பின்னங்கள் | பருவம் 3 அலகு 6 | 5 ஆம் வகுப்பு கணக்கு - தசமங்களுக்கும் பின்னங்களுக்கும் உள்ள தொடர்பு | 5th Maths : Term 3 Unit 6 : Fractions
தசமங்களுக்கும் பின்னங்களுக்கும் உள்ள தொடர்பு
தசமங்களை அறிமுகப்படுத்துதல்
ஒரு செவ்வகத்தை எடுத்து அதனை 10 சம பங்குகளாகப் பிரிக்கவும்.
மேலே குறிப்பிட்டுள்ள செவ்வகத்தின் ஒவ்வொரு பங்கினையும் (பகுதியையும் எவ்வாறு குறிப்பிடுவோம்) அதாவது என எழுதுவோம்.
இதன் 1 பங்கை நிழலிடவும். இங்கு 10 பங்கில் 1 பங்கு நிழலிடப்பட்டுள்ளது. இதனை பின்னத்தில் எனக் குறிப்பிடலாம். இதனை மற்றொரு வழியில் 0.1 எனவும் எழுதலாம். 0.1 இல் 0 என்பது முழு எண் பகுதி 1 என்பது தசமப்பகுதி மற்றும் "." என்பது ஒன்றின் இடத்திலிருந்து தசம இடத்தினைப் பிரிக்கும் தசம புள்ளியாகும்.
தசம எண் 0.1 ஐ பூச்சியம் புள்ளி ஒன்று என வாசிக்கலாம்.
பின்னங்களைத் தசமங்களாகவும் தசமங்களைப் பின்னங்களாகவும் மாற்றுதல்
ஒரு பின்னத்தை தசமமாக மாற்ற பகுதியிலுள்ள பூச்சியங்களுக்கு தகுந்தாற்போல் தொகுதியின் இலக்கத்தின் வலதுபுறத்தில் தொடங்கி கணக்கிட்டு புள்ளி வைக்க வேண்டும்.
எடுத்துக்காட்டு 6.18
பின்வரும் பின்னங்களைத் தசமமாக மாற்றுக.
தீர்வு
தசமத்தை பின்னமாக மாற்றுதல்.
ஒரு தசம எண்ணை பின்னமாக மாற்ற தசம புள்ளியை நீக்கி அவ்வெண்ணை தொகுதியாகவும் தசம புள்ளிக்கு வலதுபுறம் உள்ள இலக்கத்தின் எண்ணிக்கைக்கு ஏற்ப பத்தின் மடங்கை பகுதியாகவும் எழுத வேண்டும்.
எடுத்துக்காட்டு 6.19
பின்வரும் தசமங்களைப் பின்னமாக மாற்றுக.
(i) 3.6
(ii) 20.7
(iii) 18.9
தீர்வு