Home | 8 ஆம் வகுப்பு | 8வது சமூக அறிவியல் | சாலை விபத்துக்களைத் தவிர்க்க அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகள்

சாலை பாதுகாப்பு விதிகள் மற்றும் நெறிமுறைகள் | அலகு 5 | குடிமையியல் | எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் - சாலை விபத்துக்களைத் தவிர்க்க அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் | 8th Social Science : Civics : Chapter 5 : Road Safety Rules and Regulations

   Posted On :  14.06.2023 06:03 am

எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் : குடிமையியல் : அலகு 5 : சாலை பாதுகாப்பு விதிகள் மற்றும் நெறிமுறைகள்

சாலை விபத்துக்களைத் தவிர்க்க அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகள்

சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை (The Ministry of Road Transport and Highways) அமைச்சகம், சாலை விபத்துக்களையும் சாலை விபத்தினால் ஏற்படும் உயிர் இழப்புகளையும் தவிர்க்க பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

சாலை விபத்துக்களைத் தவிர்க்க அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகள்

சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை (The Ministry of Road Transport and Highways) அமைச்சகம், சாலை விபத்துக்களையும் சாலை விபத்தினால் ஏற்படும் உயிர் இழப்புகளையும் தவிர்க்க பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.


அவையாவன:


ஒரு பன்முக ஏற்புடைய வியூகம்: ஆங்கில எழுத்து நான்கு 'E' - பொறியியல் (Engineering), செயலாக்கம் (Enforcement), கல்வி (Education), அவசரம் (Emergency) ஆகியவற்றின் அடிப்படையில் சாலை பாதுகாப்பினை உறுதி செய்யும் பொருட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள பன்முக யுக்தியாகும். அவை மேம்படுத்தப்பட்ட மற்றும் பாதுகாப்பான சாலை பொறியியலையும் மேம்பட்ட வாகன பாதுகாப்புத்தரநிலைகளையும் ஓட்டுநர்களுக்கு பயிற்சி அளித்தல், செம்மைப்படுத்தப்பட்ட அவசர சிகிச்சை பராமரிப்பு மற்றும் பொதுமக்கள் விழிப்புணர்வை உருவாக்குதல் ஆகியவற்றிற்குச் சிறந்த பாதுகாப்பான யோசனை ஆகும்.


வாகன பாதுகாப்புத் தரத்தை உயர்த்துவது: சரக்கு வாகனங்கள் வெளியே நீட்டிக் கொண்டு இருக்கும் கம்பிகளை ஏற்றிச் செல்ல தடை செய்யப்பட்டுள்ளது. கனரக வாகனங்களில் பூட்டுதலில்லா நிறுத்தும் அமைப்பும் (Anti-locking Brake System). இரு சக்கர வண்டிகளிலும் ABS/CBS நிறுத்தக்கருவியும் கட்டாயமாக்கப் பட்டுள்ளது. இரு சக்கர வண்டிகள் தெளிவாக தெரியும் பொருட்டு தானியங்கி முகப்பு விளக்கு ஒளிர்விப்பான் (Automatic Headlight On) கட்டாயமாக்கப்பட்டுள்ளது.


சாலை விபத்தில் சிக்கியவர்கள் பணமில்லா பரிவர்த்தனை மூலம் சிகிச்சை அளிக்கும் முன்னோட்டத் திட்டம்: தேசிய நெடுஞ்சாலை எண் 8 மற்றும் 33 இல் இத்திட்டம் ஏற்கனவே செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்பொழுது தங்க நாற்கர சாலைகளிலும், வடக்கு, தெற்கு மற்றும் கிழக்கு, மேற்கு இணைப்புச் சாலைகளிலும் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.


உடனடி விரைவு அவசர சிகிச்சை ஊர்திகள்: தேசிய நெடுஞ்சாலைகளில் ஒவ்வொரு 50 கி.மீ தொலைவிலும் ஒரு அவசர சிகிச்சை ஊர்தியை இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் (NHAI) நிறுத்தப்பட்டிருக்கின்றது. அவசர ஊர்திகளுக்காக பெறப்படும் அழைப்புகளை ஏற்க 24X7 செயல்படும் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளதுடன் சாலை பாதுகாப்புத் தன்னார்வத் தொண்டர்களுக்கு முதலுதவி அளிப்பதில் பயிற்சியும் வழங்கப்பட்டுள்ளது.


