சாலை பாதுகாப்பு விதிகள் மற்றும் நெறிமுறைகள் | அலகு 5 | குடிமையியல் | எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் - முடிவுரை, மீள்பார்வை, கலைச்சொற்கள் | 8th Social Science : Civics : Chapter 5 : Road Safety Rules and Regulations
முடிவுரை
சாலை
விபத்துக்கள் யூகிக்கக்கூடியவை அதனால் அவை நிகழாமல் தடுக்கக் கூடியவை ஆகும். எனவே ஒவ்வொருவரும்
சாலை பாதுகாப்பு விதிகள் மற்றும் குறியீடுகளைக் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். சீக்கிரமாக
புறப்படு! மெதுவாக செல்!! பாதுகாப்பாக சேர்ந்திடு!!!
மீள்பார்வை
•சாலை
பாதுகாப்பு என்பது சாலையில் பயணிக்கும் அனைவரின் பாதுகாப்பையும் பாதுகாப்பு வழங்குவதையும்
குறிக்கிறது.
•சாலை
விபத்துக்கள் விரும்பத்தகாத நிகழ்வுகள் ஆகும். உயிர் இழப்பினாலும் படுகாயத்தினாலும்
வாழ்வாதாரத்தையே இழக்க நேரிடும்.
•போக்குவரத்துக்
குறியீடுகள் போக்குவரத்தினை முறைபடுத்தவும், ஆபத்துக்களை எச்சரிக்கவும் சாலையை உபயோகப்படுத்துவோருக்கு
வழிகாட்டவும் ஆகும்.
• கட்டாயக்
குறியீடுகள், எச்சரிக்கை குறியீடுகள் மற்றும் தகவல் குறியீடுகள் என மூன்று வகையான போக்குவரத்துக்
குறியீடுகள் உள்ளன.
• சாலை
ஒழுங்குமுறை சம்பந்தமான விதிகள் 1989 ஜூலை 1 முதல் நடைமுறைக்கு வந்தது. சாலை போக்குவரத்து
மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் சாலை விபத்துக்களைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
• சாலை
பாதுகாப்பு அமைப்பு, விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகள் பற்றிய விழிப்புணர்வினை வலுப்படுத்த
சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தால் ஒவ்வொரு வருடமும் சாலை பாதுகாப்பு
வாரம் கடைபிடிக்கப்படுகின்றது.
மேற்கோள்
நூல்கள்
1.
The Motor Vehicles Act, 1988
2.
The Tamil Nadu Motor Vehicles Rules, 1989
3.
Ministry of Road Transport & Highways, Government of India
4. இருசக்கர
வாகன ஓட்டிகளுக்கான சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கையேடு , போக்குவரத்துத் துறை, தமிழ்நாடு
அரசு
இணையதள வளங்கள்
3.
www.tn.gov.in>tnmvr1989