Home | 8 ஆம் வகுப்பு | 8வது சமூக அறிவியல் | இந்தியாவில் சாலை விதிகள்

சாலை பாதுகாப்பு விதிகள் மற்றும் நெறிமுறைகள் | அலகு 5 | குடிமையியல் | எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் - இந்தியாவில் சாலை விதிகள் | 8th Social Science : Civics : Chapter 5 : Road Safety Rules and Regulations

   Posted On :  14.06.2023 06:00 am

எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் : குடிமையியல் : அலகு 5 : சாலை பாதுகாப்பு விதிகள் மற்றும் நெறிமுறைகள்

இந்தியாவில் சாலை விதிகள்

இந்தியா முழுமைக்கும் பொருந்தக்கூடிய மோட்டார் வாகனச் சட்டம் 1988ல் பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டு, 1989 ஆம் ஆண்டு முதல் நடைமுறைக்கு வந்தது.

இந்தியாவில் சாலை விதிகள்

இந்தியா முழுமைக்கும் பொருந்தக்கூடிய மோட்டார் வாகனச் சட்டம் 1988ல் பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டு, 1989 ஆம் ஆண்டு முதல் நடைமுறைக்கு வந்தது.

•ஒருவழி சாலையில் ஓட்டுநர் தனது வலது புறம் வாகனம் முந்திச் செல்ல அனுமதிக்க வேண்டும். எதிர்புறமாக வாகனங்களை ஒருபோதும் நிறுத்தக்கூடாது.

• இருவழி சாலையில் இடப்புறம் மட்டுமே ஓட்டுநர் வாகனத்தைச் செலுத்த வேண்டும். அனைத்து சாலை சந்திப்புகளிலும் மற்றும் பாதசாரி கடக்கும் கோடுகள் உள்ள இடங்களிலும் ஓட்டுநர் கட்டாயமாக வாகனத்தின் வேகத்தைக் குறைக்க வேண்டும்.

• தடை செய்யப்பட்ட இடங்களான மருத்துவமனை, பள்ளிக்கூடம் , போன்றவைகளின் அருகில் ஓட்டுநர்கள் ஒலிப்பான்களைப் பயன்படுத்தக் கூடாது.

• மருத்துவ ஊர்தி (ambulance), தீயணைப்பு வாகனங்கள்,இராணுவ பாதுகாப்பு வாகனங்கள் போன்றவைகளுக்கு வழிவிடுவது நமது பொறுப்பாகும்.

• உயர் கற்றை ஒளியினைத் தேவையான போது மட்டுமே ஓட்டுநர்கள் பயன்படுத்த வேண்டும். எதிரே வாகனங்கள் வரும் போதும், அல்லது ஒரு வாகனத்தின் அருகில் பின் செல்லும் போதும் மங்கலான முகப்பு விளக்குகளை பயன்படுத்த வேண்டும்.

• ஓட்டுநர் வாகனத்தின் வேகத்தினை குறைக்கும் பொழுது தனது வலது கையினை மேல் உயர்த்தி நிதானமாக மேலும் கீழுமாக அசைக்க வேண்டும். 

• ஓட்டுநர் வாகனத்தினை நிறுத்தும் பொழுது பின்வரும் வாகனங்களுக்குத் தெரியும் பொருட்டு தனது கையினைச் செங்குத்தாக மேல் உயர்த்த வேண்டும்.

• ஓட்டுநர் வாகனத்தினை வலப்பக்கம் திருப்ப விரும்பினால் தனது வலக்கையினை கிடைமட்டமாக முன்னால் உள்ளங்கை தெரிவது போல் நீட்ட வேண்டும்.

• ஓட்டுநர் வாகனத்தினை இடப்பக்கம் திருப்ப விரும்பினால் தனது கையினை இடஞ்சுழியாக (anti-clockwise) சுழற்ற வேண்டும். அவசர காலத்தில் அபாய குறிக்காட்டிகளைப் பயன்படுத்த வேண்டும். அது இரண்டு குறிக்காட்டிகளையும் ஒரே நேரத்தில் ஒளிரச்செய்யும்.

•இரு சக்கர வண்டியின் பின் இருக்கையில் ஒருவர் மட்டுமே அமர அனுமதிக்கப்படுகின்றனர்.

•ஒலிப்பான்களைக் கிரீச் என்ற சத்தத்துடனோ, எரிச்சலடையும் வகையிலோ ஒலிக்க விடக்கூடாது. மின்னனு ஒலிப்பான் மட்டுமே அனுமதிக்கப்பட்டவை ஆகும்.

• மீட்பு வாகனங்களான தீயணைப்பு வண்டி, அவசர சிகிச்சை ஊர்தி அல்லது காவல் துறை வாகனங்கள் போன்ற வாகனங்களின் முன்புறம் வாகனங்களை நிறுத்துவது சட்டப்படி தண்டிக்கப்பட கூடியது மற்றும் அவ்வாறு செய்யும் தனிநபர் அபராதம் செலுத்த நேரிடும்.

இந்திய தண்டனைச் சட்டம் 304A பிரிவு

கண்மூடித்தனமாக ஓட்டுவதாலும் ஓட்டுநரின் அலட்சியம் காரணமாகவும் ஏற்படும் இறப்பு தொடர்பான குற்றங்களுக்கு ஓட்டுநர் மீது காவல் துறை மேற்கூறிய பிரிவின் கீழ் கிரிமினல் குற்ற வழக்குப்பதிவு செய்ய நேரிடும்.

 

பல்வேறு வண்ண இலக்கத்தகடுகள் (Number Plates)

 - குடியரசுத் தலைவர் மற்றும் மாநில ஆளுநர்களின் வாகனங்களில் பயன்படுத்தப்படும்.

 - அயல்நாட்டு பிரதிநிதிகள்/  தூதர்கள் பயன்படுத்தும் வாகனங்களுக்கு அளிக்கப்படும்.

 - இது சாதாரண குடிமகனுக்கு சொந்தமான வாகனம் என்பதாகும்.

 - வணிகரீதியான  வாகனங்களுக்கானதாகும்.

கட்டாய ஆவணங்கள் - ஓட்டுநர் வாகனம் ஓட்டும் போது பின்வரும் ஆவணங்களை கட்டாயமாக வைத்திருக்க வேண்டும். ஓட்டுநர் உரிமம், வாகனத்தின் பதிவுச் சான்றிதழ், வரிச் சான்றிதழ், காப்பீட்டுச் சான்றிதழ், வாகன உறுதித்தன்மை மற்றும் அனுமதிச் சான்றிதழ்.
Tags : Road Safety Rules and Regulations | Chapter 5 | Civics | 8th Social Science சாலை பாதுகாப்பு விதிகள் மற்றும் நெறிமுறைகள் | அலகு 5 | குடிமையியல் | எட்டாம் வகுப்பு சமூக அறிவியல்.
8th Social Science : Civics : Chapter 5 : Road Safety Rules and Regulations : Traffic Rules in India Road Safety Rules and Regulations | Chapter 5 | Civics | 8th Social Science in Tamil : 8th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் : குடிமையியல் : அலகு 5 : சாலை பாதுகாப்பு விதிகள் மற்றும் நெறிமுறைகள் : இந்தியாவில் சாலை விதிகள் - சாலை பாதுகாப்பு விதிகள் மற்றும் நெறிமுறைகள் | அலகு 5 | குடிமையியல் | எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் : 8 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் : குடிமையியல் : அலகு 5 : சாலை பாதுகாப்பு விதிகள் மற்றும் நெறிமுறைகள்