Home | 9 ஆம் வகுப்பு | 9வது சமூக அறிவியல் | கீழ்க்கண்ட வினாக்களுக்கு விரிவான விடையளி

நவீன யுகத்தின் தொடக்கம் | வரலாறு | சமூக அறிவியல் - கீழ்க்கண்ட வினாக்களுக்கு விரிவான விடையளி | 9th Social Science : History: The Beginning of the Modern Age

   Posted On :  05.09.2023 07:17 am

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : நவீன யுகத்தின் தொடக்கம்

கீழ்க்கண்ட வினாக்களுக்கு விரிவான விடையளி

9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : நவீன யுகத்தின் தொடக்கம் : புத்தக கேள்விகள் மற்றும் பதில்கள், தமிழ் முக்கியமான கேள்விகள் : கீழ்க்காண்பனவற்றிற்கு விரிவான விடையளி.

VI. கீழ்க்கண்ட வினாக்களுக்கு விரிவான விடையளி

1. மறுமலர்ச்சி, மத சீர்திருத்தம் மற்றும் புவியியல் சார் கண்டுபிடிப்புகள் எவ்வாறு நவீனயுகத்தின் வருகையைப் பறை சாற்றின - விவாதி.

விடை:  

மறுமலர்ச்சி:

செவ்வியல் இலக்கியத்தையும் கலையையும் ஆராய்வதில் பேரார்வமும் உத்வேகமும் தோன்றியது. படைப்பூக்கம் எழுத்துக்கள், கலை, கட்டமானம், இசை ஆகியவற்றில் பிரதிபலித்தது. >

செவ்வியில் இலக்கியப் பிரதிகள் சேகரிக்கப்ப்டடு, அச்சிட்டு வெளியிடப்பட்டது மறுமலர்ச்சி புத்தாக்கங்களுக்கு தூண்டுகோலாய் அமைந்தது.

கலை, அறிவியல் சார் படிப்புகள் இத்தாலிய பல்கலைக்கழகங்களில் புகழ்பெற்று விளங்கியதால் ஐரோப்பா முழுவதிலுமிருந்து மாணவர்கள் திரண்டு சென்றனர். மனித நேய சிந்தனைகளை அறிமுகமானது. பல மனித நேய இலக்கியங்கள் தோன்றின. கலைத்தன்மை மிளிரும் படைப்புகளை உருவாக்கினர்.

மதச் சீர்திருத்தம்:

மறுமலர்ச்சிகால மனித நேயத்தின் தீவிர புத்தார்வ தன்மையும், விமர்சனப்பூர்வமான சிந்தனையும் மக்கள் திருச்சபையின் நடைமுறைகளைக் கேள்வி கேட்பதற்கு உதவின.

எராஸ்மஸ், கர்தாமஸ் மூர் திருச்சபையையும் அதன் ஊழல் மிக்க நடைமுறைகளையும் விமர்சித்து வந்தனர்.

மதச் சீர்த்திருத்தக்காரர்கள் கத்தோலிக்கத் திருச்சபையின் அத்துமீறல்களைக் கோடிட்டு காட்டும் பிரசுரங்களை விநியோகிதிதனர். புத்தகங்களையும் பதிப்பித்தனர்.

• 16ஆம் நூற்றாண்டுக்கு முன்னதாக திருச்சபையை சீர்திருத்த மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியுற்றாலும், பகுத்தறிவின் யுகத்தில் சீர்திருத்தவாதிகளின் முயற்சிகள் தேசிய அரசுகளின் ஆட்சியாளர்களால் ஆதரிக்கப்பட்டன.

புவியியல் சார்ந்த கண்டுபிடிப்புகள் :

மாலுமிகளுக்குப் பயிற்சியளிக்க கடற்பயணப் பள்ளியை, போர்ச்சுக்கல் இளவரசர் ஹென்றி என்ற கடலோடி நிறுவினர்.

நெடுந் தொலைவுக் கடற்பயணத்திற்கான ஆர்வம், புதிய கடல் பகுதிகளில் தேடுதல் நிகழ்த்தும் சாகச உத்வேகம் புத்தார்வத்தினால் தூண்டப்பட்டன.

மார்க்கோபோலே, இபின் பதூரா பயணக் குறிப்புகள், இறைப்பணியாளர்களின் மதம் பரப்பும் எண்ணத்தை மேலும் தீவிரப்படுத்தியது.

கிழக்குக்கும் மேற்குக்கும் இடையே அமைந்த நிலவழிப்பாதையை உதுமானிய துருக்கியர்கள் மூடியதால் ஐரோப்பிய வர்த்தகர்களின் பொருளாதார பாதிப்புக்குள்ளாயிற்று. ஆசியாவுக்கு புதிய கடல்வழிப்பாதை கண்டுபிடிக்க உந்துதலை ஏற்படுத்தியது.

 

2. புவியியல்சார் கண்டுபிடிப்புகளின் விளைவுகள் குறித்து ஆராய்க.

விடை:

புவியியல் சார் கண்டுபிடிப்புகளின் விளைவுகள் :

புவியியல் சார்ந்த கண்டுபிடிப்புகள் உலகைப் பற்றிய ஐரோப்பியப் புரிதலை மாற்றியமைத்தன. உலக வரைபடத்தின் மீள் வரைவுக்கு இட்டுச் சென்றது.

