சாலை பாதுகாப்பு விதிகள் மற்றும் நெறிமுறைகள் | அலகு 5 | குடிமையியல் | எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் - வினா விடை | 8th Social Science : Civics : Chapter 5 : Road Safety Rules and Regulations
மதிப்பீடு
I சரியான
விடையைத் தேர்ந்தெடுக்கவும்
1. சிவப்பு விளக்கு ஒளிரும் போது
அ) பாதை
தெளிவாக இருக்கும் போது நீங்கள் தொடர்ந்து செல்லல்லாம்
ஆ) நீங்கள்
வாகனத்தை நிறுத்தி பச்சைவிளக்கு ஒளிரும் வரை காத்திருக்க வேண்டும்
இ) உன்
நண்பனின் குறுந்தகவலுக்கு விரைவாக பதில் அனுப்பலாம்
ஈ) செல்லிடப்பேசியில்
உரையாடலாம்
[விடை : ஆ) நீங்கள் வாகனத்தை
நிறுத்தி பச்சைவிளக்கு ஒளிரும் வரை காத்திருக்க வேண்டும்.]
2 பாதசாரிகள் சாலையைக் கடக்குமிடம்
அ) எங்குவேண்டுமானாலும்
ஆ) சமிக்ஞைகளுக்கு
அருகில்
இ) வரிகோட்டு
பாதையில்
ஈ) இவற்றில்
எதுவுமில்லை
[விடை : இ) வரிகோட்டு பாதையில்]
3. சாலை பாதுகாப்பு வாரம் ஒவ்வொரு வருடமும்
கொண்டாடப்படும் மாதம்
அ) டிசம்பர்
ஆ) ஜனவரி
இ) மார்ச்
ஈ) மே
[விடை : ஆ) ஜனவரி]
4. அவசர காலத்தில், அவசர சிகிச்சை ஊர்தி சேவைக்காக
அழைக்க வேண்டிய எண்
அ)
108
ஆ)
100
இ)
106
ஈ)
101
[விடை : அ) 108]
5. சாலை விபத்துக்களுக்கான காரணங்கள் யாவை?
அ) அதிவேகம்
ஆ) குடிபோதையில்
ஓட்டுதல்
இ) ஓட்டுநர்கள்
கவனச்சிதறல்
ஈ) இவை
அனைத்தும்
[விடை : ஈ) இவை அனைத்தும்]
6. போக்குவரத்துக் குறியீடுகளின் முதல் வகை
அ) கட்டாய
குறியீடுகள்
ஆ) எச்சரிக்கை
குறியீடுகள்
இ) தகவல்
குறியீடுகள்
ஈ) இவற்றில்
எதுவுமில்லை
[விடை : அ) கட்டாய குறியீடுகள்]
7. சேது பாரதம் திட்டம் துவங்கப்பட்ட ஆண்டு
அ)
2014
ஆ)
2015
இ)
2016
ஈ)
2017
[விடை : இ) 2016]
8. ABS என்பதனை விரிவாக்கம் செய்க.
அ) எதிர்
நிறுத்தி ஆரம்பம் (Anti Brake Start)
ஆ) வருடாந்திர
அடிப்படை அமைப்பு (Annual Bare System)
இ) பூட்டுதலில்லா
நிறுத்தும் அமைப்பு (Anti-lock Braking System)
ஈ) இவற்றுள்
எதுவுமில்லை
[விடை : இ) பூட்டுதலில்லா நிறுத்தும் அமைப்பு (Anti-lock
Braking System)]
9. வளைவில் முந்துவது
அ) அனுமதிக்கப்படுகிறது
ஆ) அனுமதியில்லை
இ) கவனத்துடன்
அனுமதிக்கப்படுகிறது
ஈ) நமது
விருப்பம்
[விடை : ஆ) அனுமதியில்லை]
10. அவசர சிகிச்சை ஊர்தி வரும்பொழுது
அ) முன்பக்கம்
வாகனம் இல்லாத போது கடந்து செல்ல அனுமதிக்கவேண்டும்.
ஆ) முன்னுரிமை
எதுவும் அளிக்கத் தேவையில்லை.
இ) நம்
வாகனத்தினைச் சாலை ஓரமாக செலுத்தி தடையில்லாமல் கடக்க அனுமதிக்க வேண்டும்.
ஈ) அவசர
சிகிச்சை ஊர்தியின் பின்புறம் மிகுந்த வேகத்துடன் பின் தொடர வேண்டும்.
