Home | 5 ஆம் வகுப்பு | 5வது கணிதம் | பின்னங்களின் வகைகள்

பின்னங்கள் மற்றும் இடைக்கருத்து | பருவம் 2 அலகு 5 | 5 ஆம் வகுப்பு கணக்கு - பின்னங்களின் வகைகள் | 5th Maths : Term 3 Unit 6 : Fractions

   Posted On :  25.10.2023 02:57 am

5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 2 அலகு 5 : பின்னங்கள் மற்றும் இடைக்கருத்து

பின்னங்களின் வகைகள்

ஒரு பின்னத்தில், தொகுதியானது பகுதியை விடச் சிறியதாக இருந்தால் அது தகு பின்னம் எனப்படும். எடுத்துக்காட்டு: 3/5, 4/15, 9/21. ஒரு பின்னத்தில், தொகுதியானது பகுதியை விடப் பெரியதாக இருந்தால் அது தகா பின்னம் எனப்படும். எடுத்துக்காட்டு: 9/5, 11/3, 21/17

பின்னங்களின் வகைகள்:



படத்தில் நிழலிடப்பட்ட பகுதியை பின்னங்களில் எனக் குறிப்பிடலாம். இதில 3 என்ற  தொகுதியானது பகுதியை விடச் சிறியது அதாவது 3 < 8.

இம்மாதிரியானப் பின்னங்களைத் தகுபின்னங்கள் என்கிறோம்


தகு பின்னங்கள்: ஒரு பின்னத்தில், தொகுதியானது பகுதியை விடச் சிறியதாக இருந்தால் அது தகு பின்னம் எனப்படும்.

எடுத்துக்காட்டு:


தகா பின்னங்கள்: ஒரு பின்னத்தில், தொகுதியானது பகுதியை விடப் பெரியதாக இருந்தால் அது தகா பின்னம் எனப்படும்.

எடுத்துக்காட்டு:



கலப்பு பின்னம்:

கவிதாவிடம் 5 தோசைகள் இருந்தன. அந்த தோசைகளை அவள் தனக்கும் தன் 3 நண்பர்களுக்கும் சமமாகப் பங்கிட விரும்பினாள். ஒவ்வொருவருக்கும் ஒரு தோசை கிடைத்தது. மீதமுள்ள ஒரு தோசையை எப்படி சமமாகப் பங்கிடுவது என அவளுக்கு தெரியவில்லை.

எனவே, அவள் தன் ஆசிரியரின் உதவியைக் கேட்டாள் ஆசிரியர் மீதமுள்ள ஒரு தோசையை 4 சமப் பங்குகளாகப் பிரிக்குமாறு கூறினார். இதனால் ஒவ்வொருவருக்கும் 4 இல் 1 பங்கு கிடைக்கும் என்றார். பிறகு ஆசிரியர் ஒவ்வொருவருக்கும் 5 இல் எவ்வளவு கிடைத்திருக்கும் என விளக்கினார். அதாவது ஒவ்வொருவருக்கும் 1 மற்றும் தோசைகள் கிடைக்கும். எனவே, தோசைகள் கிடைக்கும்.


இதனை   கலப்பு பின்னம் என்கிறோம்.

ஒரு முழு எண்ணையும் ஒரு தகு பின்னத்தையும் கொண்ட ஒரு பின்னம் கலப்பு பின்னம் எனப்படும்.

மேலே குறிப்பிட்ட சூழலில் 1 என்பது முழு எண் மற்றும் என்பது தகு பின்னம் ஆகும்.


Tags : Fractions | Term 3 Chapter 6 | 5th Maths பின்னங்கள் மற்றும் இடைக்கருத்து | பருவம் 2 அலகு 5 | 5 ஆம் வகுப்பு கணக்கு.
5th Maths : Term 3 Unit 6 : Fractions : Types of fractions Fractions | Term 3 Chapter 6 | 5th Maths in Tamil : 5th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 2 அலகு 5 : பின்னங்கள் மற்றும் இடைக்கருத்து : பின்னங்களின் வகைகள் - பின்னங்கள் மற்றும் இடைக்கருத்து | பருவம் 2 அலகு 5 | 5 ஆம் வகுப்பு கணக்கு : 5 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
5 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 2 அலகு 5 : பின்னங்கள் மற்றும் இடைக்கருத்து