தரவுதள கருத்துருக்கள் மற்றும் MySql - தரவுதள கருத்துருக்கள்: பின்வரும் கேள்விகளுக்கு பதில் அளிக்கவும் | 12th Computer Science : Chapter 11 : Database concepts and MySql : Database Concepts
கணினி அறிவியல் : தரவுதள கருத்துருக்கள்
மதிப்பீடு
பகுதி – அ
சரியான விடையை தேர்ந்தெடுத்து
எழுதுக (1 மதிப்பெண்)
1. DBMS -ன் விரிவாக்கம்?
அ)
DataBase Management Symbol
ஆ)
Database Managing System
இ)
DataBase Management System
ஈ)
DataBasic Management System
விடை : இ)
DataBase Management System
2. ஒரு அட்டவணை என்பது
அ)
வரிசை (tuple)
ஆ)
பண்புக்கூறுகள் (attribute)
இ)
உறவுகள் (relation)
ஈ)
அமைப்பு (entity)
விடை : இ) உறவுகள்
(relation)
3. எந்த தரவுத்தள மாதிரி பெற்றோர்
குழந்தை உறவுநிலையை குறிப்பிடுகிறது?
அ)
உறவுநிலை
ஆ)
வலையமைப்பு
இ)
படிநிலை
ஈ)
பொருள்
விடை: இ) படிநிலை
4. உறவுநிலை தரவுத்தள மாதிரி முதலில்
யாரால் முன்மொழியப்பட்டது?
அ)
E F Codd
ஆ)
E E Codd
இ)
E F Cadd
ஈ)
E F Codder
விடை : அ) E F
Codd
5. படிநிலை மாதிரி எந்த வகை உறவுநிலையை
குறிப்பிடுகிறது?
அ)
ஒன்று ஒன்று
ஆ)
ஒன்று பல
இ)
பல ஒன்று
ஈ)
பல பல
விடை: ஆ) ஒன்று
பல
6. உறவுநிலை தரவுத்தளத்தின் தந்தை
என்று அழைக்கப்படுபவர் யார்?
அ)
Chris Date
ஆ)
Hugh Darween
இ)
Edgar Frank Codd
ஈ)
Edgar Frank Cadd
விடை : இ)
Edgar Frank Codd
7. பின்வருவனவற்றுள் எது
RDBMS?
அ)
Dbase
ஆ)
Foxpro
இ)
Microsoft Access
ஈ)
SQLite
விடை : ஈ)
SQLite
8. SELECT கூற்றுக்கு பயன்படும்
சின்னம் எது?
அ)
σ
ஆ)
II
இ)
X
ஈ)
Ω
விடை : அ) σ
9. ஒரு tuple என்பது
அ)
table
ஆ)
row
இ)
attribute
ஈ)
field
விடை : ஆ) row
10. ER மாதிரியை உருவாக்கியவர்
யார்?
அ)
Chen
ஆ)
EF Codd
இ)
Chend
ஈ)
Chand
விடை : அ) Chen
பகுதி - ஆ
அனைத்து வினாக்களுக்கும்
விடையளி (2 மதிப்பெண்கள்)
1. தரவுத்தளத்திற்கான சில எடுத்துக்காட்டுகளைக்
குறிப்பிடுக.
விடை . (i) Foxpro
(ii) DBase
(iii) ADABAS
(iv) Microsoft Excel
(v) Microsoft Square
(vi) Oracle RDBMS
(vii) My SQL
2. RDBMS-ன் சில எடுத்துக்காட்டுகளைப்
பட்டியலிடுக.
விடை. (i) IBM DBZ
(ii) Microsoft SQL Server
(iii) Microsoft Jet Database Engine
(iv) My SQL (v) Oracle
(vi). SQLite
3. தரவு நிலைத் தன்மை என்றால்
என்ன?
விடை: தரவு நிலைத்தன்மை என்பது தரவுத்தளத்தில் அனைத்து இடங்களிலும் ஒத்த
மதிப்புடைய தரவுகளாகும்.
4. படிநிலை மற்றும் வலையமைப்பு
தரவு மாதிரிக்கும் இடையே உள்ள வேறுபாடு என்ன?
