கணினி அறிவியல் - மரபுரிமத்தின் தேவை | 11th Computer Science : Chapter 16 : Inheritance
மரபுரிமத்தின் தேவை
பொருள் நோக்கு நிரலாக்கத்தின் முக்கிய பண்புக்கூறான மரபுரிமம், நிரல் குறிமுறையின் மறு பயனாக்கத்திற்கு வழி செய்கிறது. மரபுரிமம் என்பது ஏற்கனவே இருக்கும் இனக்குழுக்களின் அடிப்படையில் (அடிப்படை இனக்குழு) புதிய இனக்குழுக்களை தருவிக்கும் (தருவிக்கப்பட்ட இனக்குழுக்கள்) செயல்முறை ஆகும். மரபுரிமம் ஒரு இனக்குழுவிலிருந்து மற்றொரு இனக்குழுவிற்கு அனைத்து குறிமுறைகளையும் (Private என வகைப்படுத்தப்பட்ட தரவு உறுப்புகள், உறுப்பு செயற்கூறுகள் தவிர்த்து) தருவித்துக் கொள்ள அனுமதிக்கிறது. தருவிக்கப்பட வேண்டிய இனக்குழுவை அடிப்படை இனக்குழு அல்லது தாய் இனக்குழு (parent class) என்றும் ஒரு இனக்குழுவிலிருந்து மரபுரிமையாக பெறப்பட்ட இனக்குழுவை தருவிக்கப்பட்ட இனக்குழு அல்லது (சேய் இனக்குழு) என்று கூறுகிறோம். தருவிக்கப்பட்ட இனக்குழுக்கள் சக்திமிக்கவை. இது கூடுதல் பண்புக்கூறுகளையும், செயல்முறைகளையும் பெற்றுக்கொண்டு செயல்திறனை அதிகரிக்க செய்கிறது.
மரபுரிமத்தின் நன்மைகளாவன:
• இது நடைமுறை வாழ்வில் உள்ள உறவு நிலையை சிறப்பாக எடுத்துக்காட்ட உதவுகிறது.
• நிரல் குறிமுறையின் மறுபயனாக்கத்தை சாத்தியமாக்கி உள்ளது.
• இது மாற்றங்களை ஆதரிக்கும்.