கட்டுருக்களை அறிவித்தல்
மற்றும் வரையறுத்தல்
struct என்பது C++ மொழியின் சிறப்பு சொல். இது ஒரு கட்டுருவை அறிவிக்க பயன்படுகிறது. ஒரு கட்டுருவை உருவாக்குவதற்கான தொடரியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
struct structure_name {
data type member_namel;
data type member_name2;
} reference_name;
கட்டுரு வரையறுப்புடன் அறிவிக்கப்பட்டுள்ள பொருள்கள் உலகலாவிய (gopal objects) } பொருள்கள் என்று அழைக்கப்படும்.
கட்டுருவில் உள்ள அனைத்து மாறிகளும் (members) தானமைவாக public அனுகியல்பை சார்ந்துள்ளன.
கட்டுரு தரவினத்தை அறிவிக்கும் போதே அதில் நேரடியாக மாறிகளை உருவாக்குதல் என்பது விருப்ப தேர்வு ஆகும்.
எ-கா:
struct Student
{
long rollno;
int age;
float weight;
} ;
மேற்கண்ட கட்டுரு அறிவிப்பில் rollno, age, weight மூன்று மாறிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கட்டுருக்களில் அறிவிக்கப்படும் இந்த மாறிகள் உறுப்பினர்கள் (Members) என்று அழைக்கப்படுகின்றது. student என்ற கட்டுரு தரவினத்தை பயன்படுத்துவதற்கு அதில் மாறிகளை அறிவித்தல் வேண்டும். student என்ற கட்டுரு தரவினத்தில் மாறிகளை அறிவித்தலும் அதற்கான நினைவக ஒதுக்கீடும் படம் 12.5 ல் காட்டப்பட்டுள்ளது.
struct student balu; // மாணவர் என்ற கட்டுரு தரவினத்தில் மாறியை அறிவித்தல்
student என்ற தரவினத்தில் balu என்ற மாறியானது அறிவிக்கப்பட்டுள்ளது. சாதாரண மாறிகளை கட்டுரு தரவின மாறிகளும் தங்களுக்குரிய நினைவக ஒதுக்கீட்டை தாங்களே மேற்கொள்கின்றன. இதில் ஒன்றுக்கும் மேற்பட்ட மாறிகளை ஒரே கட்டுரு வகையில் வரையறுக்க முடியும்.
உதராணமாக Balu மற்றும் Frank - என்ற இரண்டு மாறிகளை கட்டுரு தரவு வகையின் பொருள்களாக கீழ் வருமாறு அறிவிக்க முடியும்.
struct Student
{
longrollno;
int age;
float weight;
}balu, frank;