படிநிலை
படிநிலை மாதிரி ஒன்று ஒன்று உறவுநிலையைக் கொண்ட மரக்கிளை போன்ற கட்டமைப்பு
உடையது. இது பெற்றோர் குழந்தை உறவுநிலை எனவும் அழைக்கப்படுகிறது.
வலையமைப்பு
வலையமைப்பு மாதிரி- இது படிநிலை மாதிரி போன்றதாகும். ஆனால் இது ஒன்றுக்கு
மேற்பட்ட பெற்றோரை கொண்டிருக்க அனுமதிக்கிறது.
5. இயல்பாக்கம் என்றால் என்ன?
விடை. இயல்பாக்கம் என்பது தரவுதள கட்டமைப்பானது பொதுப்பயன்பாட்டு வினவலுக்குப்
பொருத்தமாக இருத்தல் மற்றும் தரவு ஒருமைப்பாட்டின் இழப்பிற்கு வழிவகுக்கக்கூடிய உட்புகுத்தல்,
புதுப்பித்தல் மற்றும் நீக்குதல் ஆகியவற்றின் ஒழுங்கின்மைகளை உருவாக்கும் விரும்பத்தக்கான
சில பண்புருக்களை நீக்குதல் ஆகியவற்றுக்கு உறுதியளிக்கும் முறைப்படுத்தப்பட்ட வழிமுறை
ஆகும்.
பகுதி - இ
அனைத்து வினாக்களுக்கும்
விடையளி (3 மதிப்பெண்கள்)
1. Select மற்றும் Project செயற்பாடுகளின்
வேறுபாடுகள் யாவை?
படிநிலை / வலையமைப்பு
1. (Select-ன் symbol : 0 Project -ன் symbol : 11 2. இந்த select இந்த Project செயற்பாடு ஒரு செயற்பாடு நிபந்தனையின் குறிப்பிடப்பட்டுள்ள அடிப்படையில் உள்ளீடு தொடர்புகளின் துணைத் தொகுதியை பண்புக் கூறுகளை tuples களுடன் நீக்குகிறது. தேர்ந்தெடுக்க உதவுகிறது. நிபந்தனைகளை இந்த செயற்பாடு திருப்திபடுத்தாத கிடக்கை துணைத் tuples களை select தொகுதியின் வடிகட்டுகிறது. ஒப்பீடுகளை வரையறுக்கிறது.
2. DBAவின் பணி என்ன?
விடை தரவுத்தள நிர்வாகி அல்லது DBA என்பவர் முழு தரவுத்தள மேலாண்மை அமைப்பையும்
நிர்வகிப்பவர் ஆவார். இவர் DBMS பாதுகாப்பு, உரிமங்களை நிர்வகித்தல், பயனர் கணக்குகள்
மற்றும் அணுகல்களை நிர்வகித்தல் போன்றவற்றை கவனித்துக் கொள்கிறார்.
3. கார்டீசியன் பெருக்கலை பொறுத்தமான
எடுத்துக்காட்டுடன் விளக்குக.
விடை. (i) இரண்டு தொடர்புகளை சேர்க்க குறுக்குப் பெருக்கல் வழிவகுக்கிறது.
இதன் விடை இரண்டு தொடர்புகளின் இணைப்பைக் கொண்டுள்ளது.
(ii) A x B என்பது A times B, இங்கு A தொடர்புகள் மற்றும் B தொடர்புகள் என்பன வேறுபட்ட
பண்புக்கூறுகளாகும். இந்த வகை செயற்பாடுகள் இரண்டு தொடர்புகளிலிருந்து நெடுக்கைகளை
ஒன்று சேர்க்க பயன்படுகிறது.
4. பொருள் மாதிரியை எடுத்துக்காட்டுடன் விளக்குக.
விடை. (i) இந்த மாதிரியானது தரவை பொருள்கள், பண்புக்கூறுகள், வழிமுறைகள்,
இனக்குழு மற்றும் மரபுரிமம் போன்ற வழிகளில் சேமிக்கிறது.