ஐரோப்பாவின் பொருளாதார மையம் இத்தாலிய நகர அரசுகளிலிருந்து ஸ்பெயின், போர்ச்சுக்கல் ஆகிய இரு அரசுகளுக்கு இடம் பெயர்ந்தது.

ஸ்பானியர்கள் மெக்ஸிகோவையும், தென் அமெரிக்காவையும் வெற்றி கொள்ளவும், கூடுதலான ஆய்வுத் தேடல் பயணங்களைத் தொடரவும், வெற்றி கொண்ட பகுதிகளை குடியேற்றங்களாக மாற்றவும் வழி செய்தது.

மரண ஆபத்துமிக்க நோய்கள் ஏற்றுமதியால் அமெரிக்காவின் உள்ளூர் மக்களின் பெருந்திரளான அழிவுக்கு காரணமாய் அமைந்தது.

ஆப்பிரிக்காவிலிருந்து அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்ட அடிமைகள் ஐரோப்பிய நாடுகளால் விலைகொடுத்து வாங்கப்பட்டனர். அட்லாண்டிக் நெடுகிலும் நடைபெற்ற வர்த்தகம் முக்கோண வர்த்தகமானது. இவ்வணிகத்தின் மூலம் ஐரோப்பிய நாடுகள் லாபம் ஈட்டினர்.

வணிகப் புரட்சிக்கு இட்டுச் சென்றன. இப்புரட்சியின் சிறப்பு அம்சங்கள் வங்கிகள், கூட்டுப்பங்கு நிறுவனங்களின் தோற்றம், வர்த்தகத்தின் வளர்ச்சி ஆகும்.


வரலாற்றுடன் வலம் வருக

மாணவர் செயல்பாடுகள்

 1. கொடுக்கப்பட்டுள்ள உலக வரைபடத்தில், கீழ்க்கண்டவர்களின் வழித்தடங்களைக் குறிப்பிடுக.

பார்த்தலோமியோ டயஸ், வாஸ்கோட காமா,கொலம்பஸ், மெகெல்லன்

2. ஐரோப்பிய மாலுமிகளின் படங்களை சேகரி.

3. திசைகாட்டும் கருவியின் மாதிரி ஒன்றைத் தயார் செய்.

4. இடைக்கால ஐரோப்பியர் உருவாக்கிய கப்பலின் மாதிரியை தயார் செய்.

ஆசிரியரின் வழிகாட்டுதலுடன் செய்ய வேண்டியவை

1. இத்தாலியின் தலைசிறந்த கலைப்படைப்புகளை சேகரித்து ஒரு படத்தொகுப்பைத் தயார் செய்க.

2. மார்ட்டின் லூதரின் வாழ்க்கை வரலாற்றை சுருக்கமாக வரைக.

3. அருகேயுள்ள அச்சகத்திற்கு சென்று தொடக்க கால அச்சு இயந்திரத்திற்கும், நவீனகால அச்சு இயந்திரத்திற்கும் உள்ள வேறுபாடுகளை அறிக.

 

மேற்கோள் நூல்கள்

1. கி.. அநுமந்தன் - இடைக்கால நாகரிகத்தின் வரலாறு (கி.பி. (பொ..)476 முதல் 1453 வரை), .பா....கழகம், சென்னை -6(ஆவணப்பதிப்பு - ஆகஸ்ட் 2017).

 2. L.C.A. நௌல்ஸ் - பத்தொன்பதாம் நூற்றாண்டில் கிரேட் பிரிட்டனில் தொழில், வாணிபப் புரட்சிகள், .பா....கழகம், சென்னை -6(ஆவணப்பதிப்பு - ஆகஸ்ட் 2017).

3. Rice Jr., Eugene F. & Anthony Grafton, The Foundations of Early Modern Europe, 1460– 1559,2nd Edition, W.W.Norton & Company: New York (Viva Books), 2004

4. Burns, Edward MacNall, et. al., ed., World Civilizations: Their History and Their Culture, Vol. B, W.W. Norton & Company: New York, Special Indian Edition by GOYL SaaB, New Delhi, 1991

5. Cameron, Euan, ed., Early Modern Europe: An Oxford History, OUP: New Delhi, 2004

6. Koenigsberger, H.G., Early Modern Europe, 1500  -1789, Longman: London, 1989

7. Sinha, Arvind, Europe in Transition:From Feudalism to Industrialization, Manohar: New Delhi, 2017 http./

 

இணையத் தொடர்புகள்

1. https://www.italian-renaissance-art.com/

2. https://www.louvre.fr/en/routes/italian renaissance

 3. https://www.nationalgeographic.com/

archaeology-and-history/magazine/2017/09-10/

history-martin-luther-religious-revolution/

 4. http://www.loc.gov/rr/hispanic/portam/role. html


Tags : The Beginning of the Modern Age | History | Social Science நவீன யுகத்தின் தொடக்கம் | வரலாறு | சமூக அறிவியல்.
9th Social Science : History: The Beginning of the Modern Age : Answer the following in detail The Beginning of the Modern Age | History | Social Science in Tamil : 9th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : நவீன யுகத்தின் தொடக்கம் : கீழ்க்கண்ட வினாக்களுக்கு விரிவான விடையளி - நவீன யுகத்தின் தொடக்கம் | வரலாறு | சமூக அறிவியல் : 9 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : நவீன யுகத்தின் தொடக்கம்