அலகு 4 | புவியியல் | எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் - நகரமயமாதலுக்கான காரணங்கள் | 8th Social Science : Geography : Chapter 4 : Migration and Urbanisation
நகரமயமாதல்
நகரங்கள்
மற்றும் மாநகரங்களில் வாழும் மக்கள் தொகையின் விகிதாச்சாரம் அதிகரிப்பதை நகரமயமாதல்
எனப்படுகிறது
நகரமயமாதலுக்கான காரணங்கள்
நகரமயமாக்கம்
மூன்று காரணிகளால் நிர்ணயிக்கப்படுகின்றன. அவை :
1. இயற்கையான
மக்கள் தொகை வளர்ச்சி
2. ஊரகத்திலிருந்து
நகர்புறங்களுக்கு இடம் பெயர்தல்.
3. ஊரகப்
பகுதிகளை நகர்புறங்களாக மறுசீரமைப்பு செய்தல்.
தற்போதைய
நகரமயமாக்கல் மக்கள் தொகையில் மாற்றங்கள், நிலப்பரப்பு, பொருளாதாரச் செயல்முறைகள் மற்றும்
புவியியல் பகுதிகளின் பண்புகள் ஆகியவைகளும் நகரமயமாக்கலுக்கு காரணமாக உள்ளன.
உங்களுக்குத் தெரியுமா
2007ஆம் ஆண்டு வரலாற்றில் முதல்முறையாக உலகளாவிய நகர்ப்புற மக்கள்தொகை
ஊரக மக்கள் தொகையை விட அதிகமானது. அதன் பிறகு நகர்புற மக்களின் சதவீதம் தொடர்ந்து அதிகரித்த
வண்ணம் உள்ளது. (உலக நகரமயமாக்கல் விளக்கக் குறிப்பு, 2014)