(ii) இது மிகவும் சிக்கலான பயன்பாடுகளான புவியியல் தகவல் அமைப்பு (GIS-Geographic
Information System) அறிவியல் சோதனைகள் (Scientific experiments) பொறியியல் வடிவமைப்பு
(Engineering design) உற்பத்தி (Manufacturing) போன்றவற்றைக் கையாள்கிறது. இது கோப்பு
மேலாண்மை அமைப்பில் பயன்படுகிறது.
(iii) நிகழ்உலக பொருள்கள், பண்புக்கூறுகள், பண்பியல்புகளை குறிப்பிடுகிறது
மற்றும் தெளிவான கூறுநிலை (modular structure) அமைப்பை வழங்குகிறது. இதில் ஏற்கனவே
உள்ள குறிமுறையை எளிதாகப் பராமரிக்கவும், மாற்றி அமைக்கவும் முடியும்.
(iv) பொருள்நோக்கு தரவுதள மாதிரியின் எடுத்துக்காட்டு Shape,
Circle, Rectangle மற்றும் Triangle ஆகியவை இந்த மாதிரியில் உள்ள பொருள்களாகும்.
(i) Circle என்பது radius என்ற பண்புக்கூற்றையும்,
(ii) Rectangle என்பது length மற்றும் breath என்ற பண்புக்கூறுகளையும்,
(iii) Triangle என்பது base மற்றும் height என்ற பண்புக்கூறுகளையும்
கொண்டுள்ளன.
(iv) Circle, Rectangle மற்றும் Triangle ஆகிய பொருள்கள் Shape என்ற
பொருளில் இருந்து தருவிக்கப்பட்டவைகளாகும்.
5. RDMS-ன் பல்வேறு வகையான பயனர்களைப்
பற்றி குறிப்பு வரைக.
விடை. DBMS பயனர்களின் வகைகள் :
(i) தரவுத்தள நிர்வாகிகள் (DBA- Data Base Administrator) : தரவுத்தள
நிர்வாகி அல்லது DBA என்பவர் முழு தரவுத்தள மேலாண்மை அமைப்பையும் நிர்வகிப்பவர் ஆவார்.
இவர் DBMS பாதுகாப்பு, உரிமங்களை நிர்வகித்தல், பயனர் கணக்குகள் மற்றும் அணுகல்களை
நிர்வகித்தல் போன்றவற்றை கவனித்துக் கொள்கிறார்.
(ii) பயன்பாட்டு நிரலர்கள் அல்லது மென்பொருள் உருவாக்குபவர்கள்: இந்த
பயனர்கள் DBMSன் பகுதிகளை உருவாக்குதல் மற்றும் வடிவமைத்தல் போன்ற வேலைகளில் ஈடுபடுகிறார்கள்.
(iii) இறுதி நிலைப்பயனர் : அனைத்து நவீன பயன்பாடுகளிலும், வலை அல்லது
கைபேசி, பயனர் தரவுகளைச் சேமிக்கிறது . பயனர் தரவுகள் (User data) சேகரிக்கப்பட்டு
சேவையகத்தில் இயங்குகின்ற DBMS அமைப்பில் சேமிக்கப்படும் வகையில் பயன்பாடுகள் நிரலாக்கப்பட்டுள்ளன.
இந்த பயனர்கள் தரவை சேமித்தல், திரும்ப பெறுதல், புதுப்பித்தல் மற்றும் நீக்குதல் போன்ற
பல்வேறு செயல்களை கையாள்கிறார்கள்.
(iv) தரவுத்தள வடிவமைப்பாளர்கள்: இவர்கள் தரவுத்தளத்தில் சேமிக்கப்படுகின்றதரவுகளை
கண்டறிந்து சரியான கட்டமைப்பை தேர்வு செய்து தரவை குறிப்பிடுவதற்கும் சேமிப்பதற்குமான
பொறுப்பாளர்கள் ஆவர்.
பகுதி - ஈ
அனைத்து வினாக்களுக்கும்
விடையளி (5 மதிப்பெண்கள்)
1. தரவு மாதிரியின் பல்வேறு வகைகளை
விளக்குக.
விடை. தரவு மாதிரியின் வகைகள் :
1. படிநிலை மாதிரி :
(i) இது IBM-ஆல் தகவல் மேலாண்மை அமைப்பு Information Management
System போல உருவாக்கப்பட்டது. இந்த மாதிரியில் தரவு எளிமையான மரக்கிளை அமைப்பில் குறிப்பிடப்படுகிறது.
