Home | 8 ஆம் வகுப்பு | 8வது சமூக அறிவியல் | போக்குவரத்துக் குறியீடுகள்

சாலை பாதுகாப்பு விதிகள் மற்றும் நெறிமுறைகள் | அலகு 5 | புவியியல் | எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் - போக்குவரத்துக் குறியீடுகள் | 8th Social Science : Civics : Chapter 5 : Road Safety Rules and Regulations

   Posted On :  14.06.2023 05:57 am

எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் : குடிமையியல் : அலகு 5 : சாலை பாதுகாப்பு விதிகள் மற்றும் நெறிமுறைகள்

போக்குவரத்துக் குறியீடுகள்

போக்குவரத்துக் குறியீடுகள் போக்குவரத்தினை முறைப்படுத்தவும் ஆபத்துக்களை எச்சரிக்கை செய்யவும் வழிகாட்டுவதற்கும் சாலையை உபயோகிப்பவர்களுக்காக வைக்கப்பட்டிருக்கின்றன. போக்குவரத்துக் குறியீடுகள் பற்றி புரிந்து கொள்வதும் அதைப்பற்றிய முறையான அவசியம்.

போக்குவரத்துக் குறியீடுகள்

போக்குவரத்துக் குறியீடுகள் போக்குவரத்தினை முறைப்படுத்தவும் ஆபத்துக்களை எச்சரிக்கை செய்யவும் வழிகாட்டுவதற்கும் சாலையை உபயோகிப்பவர்களுக்காக வைக்கப்பட்டிருக்கின்றன. போக்குவரத்துக் குறியீடுகள் பற்றி புரிந்து கொள்வதும் அதைப்பற்றிய முறையான அவசியம். ஓட்டுநர் உரிமம் பெற விரும்பும் ஒருவர் போக்குவரத்துக் குறியீடுகள் பற்றி நன்கு அறிந்திருக்க வேண்டியதை அரசு கட்டாயமாக்கியுள்ளது. போக்குவரத்துக் குறியீடுகள் வாகனத்தில் உள்ள ஓட்டுநர், பயணிகளுக்குச் சாலையில் ஏற்படும் விரும்பத்தகாத ஆபத்துக்களைத் தடுக்கின்றது.

 

மூன்று வகையான போக்குவரத்துக் குறியீடுகள் உள்ளன.

கட்டாயக் குறியீடுகள்: கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என உத்திரவிடும் குறியீடுகள் ஆகும். அவை பொதுவாக வட்ட வடிவில் இருக்கும்.

எச்சரிக்கை குறியீடுகள்: சாலையைப் பயன்படுத்துவோருக்கு எதிர்வரும் சாலையின் நிலை குறித்து எச்சரிக்கின்றன. அவை பொதுவாக முக்கோண வடிவில் இருக்கும்.

தகவல் குறியீடுகள்: திசைகள், இலக்குகள் பற்றிய பல தகவல்களை அளிக்கின்றன. அவை பொதுவாக செவ்வக வடிவில் இருக்கும்.

 

போக்குவரத்துச் சமிக்ஞைகள்

போக்குவரத்து விளக்குகள் என்பது ஒரு சமிக்ஞை கருவி ஆகும். இது சாலைகள் சந்திக்கும் இடங்களிலும் பாதசாரிகள் சாலையைக் கடக்கும் இடங்களிலும் அமைக்கப்பட்டிருக்கும். அவை உலகளாவிய நிறக் குறியீடுகளைப் பயன்படுத்துவதன் மூலம் பாதுகாப்பாக எப்போது நடக்கலாம், வாகனங்களைச் செலுத்தலாம் என்பதைக் குறிப்பிடுகின்றன.

சிவப்பு: இந்த சமிக்ஞை நிறுத்தக் கோட்டிற்குப் பின்னால் வாகனங்களை நிறுத்த வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

ஆம்பர் (மஞ்சள்): இந்த சமிக்ஞை நிறுத்த வேண்டும் என்பதைக் குறிக்கின்றது. பச்சை வண்ணம் தெரியும் வரை சாலையைக் கடக்கவோ புறப்படவோ கூடாது. தவறுதலாக பெரிய சாலை கடந்து கொண்டிருக்கும் போது இடைப்பகுதியிலேயே மஞ்சள் சமிக்ஞையில் சிக்க நேர்ந்தால் கவனமாக முன் செல்ல வேண்டும். பதற்றத்தில் வேகமாக செல்லக்கூடாது.

பச்சை: பாதை தெளிவாக இருக்கும்பட்சத்தில் செல்லலாம் என்பதைக் குறிக்கின்றது.

நிலையான பச்சை அம்புக்குறி சமிக்ஞை: முழு பச்சை சமிக்ஞையுடன் கூடுதலாக; இந்த சமிக்ஞை வழங்கப்படலாம். இதில் அம்பு குறிப்பிடும் திசையில் கவனமுடன் செல்ல வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

ஒளிரும் சிவப்பு சமிக்ஞை: முழுமையாக நிறுத்த வேண்டும் என்பதாகும். பாதை தெளிவான பின்பே செல்ல வேண்டும். ஒளிரும் மஞ்சள் சமிக்ஞை : இது வேகத்தைக் குறைத்து எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

இரவில் விளக்குகள்


நில், கவனி, செல் மெதுவாக, கவனி, செல் இரவில் போக்குவரத்து நெரிசல் குறைந்திருக்கும் போது பல குறுக்கு சந்திப்புகளில் உள்ள சைகை விளக்குகளை காவலர்கள் அணைத்து விடலாம். ஆனால் அப்பகுதிகளைக் கடக்கும் போது மிகவும் எச்சரிக்கையுடன் தொடரலாம். வாகனங்களை நிறுத்தத் தேவையில்லை.

Tags : Road Safety Rules and Regulations | Chapter 5 | Civics | 8th Social Science சாலை பாதுகாப்பு விதிகள் மற்றும் நெறிமுறைகள் | அலகு 5 | புவியியல் | எட்டாம் வகுப்பு சமூக அறிவியல்.
8th Social Science : Civics : Chapter 5 : Road Safety Rules and Regulations : Traffic Signs and Signals Road Safety Rules and Regulations | Chapter 5 | Civics | 8th Social Science in Tamil : 8th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் : குடிமையியல் : அலகு 5 : சாலை பாதுகாப்பு விதிகள் மற்றும் நெறிமுறைகள் : போக்குவரத்துக் குறியீடுகள் - சாலை பாதுகாப்பு விதிகள் மற்றும் நெறிமுறைகள் | அலகு 5 | புவியியல் | எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் : 8 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் : குடிமையியல் : அலகு 5 : சாலை பாதுகாப்பு விதிகள் மற்றும் நெறிமுறைகள்