தொடரியல், எடுத்துக்காட்டு நிரல் - C++: சரங்களின் அணி | 11th Computer Science : Chapter 12 : Arrays and Structures
சரங்களின் அணி
சரங்களின் அணி என்பது ஒரு இரு பரிமாண குறியுரு அணியாகும். அணி வரையறுப்பில் உள்ள முதல் சுட்டெண் (வரிசை) சரங்களின் எண்ணிக்கையைக் குறிக்கும். இரண்டாவது சுட்டெண் (நெடுவரிசை) சரங்களின் உச்ச அளவு நீளத்தைக் குறிக்கும். பொதுவாக, சரங்களின் அணியை அறிவிக்கும் போதே ஒவ்வொரு சரத்தின் இறுதியிலும் வெற்றுக் குறியுருவை இணைப்பதற்கு இடமளிக்கும் வகையில் அறிவிக்கப்படல் வேண்டும். எடுத்துக்காட்டாக, எடுத்துக்காட்டாக கீழே உள்ள இரு பரிமாண அணியை அறிவித்தலை காண்போம்.
char Name[6][10];
மேற்கண்ட எடுத்துக்காட்டில் இரு பரிமாண அணியில் இரண்டு சுட்டுகள் உள்ளது. அவை வரிசையின் அளவையும் மற்றும் நெடுவரிசையின் அளவையும் குறிக்கின்றது. அதாவது 6 என்பது வரிசைகளின் எண்ணிக்கையும் மற்றும் 10 என்பது நெடுவரிசைகளின் எண்ணிக்கையும் குறிக்கும்.
தொடக்க மதிப்பிருத்துதல்
எடுத்துக்காட்டாக,
char Name[6][10] = {"Mr. Bean", "Mr.Bush", "N icole", "Kidman", "Arnold", "Jodie"};
மேற்கண்ட எடுத்துக்காட்டில் இரு பரிமாண அணி 6 சரங்களுடன் தொடக்க மதிப்பிருத்தப்பட்டுள்ளது. இதில் ஒவ்வொரு சரத்தின் உச்ச குறியுறு அளவின் மதிப்பு 9 ஆகும்.
இரு பரிமாண அணியின் நினைவக ஒதுக்கீடு மற்றும் கொடுக்கப்பட்ட அனைத்து சரங்களும் தொடர்ச்சியான இடங்களில் சேமிக்கப்பட்டிருப்பதை கீழே காணலாம்.
இரு பரிமாண குறியுரு அணியை பயன்படுத்தி சரங்களின் அணியை சேமித்தல்
#include<iostream>
using namespace std;
int main( )
{
// initialize 2d array
char colour [4][10]={"Blue","Red","Orange", "yellow"};
// printing strings stored in 2d array
for (int i=0; i <4; i++)
cout << colour [i] << "\n";
}
Blue
Red
Orange
Yellow