(ii) இது ஒன்றிலிருந்து பல (one to many) உறவு நிலையை குறிக்கிறது.
(Parent - child) அதாவது பெற்றோர் - குழந்தை உறவுநிலை. ஒரு குழந்தைக்கு ஒருபெற்றோர்
இருப்பர். ஆனால், ஒரு பெற்றோருக்கு பல குழந்தைகள் இருக்கலாம். இது முக்கியமாக IBM தலைமைக்
கணிப்பொறியில் பயன்படுகிறது.
2. உறவுநிலை மாதிரி :
(i) உறவுநிலை தரவுதள மாதிரி முதன்முதலில் E.F.Codd என்பவரால் 1970-ல்
உருவாக்கப்பட்டது. தற்போது உலகம் முழுவதும் தரவுதள பயன்பாடுகளில் இத்தரவுதள மாதிரி
பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
(ii) உறவுநிலை தரவுதள மாதிரியில் தரவுகளின் அடிப்படை கட்டமைப்பு அட்டவணைகள்
(உறவுகள்) ஆகும்.
(iii) ஒரு குறிப்பிட்ட வகையை சார்ந்த அனைத்து தகவல்களும் அவ்வட்டவணையின்
வரிசைகளில் சேமிக்கப்படுகின்றன.
(iv) எனவே, அட்டவணைகளை உறவுநிலை தரவுதள மாதிரியில் உறவுகள்
(Relation) என்கிறோம். ஒரு உறவுநிலை தரவுகோல் குறிப்பிட்ட வரிசையிலான தரவுகளை தனித்தன்மையுடன்
குறிக்கும் ஒரு பண்புக்கூறு ஆகும்.
3. வலையமைப்பு மாதிரி :
(i) வலையமைப்பு தரவுத்தள மாதிரி படிநிலை தரவுத்தள மாதிரியின் விரிவாக்கப்பட்ட
அமைப்பாகும். படிநிலை மற்றும் வலையமைப்பு மாதிரிக்கும் இடையே உள்ள வேறுபாடு.
(ii) வலையமைப்பு மாதிரியில் ஒரு குழந்தைக்கு பல பெற்றோர் முனையங்கள்
இருக்கலாம். இது தரவை பலவற்றிலிருந்து பலவற்றிற்கு (many to many) உறவு நிலையை குறிப்பிடுகிறது.
(iii) School என்பது பெற்றோர் முனையத்தை குறிக்கும்.
(iv) Library, Office LML Staff room என்பன school- ன் குழந்தைகளாகும்
பெற்றோர் முனையம்)..
(v) Student என்ப து library, office மற்றும் staff room என்பதன் குழந்தை
(ஒன்றிலிருந்து பலவற்றிற்கான உறவுநிலை).
4. ER தரவுதள மாதிரி :
(i) இந்த தரவு மாதிரியில், பொருளை உருப்படியாகவும் அதன் பண்புகளை, பண்புக்
கூறுகளாகவும் பிரித்து உறவு நிலை உருவாக்கப்படுகிறது. 1976ல் Chen சென் என்பவரால் உருவாக்கப்பட்டது.
(ii) இந்த மாதிரி தரவுத்தளத்திற்கான கருத்து வடிவமைப்பை உருவாக்க பயன்படுகிறது.
தரவின் விளக்கப்படத்தை வடிவமைக்க மிகவும் எளிமையாக உள்ளது.
(iii) ER மாதிரியைக் கொண்டு நிரலர் அமைப்பை எளிமையாக புரிந்து கொள்ள
முடியும். செவ்வகம் உருப்படிகளைக் குறிக்கிறது.
(iv) எடுத்துக்காட்டு Doctor, Patient நீள்வட்டம் பண்புக் கூறுகளைக்
குறிக்கிறது.
(v) எடுத்துக்காட்டாக D-id, D-Name, P-id, P-Name பண்புக்கூறுகள் பண்பியல்புகளை
விளக்குகிறது.
5. பொருள்நோக்கு தரவுதள மாதிரி
(i) இந்த மாதிரியானது தரவை பொருள்கள், பண்புக்கூறுகள், வழிமுறைகள்,
இனக்குழு மற்றும் மரபுரிமம் போன்ற வழிகளில் சேமிக்கிறது.
