தரவு மாதிரியின் வகைகள், பயனர்களின் வகைகள் - தரவு மாதிரி | 12th Computer Science : Chapter 11 : Database concepts and MySql : Database Concepts

   Posted On :  17.08.2022 07:41 pm

12 வது கணினி அறிவியல் : அலகு 11 : தரவுதள கருத்துருக்கள் மற்றும் MySql : தரவுதள கருத்துருக்கள்

தரவு மாதிரி

தரவு மாதிரி, முழுமையான செயல்பாட்டிற்குப் பிறகு ஒரு மென்பொருளில் இருந்து தரவு எவ்வாறு பெறப்படுகிறது என்பதை விளக்குகிறது.

தரவு மாதிரி

தரவு மாதிரி, முழுமையான செயல்பாட்டிற்குப் பிறகு ஒரு மென்பொருளில் இருந்து தரவு எவ்வாறு பெறப்படுகிறது என்பதை விளக்குகிறது.

• இது சிக்கலான நிகழ் உலக தரவு சேகரிக்கும் சூழலை எளிமையாக்குகிறது.

• தரவு மாதிரியின் முக்கிய நோக்கம், இறுதி மென்பொருள், அதன் முழுமையான உருவாக்கத்திற்குப் பிறகு எவ்வாறு இருக்கும் என்பதற்கான ஒரு மாதிரியைத் தருகிறது.


1. தரவு மாதிரியின் வகைகள்

தரவு மாதிரியின் பல்வேறு வகைகள் பின்வருமாறு

1. படிநிலை தரவுதள மாதிரி (Hierarchical Model)

2. உறவுநிலை தரவுதள மாதிரி (Relational Model)

3. வலையமைப்பு தரவுதள மாதிரி (Network Model)

4. ER தரவுதள மாதிரி (Entity Relationship Model)

5. பொருள்நோக்கு தரவுதள மாதிரி (Object Model)

1. படிநிலை மாதிரி

இது IBM - ஆல் தகவல் மேலாண்மை அமைப்பு Information Management System போல உருவாக்கப்பட்டது. இந்த மாதிரியில் தரவு எளிமையான மரக்கிளை அமைப்பில் குறிப்பிடப்படுகிறது. இது ஒன்றிலிருந்து பல (one to many) உறவு நிலையை குறிக்கிறது. (Parent - child) அதாவது பெற்றோர் - குழந்தை உறவுநிலை. ஒரு குழந்தைக்கு ஒரு பெற்றொர் இருப்பர். ஆனால், ஒரு பெற்றோருக்கு பல குழந்தைகள் இருக்கலாம். இது முக்கியமாக IBM தலைமைக் கணிப்பொறியில் பயன்படுகிறது.


2. உறவுநிலை மாதிரி

உறவுநிலை தரவுதள மாதிரி முதன்முதலில் E.F.Codd என்பவரால் 1970-ல் உருவாக்கப்பட்டது. தற்போது உலகம் முழுவதும் தரவுதள பயன்பாடுகளில் இத்தரவுதள மாதிரி பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

உறவுநிலை தரவுதள மாதிரியில் தரவுகளின் அடிப்படை கட்டமைப்பு அட்டவணைகள் (உறவுகள்) ஆகும். ஒரு குறிப்பிட்ட வகையை சார்ந்த அனைத்து தகவல்களும் அவ்வட்டவணையின் வரிசைகளில் சேமிக்கப்படுகின்றன. எனவே, அட்டவணைகளை உறவுநிலை தரவுதள மாதிரியில் உறவுகள் (Relation) என்கிறோம். ஒரு உறவுநிலை தரவுகோல் குறிப்பிட்ட வரிசையிலான தரவுகளை தனித்தன்மையுடன் குறிக்கும் ஒரு பண்புக்கூறு ஆகும்.


3. வலையமைப்பு மாதிரி

வலையமைப்பு தரவுத்தள மாதிரி படிநிலை தரவுத்தள மாதிரியின் விரிவாக்கப்பட்ட அமைப்பாகும். படிநிலை மற்றும் வலையமைப்பு மாதிரிக்கும் இடையே உள்ள வேறுபாடு. .

• படிநிலை மாதிரியில், ஒரு குழந்தை பதிவு ஒரே ஒரு பெற்றோர் முனையத்தை மட்டுமே கொண்டிருக்கும்.

• வலையமைப்பு மாதிரியில் ஒரு குழந்தைக்கு பல பெற்றோர் முனையங்கள் இருக்கலாம். இது தரவை பலவற்றிலிருந்து பலவற்றிற்கு (many to many) உறவு நிலையை குறிப்பிடுகிறது

• வலையமைப்பு மாதிரி எளிமையாகவும், விரைவாகவும் தரவுகளை அணுக பயன்படுகிறது


School என்பது பெற்றோர் முனையத்தை குறிக்கும்

Library, Office மற்றும் Staff room என்பன school- ன் குழந்தைகளாகும் (பெற்றோர் முனையம்)

Student என்பது library, office மற்றும் staff room என்பதன் குழந்தை (ஒன்றிலிருந்து பலவற்றிற்கான உறவுநிலை)

