மரபுரிமம் | கணினி அறிவியல் - சரியான விடையை தேர்வு செய்யவும் | 11th Computer Science : Chapter 16 : Inheritance
C++ பொருள் நோக்கு நிரலாக்க மொழி
மரபுரிமம்
மதிப்பீடு
பகுதி – அ
சரியான விடையை தேர்வு செய்யவும்.
1. பின்வருவனவற்றுள் எது ஏற்கெனவே உள்ள
இனக்குழுவின் அடிப்படையில் புதிய இனக்குழுவை தருவிக்கும் முறையாகும்?
அ. பல்லுருவாக்கம்
ஆ. மரபுரிமம்
இ. உறை பொதியாக்கம்
ஈ. மீ
- இனக்குழு
[விடை: ஆ. மரபுரிமம்]
2. பின்வருவனவற்றுள் எது
school என்ற அடிப்படை இனக்குழுவிலிருந்து
‘student' என்ற இனக்குழுவை தருவிக்கும்?
அ. school : student
ஆ. class student : public
school
இ. student : public school
ஈ. class school : public
student
[விடை: ஆ. class student
: public school]
3. மாறக்கூடிய தன்மையை பிரதிபலிக்கும்
மரபுரிம வகை
அ. ஒருவழி
மரபுரிமம்
ஆ. பலவழி மரபுரிமம்
இ. பலநிலை
மரபுரிமம்
ஈ. கலப்பு
மரபுரிமம்
[விடை: இ. பலநிலை மரபுரிமம்]
4. அடிப்படை இனக்குழுவின் பண்புகளை
தருவிக்கப்பட்ட இனக்குழுவில் மட்டும் கிடைக்கப் பெற்று,
ஆனால் தருவிக்கப்பட்ட இனக்குழுவை அடிப்படையாகக் கொண்டு
தருவிக்கப்படும் இனக்குழுவில் கிடைக்கப்படாமல் இருக்க எந்த காண்புநிலை பாங்கினைப் பயன்படுத்த
வேண்டும்?
அ. private
ஆ. public
இ. protected
ஈ. இவையனைத்தும்
[விடை: இ. protected]
5. மரபுரிமம் செயல்முறையில் புதிய இனக்குழு
எதிலிருந்து உருவாக்கப்படுகிறது?
அ. அடிப்படை
இனக்குழு
ஆ. அருவமாக்கம்
இ. தருவிக்கப்பட்ட
இனக்குழு
ஈ. செயற்கூறு
[விடை: அ. அடிப்படை இனக்குழு]
6. தருவிக்கப்பட்ட ஓர் இனக்குழுவை அடிப்படையாக
கொண்டு இன்னொரு தருவிக்கப்பட்ட இனக்குழுவை உருவாக்குவது
அ. பலவழி மரபுரிமம்
ஆ. பலநிலை
மரபுரிமம்
இ. ஒருவழி
மரபுரிமம்
ஈ. இரட்டை
மரபுரிமம்
[விடை: ஆ. பலநிலை மரபுரிமம்]
7. பின்வருவனவற்றுள் எது மரபுரிமம்
பெற்ற வரிசையில் இயக்கப்படுகிறது?
அ. அழிப்பி
ஆ. உறுப்பு
செயற்கூறு
இ. ஆக்கி
ஈ. பொருள்
[விடை: இ. ஆக்கி]
8. பின்வருவனவற்றுள் எது மரபுரிமம்
சார்ந்த சரியான கூற்று?
அ. private அணுகியல்பு
கொண்ட தருவிக்கப்பட்ட இனக்குழு
அடிப்படை இனக்குழுவின் private உறுப்புகளை மரபுவழி பெறுகிறது.
ஆ. private அணுகியல்பு
கொண்ட தருவிக்கப்பட்ட இனக்குழு
அடிப்படை இனக்குழுவின் private உறுப்புகளை மரபுவழி பெறாது.
இ. அடிப்படை
இனக்குழுவின் public உறுப்புகள், தருவிக்கப்பட்ட இனக்குழுவில் மரபுவழி
பெறப்படும். ஆனால் அணுக முடியாது
ஈ. அடிப்படை
இனக்குழுவின் protected உறுப்புகள்,
இனக்குழுவிற்கு வெளியே மரபுவழி பெறப்படும்.
ஆனால் அணுக முடியாது.
[விடை: ஆ. private அணுகியல்பு கொண்ட தருவிக்கப்பட்ட இனக்குழு
அடிப்படை இனக்குழுவின் private உறுப்புகளை மரபுவழி பெறாது]
9. பின்வரும் இனக்குழு அறிவிப்பின்
அடிப்படையில், கீழ்காணும்
வினாக்களுக்கு விடையளி. (9.1 லிருந்து
9.5 வரை)
class vehicle
{ int wheels;
public:
void input_data(float,float);
void output_data();
protected:
int passenger;
};
class heavy_vehicle : protected vehicle {
int diesel_petrol;
protected:
int load;
protected:
int load;
public:
voidread_data(float,float)
voidwrite_data(); };
class bus: private heavy_vehicle {
charTicket[20];
public:
voidfetch_data(char);
voiddisplay_data(); };
};
9.1 heavy vehicle என்னும்
இனக்குழுவின் அடிப்படை இனக்குழுவை
குறிப்பிடுக.
அ. Bus
ஆ. heavy-vehicle
இ. vehicle
ஈ. (அ)
மற்றும் (இ)
[விடை: இ. vehicle]
9.2 display data ( ) என்னும்
செயற்கூறு மூலம் அணுக முடிகிற
தரவு உறுப்புகளை குறிப்பிடுக.
அ. passenger
ஆ. load
இ. Ticket
ஈ. all of these
[விடை: இ. Ticket]
9.3 bus இனக்குழுவின்
பொருள், அணுக கூடிய
தரவு உறுப்பு செயற்கூறுகளை
குறிப்பிடுக.
அ. input_data()
ஆ. read_data(),output
data()write_data()
இ. fetch_datal)
ஈ. all of these display_data()
[விடை: இ. fetch_data()]
9.4 Bus இனக்குழுவில்
public காண்புநிலையுடன் வரையறுக்கப்பட்ட உறுப்பு செயற்கூறு
யாது?
அ. input_data()
ஆ. read_data(),output
data()write_data()
இ. fetch_data()
ஈ. all of these display_data()
[விடை: இ. fetch_data()]
9.5 heavy-vehicle இனக்குழுவின்
பொருள்களால் அணுகக்கூடிய
உறுப்பு செயற்கூறு யாது?
அ. void input data (int, int)
ஆ. void output data ( )
இ. void read data (int, int)
ஈ. both (அ)
மற்றும் (ஆ)
[விடை: அ. void input
data (int, int)]
10. class x
{ int a;
public :
X()
};
class y
{ xx1;
public :
y(){}
};
class z : public y,x
{
int b;
public:
z){}
}z1;
Z1 என்ற பொருள் ஆக்கிகளை எந்த வரிசை
முறையில் அழைக்கும்?
அ. z,y,x,x
ஆ. x,y,z,x
இ. y,x,x,z
ஈ. x,y,z
[விடை: ஈ. x,y,z]