பின்னங்கள் | பருவம் 3 அலகு 6 | 5 ஆம் வகுப்பு கணக்கு - ஓரினப் பின்னங்களை ஒப்பிடுதல் | 5th Maths : Term 3 Unit 6 : Fractions
ஓரினப் பின்னங்களை ஒப்பிடுதல்.
ஓரினப் பின்னங்களை ஒப்பிடுவதற்கு கொடுக்கப்பட்டப் பின்னங்களின் தொகுதிகளைச் சரிபார்க்கவும்.
எடுத்துக்காட்டு 6.9
பின்வரும் படத்தில் நிழலிடப்பட்ட மற்றும் நிழலிடப்படாத பகுதிகளை ஒப்பிடவும்.
தீர்வு
ஒரு பட்டை 7 சம பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. அதாவது ஒவ்வொரு பகுதியும் எனக் குறிப்பிடுகிறது.
வண்ணமிடப்பட்டப் பகுதி
வண்ணமிடப்படாதப் பகுதி
வண்ணமிடப்பட்டப் பகுதி வண்ணமிடாத பகுதியை விடச் சிறியது.
இங்கு ஐ விட சிறியது எனக் காட்டுகிறது.
இதனை < என எழுதலாம்.
எடுத்துக்காட்டு 6.10
பின்வரும் படத்தில் வெவ்வேறு வண்ணமிடப்பட்டப் பகுதிகளை ஒப்பிடுக.
தீர்வு
இந்த பட்டையானது 5 சமபங்குகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. 5 இல் 2 பங்குகள் நீல நிறத்திலும் 1 பங்கு மஞ்சள் நிறத்திலும் வண்ணமிடப்பட்டுள்ளது.
நீல நிறத்தில் வண்ணமிடப்பட்டப் பங்குகளின் பின்னம் =
மஞ்சள் நிறத்தில் வண்ணமிடப்பட்டப் பங்கின் பின்னம் =
தொகுதிகளான 2 மற்றும் 1 ஐ ஒப்பிட்டுப் பார்க்கையில், 2 > 1 என அறிகிறோம்.
எனவே, >
ஓரின பின்னங்களில் பெரிய தொகுதியைக் கொண்ட பின்னமே பெரிய பின்னமாகும்.