கட்டுருக்களுக்கு மதிப்பிருத்துதல் (Structure Assignments):
ஒவ்வொரு உறுப்பிற்கும் தனித்தனியாக மதிப்புகளை இருத்துவதற்கு பதிலாக கட்டுருவின் உறுப்புகளுக்கு நேரடியாக மதிப்பிருத்தலாம்.
எடுத்துக்காட்டாக மகேஷ் மற்றும் பிரவிண் இருவரும் ஒரே வயது, உயரம் மற்றும் எடை உடையவர்களாக இருந்தால் மகேஷின் மதிப்புக்கள் முழுவதையும் பிரவீனுக்கு நகலெடுக்க முடியும்.
இரண்டு கட்டுரு மாறிகள் (அ) பொருள்கள் ஒரே வகையாக இருந்தால் மட்டுமே கட்டுரு மதிப்பிருத்துதலை செய்ய இயலும்.
struct Student
{
int age;
float height, weight;
}mahesh;
மகேஷின் வயது, உயரம் மற்றும் எடைகள் முறையே 17, 164.5 மற்றும் 52.5 ஆகும்.
கீழ்காணும் கூற்று அதற்கான மதிப்புகளை இருத்தும்.
mahesh = {17, 164.5, 52.5};
praveen =mahesh;
மேற்கண்ட கூற்றானது praveen என்ற பொருளின் தரவு உறுப்புகளுக்கும் அதே வயது, உயரம் மற்றும் எடை மதிப்புகளை இருத்தும்.
எடுத்துக்காட்டுகள்:
பின்வரும் c++ நிரல் மாணவர்களின் தகவல்களை உள்ளீடாக விசைப்பலகையின் மூலம் பெற்று மற்றும் அதைத் திரையில் காட்டுகிறது.
#include <iostream>
using namespace std;
struct Student
{
int age;
float height, weight;
} mahesh; void main( )
{
cout<< “ Enter the age:”<<endl;
cin>>mahesh.age;
cout<< “Enter the height:”<<endl;
cin>>mahesh.height;
cout<< “Enter the weight:”<<endl;
cin>>mahesh.weight;
cout<< “The values entered for Age, height and weight are”<<endl;
cout<<mahesh.age<< “\t”<<mahesh.height<< “\t”<<Mahesh. weight;
}
வெளியீடு:
Enter the age:
18
Enter the height:
160.5
Enter the weight:
46.5
The values entered for Age, height and weight are
18 160.5 46.5