இடம் பெயர்தல் மற்றும் நகரமயமாதல் | அலகு 4 | புவியியல் | எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் - மீள்பார்வை, கலைச்சொற்கள் | 8th Social Science : Geography : Chapter 4 : Migration and Urbanisation
மீள்பார்வை
•கிராமப்புறத்திலிருந்து
நகர்ப்புறத்திற்கு இடம் பெயர்தல் அதிக அளவில் காணப்படும் இடம் பெயர்வாகும்.
•இயற்கைக்
காரணிகள், பொருளாதாரக் காரணிகள், சமூக-கலாச்சாரம், மக்கள் தொகை மற்றும் அரசியல் காரணங்களினால்
இடம்பெயர்வு நடைபெறுகிறது.
•கிராமங்களிலிருந்து
நகர்ப்புறங்களுக்கு இடம்பெயர்தல் மக்கள் தொகையின் இயற்கையான வளர்ச்சி, கிராமப்புறங்களை
நகர்ப்புறமாக மறுசீரமைத்தல் போன்றவற்றால் நகரமயமாதல் நடைபெறுகிறது.
•அதிக
மக்கள் நெருக்கம், உள் கட்டமைப்பு வசதி பற்றாக்குறை, தொழில் வளர்ச்சி மற்றும் வாகனங்களின்
எண்ணிக்கை அதிகரிப்பு போன்றவை நகரமயமாதலின் முக்கிய பிரச்சனைகளாகும்.
மேற்கோள்
நூல்கள்
1.
Maurya, S.D. - 2012, Human Geography, Allahabad, Prayag Pustak Bhawan.
2.
Husain, M. - 2012, Human Geography, Jaipur, Rawat Publications
3.
United Nations – 2014, World Urbanisation Prospects 2014 Revision, Highlights,
Department of Economic & Social Affairs, Population Division.
4.
United Nations - 2017, International Migration Report 2017, Highlights,
Department of Economic & Social Affairs.
5.
United Nations – 2018, World Urbanisation Prospects 2018 Revision, Key facts,
Department of Economic & Social Affairs, Population Division.
இணையச் செயல்பாடு
இடம் பெயர்தல் மற்றும் நகரமயமாதல்
இந்த
செயல்பாட்டின் மூலம் உலக நாடுகளின் இடம் பெயர்தல் தொடர்பான புள்ளி விவரங்களை அறியலாம்
படி-1
URL அல்லது QR குறியீட்டினைப் பயன்படுத்தி இச்செயல்பாட்டிற்கான இணையப்பக்கத்திற்கு
செல்க.
படி-2
இடது பக்க மெனுவில் சென்று எதாவது ஒரு நாட்டினை தேர்ந்தெடுக்கவும் (உதா. - இந்தியா).
படி-3
இந்தியாவின் இடம் பெயர்தலை அறிந்து கொள்ள இடது பக்க மெனுவில் உள்ள"
Timeline" ஐ நகர்த்தவும்.
https://migrationdataportal.org/data?i=stock_abs_&t=2017
* படங்கள் அடையாளத்திற்கு மட்டும்