[விடை : இ) நம் வாகனத்தினைச்
சாலை ஓரமாக செலுத்தி தடையில்லாமல் கடக்க அனுமதிக்க வேண்டும்.]
II. கோடிட்ட
இடங்களை நிரப்புக
1. வாகனம்
ஓட்டும் பொழுது எப்போதும் இடது புறம் செல்லவும்.
2. கட்டாய
குறியீடுகள் வட்ட
வடிவில் குறிப்பிடப்பட்டிருக்கும்.
3. வேகக்கட்டுப்பாட்டுக்கருவி
வாகனத்தின் வேகத்தைக் கட்டுப்படுத்துகின்றது
4. அதிக
வேகம் : அதிக
ஆபத்து.
5. நான்கு
சக்கர வாகனத்தில் இருக்கை வார்பட்டை, அணிவதும்
இரு சக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிவதும் கட்டாயம் எனச் சட்டம் உள்ளது.
III. பொருத்துக
1. மாசுக்
கட்டுப்பாட்டுச் சான்றிதழ் - வரிக்கோட்டு பாதை
2. புதிய
சிற்றுந்துகளுக்கான ஒரு முறை வரி - சாலைப்பாதுகாப்புக் குறித்த சித்திர புத்தகம்
3 பாதசாரி-ஆறு
மாதங்கள்
4. பிரேசிலியா
பிரகடனம் - 15 வருடங்கள்
5 சுவச்ச
சேஃபர் - பன்னாட்டு மாநாடு
விடைகள்
1. மாசுக் கட்டுப்பாட்டுச் சான்றிதழ் - ஆறு மாதங்கள்
2. புதிய சிற்றுந்துகளுக்கான ஒரு முறை வரி - 15 வருடங்கள்
3 பாதசாரி - வரிக்கோட்டு பாதை
4. பிரேசிலியா பிரகடனம் - பன்னாட்டு மாநாடு
5 சுவச்ச சேஃபர் - சாலைப்பாதுகாப்புக் குறித்த சித்திர புத்தகம்
IV சரியா
/ தவறா எனக் குறிப்பிடுக
1. சாலை
விபத்துக்கள் தொடர்பான பிரச்சனை சாலையில் மட்டுமே உள்ளது. விடை: தவறு
2. பாதை
தடத்தை மாற்றும் முன்பு கண்ணாடியினைப் பார்க்க வேண்டும். விடை: சரி
3. ஒளிரும்
மஞ்சள் விளக்கு, வேகத்தினை குறைத்தும் எச்சரிக்கையுடனும் செல்ல வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.
விடை: சரி
4. இருசக்கர
வண்டியில் ஒருவர் மட்டுமே பின் இருக்கையில் அமர அனுமதிக்கப்படுகிறார்கள். விடை: சரி
5. சாலைகள்
மனிதனின் மிக மோசமான கண்டுபிடிப்புகளில் ஒன்று. விடை: தவறு
V சரியான
கூற்றைத் தேர்ந்தெடு
1.பின்வரும் கூற்று(களில்) சரியல்லாதது எது?
(i) முன்புற
வாகனத்திலிருந்து சரியான இடைவெளியில் தொடரவும்.
(ii)
வேக கட்டுப்பாட்டு அளவினைக் கடைபிடிக்க வேண்டும். ஒருபோதும் வேகத்திற்கான எல்லையினைத்
தாண்டக்கூடாது.
(iii)
வாகனம் ஓட்டும் பொழுது இருக்கை வார்பட்டை அணியத் தேவையில்லை.
(iv)
வளைவுகளிலும் திருப்பங்களிலும் வேகத்தினைக் குறைக்க வேண்டாம். அ) i, iii மட்டும்
ஆ)
ii, iv மட்டும்
இ)
i, ii மட்டும்
ஈ)
i, iv மட்டும்
விடை: ஈ) i, iv மட்டும்
2. கூற்று: மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுவது
விபத்துக்களை ஏற்படுத்துகின்றது.
காரணம்: மயக்கம் காரணமாக பார்வை
பாதிக்கப்படுகின்றது.
அ) கூற்று
சரி மற்றும் காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம் ஆகும்.
ஆ) கூற்று
சரி மற்றும் காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம் அல்ல.
இ) கூற்று
சரி காரணம் தவறு
ஈ) கூற்று,
காரணம் இரண்டும் தவறு
விடை: அ) கூற்று சரி மற்றும்
காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம் ஆகும்.
