குப்தர் - வரலாறு - முதலாம் சந்திரகுப்தரும், பேரரசு உருவாகுதலும் | 11th History : Chapter 7 : The Guptas
முதலாம் சந்திரகுப்தரும், பேரரசு உருவாகுதலும்
குப்த வம்சத்தின் முதல் அரசர் ஸ்ரீகுப்தர் (பொ.ஆ. 240–280). இவரைத் தொடர்ந்து இவரது புதல்வர் கடோத்கஜர் (பொ.ஆ. 280-319) ஆட்சிக்கு வந்தார். கல்வெட்டுகளில் ஸ்ரீகுப்தர், கடோத்கஜர் ஆகிய இருவரும் மகாராஜா என்று குறிக்கப்படுகிறார்கள். கடோத்கஜரின் புதல்வரான முதலாம் சந்திரகுப்தர் பொ.ஆ. 319 முதல் 335 வரை ஆட்சிபுரிந்தார். இவர் குப்தப் பேரரசின் முதல் பேரரசராகக் கருதப்படுகிறார். சந்திரகுப்தர் மகாராஜா - அதிராஜா என்ற பட்டத்தை ஏற்றார். மற்றவர்களின் ஆவணங்களிலிருந்து இவரது பேரரசர் நிலை நமக்குப் புலப்படுகிறது. இவரது ஆட்சிக் காலத்தின் கல்வெட்டோ, நாணயமோ நமக்குக் கிடைக்கவில்லை.