(ii) இது மிகவும் சிக்கலான பயன்பாடுகளான புவியியல் தகவல் அமைப்பு
(GISGeographic Information System) அறிவியல் - சோதனைகள் (Scientific experiments)
பொறியியல் வடிவமைப்பு (Engineering design) உற்பத்தி (Manufacturing) போன்றவற்றைக்
கையாள்கிறது. இது கோப்பு மேலாண்மை அமைப்பில் பயன்படுகிறது.
(iii) நிகழ்உலக பொருள்கள், பண்புக்கூறுகள், பண்பியல்புகளை குறிப்பிடுகிறது
மற்றும் தெளிவான கூறுநிலை (modular structure) அமைப்பை வழங்குகிறது.
பொருள்நோக்கு தரவுதள மாதிரி பொருள்நோக்கு தரவுதள மாதிரியின் எடுத்துக்காட்டு
Shape, Circle, Rectangle மற்றும் Triangle ஆகியவை இந்த மாதிரியில் உள்ள பொருள்களாகும்.
2. உறவுநிலையின் வகைகளை விவரி.
விடை. தரவுத்தளத்தில் பயன்படும் உறவுநிலைகளின் வகைகள்.
1. ஒன்றுடன் ஒன்று உறவுநிலை (One-to-One Relationship)
2. ஒன்றுடன் பல உறவுநிலை (One-to-Many Relationship)
3. பலவற்றுடன் ஒன்று உறவுநிலை (Many-to One Relationship)
4. பலவற்றுடன் பல உறவுநிலை (Many-to Many Relationship)
1. ஒன்றுடன் ஒன்று உறவுநிலை :
(i) இந்த உறவுநிலையில், ஒரு பொருள் வேறு ஒரு பொருளுடன் மட்டுமே தொடர்பு
கொண்டிருக்கும். ஒரு அட்டவணையின் ஒரு பதிவு மற்றொரு அட்டவணையின் ஒரு பதிவுடன் மட்டுமே
இணைக்கப்பட்டிருக்கும்.
(ii) எடுத்துக்காட்டு: ஒரு மாணவனுக்கு ஒரு தேர்வெண் மட்டுமே இருக்க
முடியும்.
2. ஒன்றுடன் பல உறவுநிலை :
(i) இந்த உறவுநிலையில் ஒரு பொருள் வேறு பல பொருள்களுடன் தொடர்பு கொண்டிருக்கும்.
அட்டவணை A-வின் ஒரு பதிவு அட்டவணை B யின் பல பதிவுகளுடன் தொடர்பு கொண்டிருக்கலாம்.
(ii) ஆனால் அட்டவணை Bயின் ஒரு பதிவு அட்டவணை A-வின் ஒரு பதிவுடன் மட்டுமே
தொடர்பு கொண்டிருக்க முடியும்.
(iii) எடுத்துக்காட்டு: ஒரு துறை ஊழியர்களைக் கொண்டுள்ளது.
3. பலவற்றுடன் ஒன்று உறவுநிலை :
(i) இந்த உறவுநிலையில் பல பொருள்கள் வேறு ஒரேயொரு பொருள்களுடன் மட்டுமே
தொடர்பு கொண்டிருக்கும்.
(ii) எடுத்துக்காட்டு: ஒரு துறையில் வேலை செய்யும் ஊழியர்களின் எண்ணிக்கையில்,
ஊழியர்கள் அட்டவணையின் பல பதிவுகள் துறை அட்டவணையின் ஒரு பதிவுடன் மட்டுமே தொடர்பு
படுத்தப்பட்டிருக்கும்.
4. பலவற்றுடன் பல உறவுநிலை :
(i) இந்த உறவுநிலையில் ஒரு அட்டவணையில் உள்ள பல பதிவுகள் மற்றொரு அட்டவணையில்
உள்ள பல பதிவுகளுடன்தொடர்பு கெண்டிருக்கும்.
(ii) எடுத்துக்காட்டு 1: நுகர்வோர் மற்றும் விலை பொருள்: நுகர்வோர்
பல விலைப்பொருள்களை வாங்குகிறார் மற்றும் விலைப்பொருள்கள் பல நுகர்வோரால் வாங்கப்படலாம்.