3. கூற்று: சாலை குறியீடுகள் எளிதில் புரிந்துகொள்ள
கூடிய ஒன்று. காரணம்: அவைகள் பெரும்பாலும் படங்களாக இருக்கின்றன.
அ) கூற்று
சரி, காரணம் தவறு
ஆ) கூற்று
மற்றும் காரணம் சரி, காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம் ஆகும்.
இ) கூற்று
தவறு, காரணம் சரி
ஈ) கூற்று
மற்றும் காரணம் சரி, காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமல்ல.
விடை: ஆ) கூற்று மற்றும்
காரணம் சரி, காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம் ஆகும்.
4. பொருந்தாத ஒன்றைக் கண்டுபிடி (சாலை பாதுகாப்பு
விதிகள்).
அ) வளைவுகளில்
மெதுவாக செல்
ஆ) வேக
கட்டுப்பாட்டு அளவினைக் கடைபிடி
இ) வாகனம்
ஓட்டும் பொழுது செல்லிடப் பேசியைப் பயன்படுத்து
ஈ) சாலைகளில்
நடப்பதைத் தவிர்க்கவும் 5. பின்வரும் குறியீடுகள் எதைக்
குறிப்பிடுகின்றன
விடை: இ) வாகனம் ஓட்டும்
பொழுது செல்லிடப் பேசியைப் பயன்படுத்து
5. பின்வரும் குறியீடுகள் எதைக் குறிப்பிடுகின்றன.
VI. பின்வரும்
வினாக்களுக்கு ஓரிரு வாக்கியங்களில் விடையளி
1. சாலை பாதுகாப்பினை நீவிர் எவ்வாறு உறுதி
செய்வாய்?
> நான் சாலை பாதுகாப்பு விதிகள் மற்றும் குறியீடுகளை கண்டிப்பாக
பின்பற்றுவேன்.
> சாலை விபத்துக்கள் யூகிக்கக்கூடியவை அதனால் அவை நிகழாமல் தடுக்க
வேண்டும்.
2. சாலை பாதுகாப்பு நமக்கு ஏன் முக்கியமானது?
சாலை பாதுகாப்பு
முக்கியமானது:
ஏனெனில்
> சாலையில் ஏற்படும் விபத்துகள் மற்றும் நிகழும் அசம்பாவிதங்கள்
வருந்தத்தக்க நிகழ்வுகள் ஆகும். இவை படுகாயங்களுக்கும் இறப்பிற்கும் வழி வகுக்கின்றன.
> இந்த இறப்புகள் மற்றும் படுகாயங்கள் குறிப்பிடத்தக்க சமூக மற்றும்
பொருளாதார இழப்புகளை ஏற்படுத்துகின்றன
3. சாலை விபத்துக்களின் நேரடி விளைவுகள் என்ன
?
> உயிரிழப்பு
> படுகாயம்
> உடமைகளுக்கு சேதம்
4. போக்குவரத்து சமிக்ஞைகளின் விளக்குகளின்
படம் வரைந்து அதன் பொருளைக் குறிப்பிடு.
5. சாலை பாதுகாப்புக் குறித்த பிரேசிலியா அறிவிப்பைப்
பற்றிக் குறிப்பு எழுதுக.
> ஐ.நா உலக சுகாதார அமைப்பு இணைந்து நடத்திய சாலை பாதுகாப்பிற்கான
இரண்டாவது உலகளாவிய மாநாடு. இந்தியா பிரேசிலியா பிரகடனத்தில் 2015ல் கையெழுத்திட்டது.
> பங்குபெற்ற அனைவரும் இப்பதிற்றாண்டுக்குள் சாலை பாதுகாப்பினை மேம்படுத்தவும்
போக்குவரத்தினால் ஏற்படும் இறப்புகளை குறைக்கும் வழிகளை உருவாக்கவும் உறுதி பூண்டுள்ளனர்.
6. சாலை பாதுகாப்பு வாரம் கடைபிடிப்பதன் நோக்கம்
யாது?
> சாலை பாதுகாப்பு வாரம் கடைப்பிடிப்பதன் நோக்கம் சாலை விதிகள் குறித்து
விழிப்புணர்வு ஏற்படுத்துவதும் சாலை விபத்துக்கள் காரணமாக ஏற்படும் பாதிப்புகளை குறைப்பதும்
ஆகும்.
