கட்டுரு உறுப்புகளை அணுகுதல்
student என்ற கட்டுரு தரவினத்தில் இரண்டு பொருள்களை அறிவித்தவுடன் அவறிற்கான தரவு உறுப்புகளை நேரடியாக அணுகலாம். பொருளானது தரவு உறுப்புகளை அணுகுவதற்கு, பொருளின் பெயர் மற்றும் இரண்டு பொருள்களை அறிவித்தவுடன் உறுப்பினரின் பெயருக்கு இடையில் ஒரு புள்ளி (.) பயன்படுத்தப்படுகிறது. எடுத்துக்காட்டாக மாணவர் கட்டுரு அதன் உறுப்புகளை பின்வருமாறு அணுகலாம்:
balu.rollno
balu.age
balu.weight
frank.rollno
frank.age
frank.weight
தரவு உறுப்பானது கட்டுறு வகையாக இருந்தால் → உறுப்புகளை அணுகப் பயன்படுகிறது. name என்பது student கட்டுருவின் குறியுரு சுட்டு (Char *name) என அறிவிக்கப்பட்டால் student name என்பதன் மூலம் அதை அணுக முடியும்.
பெயரற்ற கட்டுருக்கள்
பெயர் (அ) குறிப்பு சொல் இல்லாத ஒரு கட்டுரு பெயரற்ற கட்டுரு எனப்படும்
struct
{
long rollno;
int age;
float weight;
} student;
student என்பது மேலே உள்ள கட்டுருவிற்கு குறிப்பு பெயராக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அதன் உறுப்புகளை student.rollno, student. age மற்றும் student.weight என அணுக முடியும்.