4. ER தரவுதள மாதிரி (Entity Relationship Model)

இந்த தரவு மாதிரியில், பொருளை உருப்படியாகவும் அதன் பண்புகளை, பண்புக் கூறுகளாகவும் பிரித்து உறவு நிலை உருவாக்கப்படுகிறது. 1976ல் Chen சென் என்பவரால் உருவாக்கப்பட்டது. இந்த மாதிரி தரவுத்தளத்திற்கான கருத்து வடிவமைப்பை உருவாக்க பயன்படுகிறது. தரவின் விளக்கப்படத்தை வடிவமைக்க மிகவும் எளிமையாக உள்ளது. ER மாதிரியைக் கொண்டு நிரலர் அமைப்பை எளிமையாக புரிந்து கொள்ள முடியும். செவ்வகம் உருப்படிகளைக் குறிக்கிறது. எடுத்துக்காட்டு Doctor, Patient நீள்வட்டம் பண்புக் கூறுகளைக் குறிக்கிறது. எடுத்துக்காட்டாக D-id, D-Name, P-id, P-Name பண்புக்கூறுகள் பண்பியல்புகளை விளக்குகிறது. ஒவ்வொரு உருப்படியும் தரவுத்தளத்தில் சேமிக்கப்பட்ட தரவின் முக்கிய பகுதியாகிறது. டைமண்ட் ER படங்களின் உறவுநிலையைக் குறிப்பிடுகிறது. எடுத்துக்காட்டு Doctor, Patient யை பரிசோதனை செய்கிறார்.


5. பொருள்நோக்கு தரவுதள மாதிரி (Object Model)

இந்த மாதிரியானது தரவை பொருள்கள், பண்புக்கூறுகள், வழிமுறைகள், இனக்குழு மற்றம் மரபுரிமம் போன்ற வழிகளில் சேமிக்கிறது. இது மிகவும் சிக்கலான பயன்பாடுகளான புவியியல் தகவல் (GIS- Geographic Information System) அறிவியல் சோனதைகள் (Scientific experiments) பொறியியல் வடிவமைப்பு (Engineeringdesign) உற்பத்தி (Manufacturing) போன்றவற்றைக் கையாள்கிறது. இது கோப்பு மேலாண்மை அமைப்பில் பயன்படுகிறது. நிகழ்உலக பொருள்கள், பண்புக்கூறுகள், பண்பியல்புகளை குறிப்பிடுகிறது மற்றும் தெளிவான கூறுநிலை (modular structure) அமைப்பை வழங்குகிறது. இதில் ஏற்கனவே உள்ள குறிமுறையை எளிதாகப் பராமரிக்கவும், மாற்றி அமைக்கவும் முடியும்.


பொருள்நோக்கு தரவுதள மாதிரியின் எடுத்துக்காட்டு Shape, Circle, Rectangle மற்றும் Triangle ஆகியவை இந்த மாதிரியில் உள்ள பொருள்களாகும்.

Circle என்பது radius என்ற பண்புக்கூற்றையும்,

Rectangle என்பது length மற்றும் breath என்ற பண்புக்கூறுகளையும்,

Triangle என்பது base மற்றும் height என்ற பண்புக்கூறுகளையும் கொண்டுள்ளன.

• Circle, Rectangle மற்றும் Triangle ஆகிய பொருள்கள் Shape என்ற பொருளில் இருந்து தருவிக்கப்பட்டவைகளாகும்.


2. DBMS பயனர்களின் வகைகள்

தரவுத்தள நிர்வாகிகள் (DBA- Data Base Administrator)

தரவுத்தள நிர்வாகி அல்லது DBA என்பவர் முழுதரவுத்தள மேலாண்மை அமைப்பையும் நிர்வகிப்பவர் ஆவார். இவர் DBMS பாதுகாப்பு, உரிமங்களை நிர்வகித்தல், பயனர் கணக்குகள் மற்றும் அணுகல்களை நிர்வகித்தல் போன்றவற்றை கவனித்துக் கொள்கிறார்.

பயன்பாட்டு நிரலர்கள் அல்லது மென்பொருள் உருவாக்குபவர்கள்

இந்த பயனர்கள் DBMSன் பகுதிகளை உருவாக்குதல் மற்றும் வடிவமைத்தல் போன்ற வேலைகளில் ஈடுபடுகிறார்கள்.

இறுதி நிலைப்பயனர்

அனைத்து நவீன பயன்பாடுகளிலும், வலை அல்லது கைபேசி, பயனர் தரவுகளைச் சேமிக்கிறது . பயனர் தரவுகள் (User data) சேகரிக்கப்பட்டு சேவையகத்தில் இயங்குகின்ற DBMS அமைப்பில் சேமிக்கப்படும் வகையில் பயன்பாடுகள் நிரலாக்கப்பட்டுள்ளன. இந்த பயனர்கள் தரவை சேமித்தல், திரும்ப பெறுதல், புதுப்பித்தல் மற்றும் நீக்குதல் போன்ற பல்வேறு செயல்களை கையாள்கிறார்கள்.

தரவுத்தள வடிவமைப்பாளர்கள்

இவர்கள் தரவுத்தளத்தில் சேமிக்கப்படுகின்ற தரவுகளை கண்டறிந்து சரியான கட்டமைப்பை தேர்வு செய்து தரவை குறிப்பிடுவதற்கும் சேமிப்பதற்குமான பொறுப்பாளர்கள் ஆவர்

Tags : Types, DBMS Users தரவு மாதிரியின் வகைகள், பயனர்களின் வகைகள் .
12th Computer Science : Chapter 11 : Database concepts and MySql : Database Concepts : Data Model Types, DBMS Users in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 வது கணினி அறிவியல் : அலகு 11 : தரவுதள கருத்துருக்கள் மற்றும் MySql : தரவுதள கருத்துருக்கள் : தரவு மாதிரி - தரவு மாதிரியின் வகைகள், பயனர்களின் வகைகள் : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 வது கணினி அறிவியல் : அலகு 11 : தரவுதள கருத்துருக்கள் மற்றும் MySql : தரவுதள கருத்துருக்கள்