> சாலையினை உபயோகிப்பவர்களுக்கு சாலை பாதுகாப்பு நடவடிக்கைகளை ஊக்குவிக்கிறது.
7. ஏதேனும் நான்கு சாலை விதிகளை எழுதுக.
சாலை
விதிகள் :
1988
ல் இந்தியப் பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட மோட்டார் வாகனச் சட்டம், 1989ம் ஆண்டு
முதல் நடைமுறைக்கு வந்தது.
>
ஒருவழி சாலையில் ஓட்டுநர் தனது வலது புறம் வாகனம் முந்திச் செல்ல அனுமதிக்க வேண்டும்.
எதிர்புறமாக ஒரு போதும் வாகனங்களை நிறுத்தக்கூடாது.
>
இருவழிச் சாலையில் இடப்புறம் மட்டுமே ஓட்டுநர் வாகனத்தைச் செலுத்த வேண்டும்
>
ஓட்டுநர்கள் தடை செய்யப்பட்ட இடங்களான மருத்துவமனை, பள்ளிக்கூடம் அருகில் ஒலிப்பான்களை
பயன்படுத்தக்கூடாது.
8. மது அருந்துதல் வாகன ஓட்டுதலை எவ்வாறு பாதிக்கின்றது?
மது அருந்திவிட்டு
வாகனம் ஓட்டுதல்.
> மது அருந்துவது கவனத்தைக் குறைக்கும் அதன் காரணமாக வரும் மயக்கத்தினால்
பார்வை தடைபடுகின்றது.
> மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டும்போது விபத்துக்கள் ஏற்படுகின்றன.
VII விரிவான
விடையளி
1. சாலை விபத்துக்களுக்கான காரணங்களை விவரி.
சாலை விபத்துக்களுக்கான
காரணங்கள்:
1. அதிகவேகம் :
> பெரும்பாலான உயிரிழப்பு விபத்துக்கள் அதிக வேகத்தினால்தான் ஏற்படுகின்றன.
அதிக வேகம், அதிக ஆபத்து.
> வேக அதிகரிப்பு, விபத்து மற்றும் விபத்து காயத்தின் தீவிரத்தினை
அதிகரிக்கிறது. பின்னால் மிக நெருக்கமாக பின்தொடர்தல் (Tailgating) சட்டவிரோதம் மற்றும்
ஆபத்தானது.
2. மது அருந்திவிட்டு
வாகனம் ஓட்டுதல் :
> மது அருந்துவது கவனத்தைக் குறைக்கும். அதன் காரணமாக வரும் மயக்கத்தினால்
பார்வை தடைபடுகிறது.
> மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டும்போது விபத்துகள் ஏற்படுகின்றன.
3. வாகன ஓட்டிகளின்
கவனச் சிதறல் :
> இந்நாட்களில் வாகனம் ஓட்டும்போது செல்லிடப் பேசியில் பேசுவது பெரிய
கவனச் சிதறலாக உள்ளது.
> கவனக் குறைவு, பகல் கனவு, வாகனம் ஓட்டும்போது கண்ணாடியைச் சரிசெய்தல்,
வாகனத்தில் உள்ள ஒலி சாதனம், சாலையில் விலங்குகள் நடமாட்டம் பதாகைகள் மற்றும் விளம்பர
பலகைகள் அகியவையும் கவனச் சிதறல்களுக்கான காரணங்கள்.
4. சிவப்பு விளக்கில்
நில்லாமை :
> நேரத்தை மிச்சப்படுத்த நினைப்பதே சிவப்பு விளக்கில் நிற்காமல்
செல்வதன் முக்கிய நோக்கம்.
> போக்குவரத்து சைகைகளை முறையாகச் கடைப்பிடிக்கும்போது நேரம் சேமிக்கப்படுகிறது.
சேர வேண்டிய இடத்தை உரிய நேரத்தில் பாதுகாப்புடன் சென்றடைய முடிகிறது.
5. பாதுகாப்பு கருவிகளை
தவிர்த்தல் :
> விபத்துக்களின் போது ஏற்படும் காயங்களின் தீவிரத்தை நான்கு சக்கர
வாகனங்களில் இருக்கைப்பட்டை அணிவதும், இருசக்கர வாகனங்களில் தலைக்கவசம் அணிவதும் குறைக்கின்றன.
பிறகாரணிகள் :
> ஓட்டுநர்கள்
> பாதசாரிகள்
> பயணிகள்
> வாகனங்கள்
> சாலைகளின் தரம்
> வானிலை ஆகும்.