(iii) எடுத்துக்காட்டு 2: மாணவர்கள் மற்றும் பாடப்பிரிவுகள்: ஒரு மாணவன்
பல பிரிவுகளில் பதியலாம் மற்றும் ஒரு பாடப்பிரிவு பல மாணவர்களைக் கொண்டிருக்கலாம்.
(iv) எடுத்துக்காட்டு 3: புத்தகங்கள் மற்றும் மாணவன்: நூலகத்தில் உள்ள
பல புத்தகங்கள் பல மாணவர்களுக்கு வழங்கப்படும்.
3. DBMS மற்றும் RDBMS வேறுபடுத்துக.
4. ஒட்டுதல், வெட்டுதல், வேறுபாடு
மற்றும் கார்டீசியன் பெருக்கல் போன்றவற்றை பொருத்தமான எடுத்துக்காட்டுடன் விளக்குக.
விடை. உறவுநிலை - இயற்கணிதம் பல்வேறு தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
ஒரும உறவுநிலைச் செயற்பாடுகள்
SELECT ( symbol : σ)
PROJECT (symbol : ∏)
Set தேற்றத்தில் இருந்து உறவுநிலை இயற்கணித செயற்பாடுகள்
* ஒட்டுதல் (∪)
* வெட்டுதல் (∩)
* வேறுபாடு (-)
* கார்டீசியன் பெருக்கல் (X)
SELECT ( symbol :σ)
(i) பொதுவடிவம் σc (R): என்பது உறவுநிலை மற்றும் அதனுடைய பண்புக்கூறுகளின்
நிபந்தனை C.
(ii) இந்த select செயற்பாடு ஒரு நிபந்தனையின் அடிப்படையில் துணைத் தொகுதியை
tuples களுடன் தேர்ந்தெடுக்க உதவுகிறது.
(iii) நிபந்தனைகளை திருப்திபடுத்தாத tuples களை Select வடிகட்டுகிறது.
PROJECT (symbol : ∏)
(i) இந்த PROJECT செயற்பாடு குறிப்பிடப்பட்டுள்ள உள்ளீடு தொடர்புகளின்
பண்புக்கூறுகளை நீக்குகிறது. இந்த செயற்பாடு கிடக்கை துணைத் தொகுதியின் ஒப்பீடுகளை
வரையறுக்கிறது.
(ii) எடுத்துக்காட்டு 1 அட்டவணை 11.1 ஐ பயன்படுத்தி
எடுத்துக்காட்டு 2 (அட்டவணை A)
ஒட்டுதல் (∪)
(i) இது A அல்லது B அட்டவணையில் உள்ள அனைத்து tuples-களையும் உள்ளடக்கியது.
இது நகல்களையும் நீக்குகிறது. தொகுதி A ஒட்டுதல் தொகுதி B என்பது
AUB ppppppppppppppp
(ii) எடுத்துக்காட்டு 3 ( அட்டவணை A ஐ பயன்படுத்தி பின்வரும் அட்டவணையை
நோக்குக.
வேறுபாடு (Symbol:-)
(i) இது A மற்றும் B அட்டவணைகளை ஒப்பிட்டு A அட்டவணையில் உள்ள வேறுபட்ட
tuples களை மட்டும் தருகிறது. B அட்டவணையைத் தவிர்க்கிறது. A பண்புக்கூறின் பெயர்
B பண்புக்கூறின் பெயரோடு பொருந்த வேண்டும்.
(ii) எடுத்துக்காட்டு 4 (அட்டவணை Bஐ பயன்படுத்தி)
விடை :
வெட்டு (symbol : (∩) ) A∩B :
(i) இது A மற்றும் B அட்டவணைகளில் பொதுவாக உள்ள அனைத்து tuplesகளையும்
உள்ளடக்கியது.
(ii) எடுத்துக்காட்டு 5 (அட்டவணை Bஐ பயன்படுத்தி)
கார்டீசியன் பெருக்கல் (Symbol : X)
(i) இரண்டு தொடர்புகளை சேர்க்க குறுக்குப் பெருக்கல் வழிவகுக்கிறது.
