிழக அரசின் இருக்கையாகும். இந்த சுவராசியமான கட்டடம் 1694 மற்றும் 1732க்கு இடையில் கட்டப்பட்டதோடு இது இந்தியாவில் ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட மிகப் பழமையான கட்டுமானங்களில் ஒன்று என கூறப்படுகிறது.

புனித ஜார்ஜ் கோட்டை என்று பெயரிடப்பட்டது. புனித ஜார்ஜ் கோட்டையை கட்டப்பட்டதற்கு டே மற்றும் கோகன் ஆகிய இருவரும் கூட்டாக பொறுப்பாவார்கள். இது 1774 வரை கிழக்கிந்திய கம்பெனியின் முதன்மை குடியிருப்பாக இருந்தது.

மதராஸ் மாகாணம் ஒரு நிர்வாக துணைப்பிரிவாகும். இது மெட்ராஸ் மாகாணம் என்று குறிப்பிடப்படுகிறது. சென்னை மாகாணம் என்பது பிரிட்டிஷ் ஆட்சிகாலத்தில் இந்தியாவின் தெற்குப் பகுதியில் பெரிய நிலப்பகுதிகளை உள்ளடக்கி தற்போதைய தமிழ்நாடு, லட்சத்தீவு, வடக்கு கேரளா, ராயலசீமா, கடலோர ஆந்திரா, கர்நாடக மாவட்டங்கள் மற்றும் தெற்கு ஒரிசாவின் பல்வேறு மாவட்டங்களைக் கொண்டிருந்தது.

கல்கத்தாவில் உள்ள டல்ஹௌசி சதுக்கம் மற்றும் மதராஸில் உள்ள புனித ஜார்ஜ் கோட்டை ஆகியவை மத்திய வணிகப் பகுதிக்கு அருகில் இருந்தன. மேலும் பிரம்மாண்டமான கட்டடங்களைக் கொண்டிருந்தன. அவை பிரிட்டிஷ் வகையிலான ரோமானிய பாணிகளில் அமைந்திருந்தன.

1947ஆம் ஆண்டு சுதந்திரத்திற்குப் பிறகு மதராஸ் மாகாணமானது மதராஸ் மாநிலமாக மாறியது மற்றும் முந்தைய மாகாணத்தின் ஒரு பகுதியாக இருந்த பிற பகுதிகளும் 1956ஆம் ஆண்டு மாநில மறுசீரமைப்புச் சட்டத்தின் கீழ் ஆந்திரா, கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களாக அமைக்கப்பட்டன. பின்னர் 1969இல் மதராஸ் மாநிலம் தமிழ்நாடு என மறுபெயரிடப்பட்டது. ஜூலை 17, 1996இல் மதராஸ் அதிகாரப்பூர்வமாக சென்னை என மறுபெயரிடப்பட்டது.

Tags : Urban changes during the British period | Chapter 7 | History | 8th Social Science ஆங்கிலேயர் ஆட்சியில் நகர்ப்புற – மாற்றங்கள் | அலகு 7 | வரலாறு | எட்டாம் வகுப்பு சமூக அறிவியல்.
8th Social Science : History : Chapter 7 : Urban changes during the British period : Origin and Growth of Madras Urban changes during the British period | Chapter 7 | History | 8th Social Science in Tamil : 8th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : அலகு 7 : ஆங்கிலேயர் ஆட்சியில் நகர்ப்புற – மாற்றங்கள் : மதராஸின் தோற்றம் மற்றும் வளர்ச்சி - ஆங்கிலேயர் ஆட்சியில் நகர்ப்புற – மாற்றங்கள் | அலகு 7 | வரலாறு | எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் : 8 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : அலகு 7 : ஆங்கிலேயர் ஆட்சியில் நகர்ப்புற – மாற்றங்கள்