2. சாலை விபத்துக்கள் நடைபெறாமல் தடுக்க இந்திய
அரசாங்கம் மேற்கொண்டுள்ள முயற்சிகளை விளக்குக.
சாலை
போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம், சாலை விபத்துக்களையும் சாலை விபத்தினால்
ஏற்படும் உயிர் இழப்புகளையும் தவிர்க்க பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
ஒரு பன்முக ஏற்புடைய வியூகம் :
>
ஆங்கில எழுத்து நான்கு'E' அடிப்படையில் சாலை பாதுகாப்பினை உறுதி செய்யும் பொருட்டு
ஏற்றுக் கொள்ளப்பட்ட பன்முகயுக்தியாகும். பொறியியல், செயலாக்கம், கல்வி, அவரசம்
(Engineering, Enforcement, Education, Emergency)
வாகன பாதுகாப்பு தரத்தை உயர்த்துதல் :
>
சரக்கு வாகனங்கள் வெளியே நீட்டிக்கொண்டு இருக்கும் கம்பிகளை ஏற்றிச் செல்ல தடை. கனரக
வாகனங்களில் பூட்டுதலில்லா நிறுத்தும் அமைப்பு கட்டாயம்.
>
இரு சக்கர வாகனங்களில் ABS/ CBS நிறுத்தக் கருவி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இருசக்கர
வண்டிகள் தெளிவாக தெரியும் பொருட்டு தானியங்கி முகப்புவிளக்கு ஒளிர்விப்பான் (AHO)
கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
பணமில்லா பரிவர்த்தனை மூலம் விபத்தில் சிக்கியவர்களுக்கு
சிகிச்சை அளிக்கும் முன்னோட்டத் திட்டம்:
>
தேசிய நெடுஞ்சாலை எண் 8 மற்றும் 33 ஆகியவற்றில் இத்திட்டம் ஏற்கனவே செயல்படுத்தப்பட்டு
வருகிறது.
>
தற்பொழுது தங்க நாற்கர சாலைகளிலும், வடக்கு, தெற்கு மற்றும் கிழக்கு, மேற்கு இணைப்புச்
சாலைகளிலும் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
உடனடி விரைவு அவசர சிகிச்சை ஊர்திகள் :
>
தேசிய நெடுஞ்சாலைகளில் ஒவ்வொரு 50 கி.மீ தொலைவிலும் ஓர் அவசர சிகிச்சை ஊர்தி NHAI ஆல்
நிறுத்தப்பட்டுள்ளது.
>
அவசர ஊர்திக்கான அழைப்புகளை ஏற்க 24 x 7 செயல்படும் அமைப்பும் தன்னார்வ தொண்டர்களுக்கு
முதலுதவி பயிற்சியும் உருவாக்கப்பட்டுள்ளது.
வேகக்கட்டுப்பாட்டுக் கருவிகள் : தொடர்ச்சியான
உணர்கருவிகள் மூலம் வேகம் கண்டறியப்பட்டு தானாகவே வேகத்தினை குறைப்பதுடன், முன்னர்
தீர்மானிக்கப்பட்ட வேகத்தினை மீறி வாகனம் செல்வதையும் தடுக்கிறன்றது பல்வேறு செய்திக் குறியீடுகள் : பயணிகளுக்கு
தெரிவிக்கப்படவேண்டிய முக்கியத் தகவல்களை தெரிவிக்கும் ஒளி உமிழும் முனைய பலகைகள்
(LED Boards)
3. சாலை விபத்துக்கள் நடைபெறாமல் தடுக்க மேற்கொள்ள
வேண்டிய நடவடிக்கைகள் என்ன?
சாலை விபத்துக்கள்
நடைபெறாமல் தடுக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் :
> எப்பொழுதும் இடது புறமாகவே செல்லுதல்
> வளைவுகளிலும் திருப்பங்களிலும் வேகம் குறைத்தல்
> தலைக்கவசம் அணிதல்
> வேகவரம்பை ஒருபோதும் மீறாதிருத்தல்
> சரியான இடைவெளி விட்டு பின் தொடர்தல்
> நெடுஞ்சாலைகளில் வாகனம் நிறுத்துவதற்கென ஒதுக்கப்பட்ட இடங்களில்
மட்டுமே வாகனங்களை நிறுத்துதல்.
