கணினி அறிவியல் - தரவுத்தள கட்டமைப்பு | 12th Computer Science : Chapter 11 : Database concepts and MySql : Database Concepts
தரவுத்தள கட்டமைப்பு
ஒரு அட்டவணையில் உள்ள தொடர்புடைய தரவுகளின் முழு தொகுப்பே அட்டவணை
எனப்படும். இது தரவுகளை வரிசை மற்றும் நெடுவரிசைகளைக் கொண்ட கோப்பு (அ) அட்டவணை என்றும்
அழைக்கப்படுகிறது. அட்டவணையின் ஒவ்வொரு வரிசையும் பதிவு என அழைக்கப்படுகிறது. இது ஒவ்வொரு
தரவுத்தள பதிவிடுதலுக்குமான தரவின் தொகுதி ஆகும். ஒவ்வொரு நெடுவரிசையும் புலம் என அழைக்கப்படுகிறது.
இது ஒவ்வொரு தரவின் வகையையும் குறிப்பிட்ட குழுக்களாக பிரிக்கிறது.
எ. கா
stu.No., stu.Name, stu. Age, stu.class, stu. Sec.
ஒரு அட்டவணை உறவுகள், வரிசை எனவும் நெடுவரிசை எனவும் அழைக்கப்படுகிறது.
ஒரு அட்டவணை உறவுகள் (relation) எனப்படும்.
ஒரு வரிசை பதிவு (tuple) எனப்படும்.
ஒரு நெடுவரிசை பண்புக்கூறு (attribute) எனப்படும்.