இதன் விடை இரண்டு தொடர்புகளின் இணைப்பைக் கொண்டுள்ளது.
(ii) A x B என்பது A times B, இங்கு A தொடர்புகள் மற்றும் B தொடர்புகள்
என்பன வேறுபட்ட பண்புக்கூறுகளாகும். இந்த வகை செயற்பாடுகள் இரண்டு தொடர்புகளிலிருந்து
நெடுக்கைகளை ஒன்று சேர்க்க பயன்படுகிறது.
5. DBMS ன் பண்பியல்புகளை விளக்குக.
அட்டவணைகளில் சேமிக்கப்பட்ட தரவுகள்
தரவுதளத்தில், தரவு எப்பொழுதும் நேரடியாக சேமிக்கப்படுவதில்லை . தரவு
தளத்தின் உள்ளே உருவாக்கப்பட்டுள்ள அட்டவணையில் தரவுகள் சேமிக்கப்பட்டிருக்கும். அட்டவணைகளுக்கு
இடையே உறவுகளை ஏற்படுத்த DBMS அனுமதிக்கிறது. இது தரவுகளை மேலும் அர்த்தமுள்ளதாகவும்,
தொடர்புடையதாகவும் அமைக்கிறது.
மிகைமை (தேவைக்கு அதிகமானவற்றை குறைத்தல்
நவீன உலகில் வன்வட்டுகளின் விலை மிகவும் குறைவு. ஆனால் முந்தைய காலங்களில்
வன்வட்டுகள் மிகவும் விலை உயர்ந்தவை, ஆகையால் தரவுதளத்தில் உள்ள தேவையற்ற தரவுகள் பெரிய
சிக்கலாக இருந்தது. ஆனால் DBMS தரவுகளை பிரித்தாளும் இயல்பு நிலையைப் பின்பற்றி தேவையற்ற
தரவுகள் மீண்டும் இடம்பெறுவதைக் குறைக்கிறது.
தரவுகளின் நிலைத்தன்மை
தொடர்ச்சியாக புதுப்பிக்கப்படும் மற்றும் பராமரிக்கப்படும் நேரடி தரவின்
(Live data) நிலைத்தன்மையை பராமரிப்பது ஒரு சவாலாக மாறும். ஆனால் DBMS தானாகவே அதை
கையாளுகிறது.
பல பயனர்கள் மற்றும் ஒத்த அணுகுதலை ஆதரித்தல்
DBMS பல பயனர்களை ஒரே நேரத்தில் ஒரு தரவின் மீது வேலை (தரவுகளைப் புதுப்பித்தல்,
செருகுதல், நீக்குதல்) செய்ய அனுமதிக்கிறது. இருப்பினும் தரவின் நிலைத்தன்மைப் பராமரிப்பை
கையாளுகிறது.
வினவல் மொழி
DBMS ஒரு எளிய வினவல் மொழியை பயனருக்கு வழங்குகிறது. இதைப்பயன்படுத்தி
தரவுத்தளத்திலிருந்து தரவுகளை எளிமையாக பெறவும், சேர்க்கவும், நீக்கவும், புதுப்பிக்கவும்
முடியும்.
பாதுகாப்பு
DBMS, தரவின் பாதுகாப்பை கவனித்துக்கொள்கிறது. அங்கீகாரமற்ற அணுகுதலில்
இருந்து தரவுகளுக்கு பாதுகாப்பை வழங்குகிறது. வழக்கமான DBMSல், பல்வேறு அணுகலுக்கான
அனுமதியுடன் பயனர் கணக்குகளை நாம் உருவாக்கமுடியும். இதனைப் பயன்படுத்தி பயனர் அணுகுதலை
கட்டுப்படுத்தி நம்முடைய தரவுகளை எளிமையாக பாதுகாத்துக் கொள்ள முடியும்.
DBMS பரிவர்தனைகளை ஆதரித்தல்
இது நிகழ் உலக பயன்பாடுகளில் தரவு ஒருமைப்பாட்டை கையாள மற்றும் நிர்வகிக்க நம்மை அனுமதிக்கிறது. இங்கு பல்புரியாக்கம் (mutithreading) விரிவாக பயன்படுகிறது.