> சாலை குறியீடுகளைப் பின்பற்றுதல்
> மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதைத் தவிர்த்தல்
> வாகனம் ஓட்டும்பொழுது செல்லிடப்பேசியை பயன்படுத்துதலையும், அதிக
சப்தம் நிறைந்த இசை கேட்பதையும் தவிர்த்தல்.
> பாதை தடத்தை மாற்றுவதற்கு முன் கண்ணாடி வழியே வாகன வருகையை உறுதி
செய்தல், வாகனம் ஓட்டும்போது அமைதியாக இருப்துடன் இருக்கை வார்பட்டையை அணிதல்.
> பாதசாரிகள் சாலையைக் கடக்க வரிக்கோடு பாதையை மட்டும் பயன்படுத்துதல்.
VIII உயர்
சிந்தனை வினா
1. இருசக்கர வாகனம் இரவில் ஓட்டும்போது தேவைப்படுவன
என்ன?
இருசக்கர வாகனம்
இரவில் ஓட்டும்போது தேவைப்படுவன :
> உங்கள் வாகனவிளக்குகளை சரியான நிலையில் வைத்திருக்கவும்.
> சாலைகளில் நீங்கள் தெளிவாக தெரியும்படி பார்வை விசாலப்படுத்தப்பட
வேண்டும்.
> உங்கள் பார்வை தெளிவாக இருப்பதை உறுதி செய்யவும்.
> பிறவாகனங்களின் விளக்குகளையும் சமமாகப் பாவியுங்கள்.
> பாதுகாப்பாகவும் மெதுவாகவும் வாகனங்களை ஓட்டவும்.
> உங்கள் வேகத்தை உங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருங்கள்.
> சாலைகளில் காணப்படும் உயிருள்ளவற்றின் மீது உங்கள் கவனம் இருத்தல்
அவசியம்.
> சரியான அளவிலான தகுந்த உடைகளை அணியுங்கள்.
> போதுமான ஓய்வு தேவை.
> சரியான பயண திட்டமிடுதல் அவசியம்.
2. ஓட்டுநர்களின் களைப்பு மற்றும் சோர்வினைக்
குறைக்கும் சில வழிகளைப் பட்டியலிடுக.
ஓட்டுநர்களின் களைப்பு
மற்றும் சோர்வினைக் குறைக்கும் சிவ வழிகள் :> நீண்ட தூரம்
பயணம் மேற்கொள்ளுமுன் குறைந்தபட்சம் முந்தைய இரவில் 6 மணி தூக்கம் அவசியம்
> சாதாரணமாக விழித்திருக்கும் போது கால இடைவெளிகளில் பயணம் மேற்கொள்க
> ஒவ்வொரு இரண்டு மணி நேர பயணத்திற்குப் பின் அல்லது ஒவ்வொரு
120 கி.மீ பயணத்திற்குப் பின் சிறிய இடைவெளி தேவை.
> முன்னிருக்கையில் விழித்திருக்கும் பயணியுடன் பயணம் செய்க.
> கண்களில் சோர்வு தென்பட்டால் வாகனம் ஓட்டுவதை நிறுத்துக.
> ஓரு நாளைக்கு 8/10 மணி நேரத்திற்கு மேல் பயணிக்க வேண்டாம்.
> வாய்ப்பு இருந்தால் வண்டி ஓட்டுவதை பார்த்து கொள்க.
> மது மற்றும் போதைப்பொருள் பயன்படுத்த வேண்டாம்.
> கலைப்பால் உணர்ந்தால் 15 நிமிடங்கள் மனதை இதமாக்குக.
> இசையை விட வானொலி பேச்சைக் கேட்க.
> வாகனத்தின் வெப்பநிலையை இதமாக வைத்துக் கொள்க.
> வாகன இருக்கையை புதிய நிலையில் வைத்துக்கொள்க.
> சத்தான நொறுக்குத் தீனிகளை உண்க. சர்க்கரை தவிர்க்கவும்.
> கார் கதவு சன்னலை திறக்கவும்.
> மிதமான அளவில் காபி அருந்துக.
> நிறுத்துக, உடலை நிமிர்த்துக. சரிப்படுத்துக.
IX செயல்திட்டம்
மற்றும் செயல்பாடு
1. குழந்தைகளுக்கான சில அடிப்படை சாலை பாதுகாப்பு
விதிகளைப் பட்டியலிடுக.
2. சாலை பாதுகாப்பு முறைகளைச் செய்து காட்டுக.
3. சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கையேட்டினைத்
தயாரித்துப் பள்ளியில் சுற்றுக்கு அனுப்புக.