சேது பாரதம்: தேசிய நெடுஞ்சாலைகளில் பாதுகாப்பாக மற்றும் தடையற்ற பயணம் செய்ய பாலங்களைக் கட்டுவதற்கான திட்டம் 2016இல் தொடங்கப்பட்டது. அது 2019ஆம் ஆண்டிற்குள் அனைத்து தேசிய நெடுஞ்சாலைகளையும், இருப்புப்பாதை குறுக்கீடு இல்லாமல் உருவாக்குவதை நோக்கமாக கொண்டுள்ளது.


வேகக் கட்டுப்பாட்டுக் கருவிகள்: இக்கருவியில் வாகனம் எவ்வளவு வேகத்தில் செல்லுகின்றது என்பதை கண்டறியக்கூடிய தொடர்ச்சியான உணர்கருவிகள் உள்ளன. இவ்வுணர்கருவிகள் நிர்ணயிக்கப்பட்ட வேகத்தினை தாண்டும் போது வாகனத்தின் உந்துபொறிக்கு (engine) செல்லும் காற்று மற்றும் எரிபொருளின் அளவினைக் கட்டுப்படுத்துகிறது. இது தானாகவே வாகனத்தின் வேகத்தினை குறைப்பதோடு முன்னரே தீர்மானிக்கப்பட்ட வேகத்தினை மீறி வாகனம் செல்வதையும் தடுக்கின்றது.


பல்வேறு செய்திக் குறியீடுகள் : இவை பயணிகளுக்குத் தெரிவிக்கப்பட வேண்டிய முக்கியத் தகவல்களைத் தெரிவிக்கும் ஒளி உமிழும் முனைய பலகைகள் (LED Boards) ஆகும். பெரிய போக்குவரத்து நெரிசல் மற்றும் நெருக்கடிகள் ஏதேனும் ஏற்பட்டால் அந்நிலைகளை உடனடியாக அச்சாலையை உபயோகிப்பவர்களுக்குத் தெரிவிக்க இவை பயன்படுகின்றன.



சாலை பாதுகாப்புக்கான பிரேசிலியா பிரகடனம்: இது ஐ. நா. உலக சுகாதார அமைப்பு இணைந்து நடத்திய சாலை பாதுகாப்பிற்கான இரண்டாவது உலகளாவிய உயர்மட்ட மாநாடு ஆகும். சாலை பாதுகாப்பினை மிக முக்கியமானதாக கருதி இந்தியா, பிரேசிலியா பிரகடனத்தில் 2015ஆம் ஆண்டு கையெழுத்திட்டது. இதன் மூலம் இதில் பங்கு பெற்ற அனைவரும் இப்பதிற்றாண்டுக்குள் சாலை பாதுகாப்பினை மேம்படுத்துவதற்கும் போக்குவரத்தினால் ஏற்படும் இறப்புகளைக் குறைப்பதற்கான வழிகளை உருவாக்கவும் உறுதி பூண்டுள்ளன.

குழந்தைகளிடையே சாலை பாதுகாப்பு விழிப்புணர்வினை ஏற்படுத்தும் நோக்கத்தோடு சுவச்ச சஃபர் (பாதுகாப்பான பயணம் - Swachha Safer) மற்றும் சுவரஷித் யாத்ரா (Suvarshit Yatra) என்ற இரு சித்திர புத்தகங்களைச் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

வாழ்வைக் காப்பாற்று நிறுவனம் (Save LIFE Foundation) இது ஒரு சுதந்திரமான, இலாப நோக்கில்லாத, அரசு சாரா, பொதுத் தொண்டு அறக்கட்டளையாகும். இது இந்தியா முழுவதும் சாலை பாதுகாப்பு மற்றும் அவசர மருத்துவ வசதியினை மேம்படுத்துவதற்காக பணியாற்றி வருகின்றது.

Tags : Road Safety Rules and Regulations | Chapter 5 | Civics | 8th Social Science சாலை பாதுகாப்பு விதிகள் மற்றும் நெறிமுறைகள் | அலகு 5 | குடிமையியல் | எட்டாம் வகுப்பு சமூக அறிவியல்.
8th Social Science : Civics : Chapter 5 : Road Safety Rules and Regulations : Steps taken by the Government to prevent Road Accidents Road Safety Rules and Regulations | Chapter 5 | Civics | 8th Social Science in Tamil : 8th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் : குடிமையியல் : அலகு 5 : சாலை பாதுகாப்பு விதிகள் மற்றும் நெறிமுறைகள் : சாலை விபத்துக்களைத் தவிர்க்க அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் - சாலை பாதுகாப்பு விதிகள் மற்றும் நெறிமுறைகள் | அலகு 5 | குடிமையியல் | எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் : 8 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் : குடிமையியல் : அலகு 5 : சாலை பாதுகாப்பு விதிகள் மற்றும் நெறிமுறைகள்