Home | 9 ஆம் வகுப்பு | 9வது சமூக அறிவியல் | எதிர் மத சீர்திருத்த இயக்கம்

நவீன யுகத்தின் தொடக்கம் | வரலாறு - எதிர் மத சீர்திருத்த இயக்கம் | 9th Social Science : History: The Beginning of the Modern Age

   Posted On :  05.09.2023 07:02 am

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : நவீன யுகத்தின் தொடக்கம்

எதிர் மத சீர்திருத்த இயக்கம்

பிராட்டஸ்டன்ட் சீர்திருத்த இயக்கம், கத்தோலிக்க திருச்சபைக்கு ஓர் அச்சுறுத்தலாக விளங்கியது. அந்த சவாலை எதிர்கொண்டு சந்திப்பதற்காக போப் மூன்றாம் பால் மற்றும் அவரையடுத்துப் பொறுப்புக்கு வந்தவர்கள் திருச்சபையில் எண்ணற்ற பல தீவிரமான சீர்திருத்தங்களை அறிவித்தார்கள்.

எதிர் மத சீர்திருத்த இயக்கம்

பிராட்டஸ்டன்ட் சீர்திருத்த இயக்கம், கத்தோலிக்க திருச்சபைக்கு ஓர் அச்சுறுத்தலாக விளங்கியது. அந்த சவாலை எதிர்கொண்டு சந்திப்பதற்காக போப் மூன்றாம் பால் மற்றும் அவரையடுத்துப் பொறுப்புக்கு வந்தவர்கள் திருச்சபையில் எண்ணற்ற பல தீவிரமான சீர்திருத்தங்களை அறிவித்தார்கள்.

புனித இக்னேஷியஸ் லயோலாவும், இயேசு சபையும்

 கிறித்தவ மதத்தைப் பரப்புரை செய்வதற்காக இயேசு சபையை புனித இக்னேஷியஸ் லயோலா நிறுவினார். அதனுடைய முக்கியத்துவமிக்க பணி என்பது, ஆதரவற்றோருக்குக் கல்விச் சேவையை வழங்குவதுதான். ஆதரவற்றவர்களுக்கான அது உறைவிடங்கள், அனாதை இல்லங்கள், கல்வி நிலையங்கள் போன்ற எண்ணற்ற அமைப்புகளை இயேசு சபை தொடங்கியது. வெகுவிரைவில் அவர்களுடைய இறைப்பணியாளர்கள் உலகின் எல்லாப் பாகங்களிலும் கத்தோலிக்க மதத்தைப் பரப்பும் பணிகளில் ஈடுபட்டிருப்பதைக் காணமுடிந்தது.


ஊழல்களைக் கடுமையான முறையில் கையாண்டதுடன், பதவிகளின் விற்பனையையும் தடை செய்தனர். கூட்டு வழிபாட்டின் முக்கியத்துவத்தையும், விழாக்களின் முக்கியத்துவத்தையும் ட்ரென்ட் கவுன்சில் மீண்டும் வலியுறுத்தியது. மேலும், புனித மறைநூல்களை திருச்சபை மட்டுமே படித்து விளக்கமளிக்க முடியுமென்றும் அது அறிவித்தது. திருச்சபைக்கு எதிரான முயற்சிகளைக் கையாளுவதற்கு மத நீதிமன்றத்திற்கு புத்துயிர் அளித்தது. இயேசு சபைக்கு அதிகாரப்பூர்வமான அனுமதியையும் அது வழங்கியது. கத்தோலிக்க திருச்சபைக்குள்ளேயே மேற்கொள்ளப்பட்ட இந்த சீர்திருத்தம் 'எதிர் மத சீர்திருத்தம்' என்று அறியப்பட்டது.

Tags : The Beginning of the Modern Age | History நவீன யுகத்தின் தொடக்கம் | வரலாறு.
9th Social Science : History: The Beginning of the Modern Age : Counter Reformation The Beginning of the Modern Age | History in Tamil : 9th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : நவீன யுகத்தின் தொடக்கம் : எதிர் மத சீர்திருத்த இயக்கம் - நவீன யுகத்தின் தொடக்கம் | வரலாறு : 9 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : நவீன யுகத்தின் தொடக்கம்