Home | 11 ஆம் வகுப்பு | 11வது கணினி அறிவியல் | C++ தருவிக்கப்பட்ட இனக்குழு மற்றும் அடிப்படை இனக்குழு
   Posted On :  21.09.2022 07:57 pm

11வது கணினி அறிவியல் : அலகு 16 : மரபுரிமம்

C++ தருவிக்கப்பட்ட இனக்குழு மற்றும் அடிப்படை இனக்குழு

தருவிக்கப்பட்ட இனக்குழுவை வரையறுக்கும் போது, தருவிக்கப்பட்ட இனக்குழு அது எந்த இனக்குழுவிலிருந்து தருவிக்கப்படுகிறதோ, அதனைக் குறிப்பிட வேண்டும்.

தருவிக்கப்பட்ட இனக்குழு மற்றும் அடிப்படை இனக்குழு


தருவிக்கப்பட்ட இனக்குழுவை வரையறுக்கும் போது, தருவிக்கப்பட்ட இனக்குழு அது எந்த இனக்குழுவிலிருந்து தருவிக்கப்படுகிறதோ, அதனைக் குறிப்பிட வேண்டும்.

தருவிக்கப்பட்ட இனக்குழுவை வரையறுக்கும் போது கீழ்காணும் குறிப்புகளைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

அ) Class என்னும் சிறப்புச் சொல் இடம்பெற வேண்டும்.

ஆ) Class என்ற சொல்லை அடுத்து, தருவிக்கப்படும் இனக்குழுவின் பெயர் இடம் பெற வேண்டும்

இ) ஒற்றை முக்காற்புள்ளி (:) இடம் பெற வேண்டும்.

ஈ) Private, public அல்ல து protected ஆகியவற்றுள் எத்தகைய அணுகியல்புடன் (காண்புநிலை பாங்கு) தருவிக்கப்படுகிறது என குறிப்பிட வேண்டும். காண்புநிலை பாங்கு எதுவும் குறிப்பிடப்படவில்லையெனில், தான்மைவாக காண்புநிலை private எனக் கொள்ளப்படும்.

உ) ஒன்றுக்கு மேற்பட்ட அடிப்படை இனக்குழுக்கள் (தாய் இனக்குழுக்கள்) இருப்பின், அவற்றை காற்புள்ளியிட்டு பிரிக்க வேண்டும்.

கட்டளையமைப்பு

class தருவிக்கப்பட்ட இனக்குழு பெயர்: அணுகியல்பு வரையறுப்பி அடிப்படை இனக்குழுவின் _பெயர்

{

// தருவிக்கப்பட்ட இனக்குழுவின் உறுப்புகள்

};



11th Computer Science : Chapter 16 : Inheritance : C++ Derived Class and Base class in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11வது கணினி அறிவியல் : அலகு 16 : மரபுரிமம் : C++ தருவிக்கப்பட்ட இனக்குழு மற்றும் அடிப்படை இனக்குழு - : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11வது கணினி அறிவியல் : அலகு 16 : மரபுரிமம்