Home | 12 ஆம் வகுப்பு | 12வது கணினி அறிவியல் | DBMS- ல் உறவுநிலை இயற்கணிதம்

தரவுதள கருத்துருக்கள் - DBMS- ல் உறவுநிலை இயற்கணிதம் | 12th Computer Science : Chapter 11 : Database concepts and MySql : Database Concepts

   Posted On :  17.08.2022 07:42 pm

12 வது கணினி அறிவியல் : அலகு 11 : தரவுதள கருத்துருக்கள் மற்றும் MySql : தரவுதள கருத்துருக்கள்

DBMS- ல் உறவுநிலை இயற்கணிதம்

உறவுநிலை இயற்கணிதம் முதலில் எட்கர் எப் காட் என்பவரால் IBMல் உருவாக்கப்பட்டது.

DBMS- ல் உறவுநிலை இயற்கணிதம்

உறவுநிலை இயற்கணிதம் என்றால் என்ன?

உறவுநிலை இயற்கணிதம் முதலில் எட்கர் எப் காட் என்பவரால் IBMல் உருவாக்கப்பட்டது. இது உறவுநிலை தரவுத்தளங்களில் சேமிக்கப்பட்ட தரவை மாதிரியாக்கம் செய்யவும் அதில் வினவல்களை வரையறுக்கவும் பயன்படுகிறது. உறவுநிலை இயற்கணிதம், செயல்முறை வினவல்மொழி என அழைக்கப்படுகிறது. இது SQLயைப் பயன்படுத்தி தரவுத்தள அட்டவணைகளில் வினவல்களைக் கொடுக்கவும் பயன்படுகிறது.

உறவுநிலை இயற்கணிதச் செயற்பாடுகள் விடையைப் பெறுவதற்காக ஒரு உறவுநிலையில் (அட்டவணை) தற்சுழற்சி முறையில் செய்யப்படுகின்றன. இந்த செயற்பாடுகளின் விடை ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட உள்ளீடு உறவுகளால் ஏற்படுத்தப்பட்ட ஒரு புதிய உறவாகும்.

உறவுநிலை இயற்கணிதம் பல்வேறு தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

ஒரும உறவுநிலைச் செயற்பாடுகள்

SELECT ( symbol : σ)

PROJECT ( symbol: II)

Set தேற்றத்தில் இருந்து உறவுநிலை இயற்கணித செயற்பாடுகள்

• ஒட்டுதல் (U) 

• வெட்டுதல் ()

• வேறுபாடு (-)

• கார்டீசியன் பெருக்கல் (X)

SELECT (symbol : σ)

பொதுவடிவம் σc (R): என்பது உறவுநிலை மற்றும் அதனுடைய பண்புக்கூறுகளின் நிபந்தனை C

இந்த select செயற்பாடு ஒரு நிபந்தனையின் அடிப்படையில் துணைத் தொகுதியை tuples களுடன் தேர்ந்தெடுக்க உதவுகிறது. நிபந்தனைகளை திருப்திப்படுத்தாத tuples களை Select வடிகட்டுகிறது.

STUDENT



PROJECT (symbol : II)

இந்த PROJECT செயற்பாடு குறிப்பிடப்பட்டுள்ள உள்ளீடு தொடர்புகளின் பண்புக்கூறுகளை நீக்குகிறது. இந்த செயற்பாடு கிடக்கை துணைத் தொகுதியின் ஒப்பீடுகளை வரையறுக்கிறது. எடுத்துக்காட்டு 1 அட்டவணை


 

குறிப்பு

விடையில் நகல் வரிசைகள் நீக்கப்பட்டுள்ளன.


எடுத்துக்காட்டு 2 (அட்டவணை 11.1)


ஒட்டுதல் ( Symbol: )   

இது A அல்லது B அட்டவணையில் உள்ள அனைத்து tuples-களையும் உள்ளடக்கியது. இது நகல்களையும் நீக்குகிறது. தொகுதி A ஒட்டுதல் தொகுதி B என்பது A U B எடுத்துக்காட்டு 3 (அட்டவணை 11.1ஐ பயன்படுத்தி )



வேறுபாடு (Symbol :- )

இது A மற்றும் B அட்டவணைகளை ஒப்பிட்டு A அட்டவணையில் உள்ள வேறுபட்ட tuples களை மட்டும் தருகிறது. B அட்டவணையைத் தவிர்க்கிறது. A பண்புக்கூறின் பெயர் B பண்புக்கூறின் பெயரோடு பொருந்த வேண்டும்.

எடுத்துக்காட்டு 4 (அட்டவணை 11.2 ஐ பயன்படுத்தி)

விடை


வெட்டு (Symbol: ) A B

இது A மற்றும் B அட்டவணைகளில் பொதுவாக உள்ள அனைத்து tuplesகளையும் உள்ளடக்கியது. எடுத்துக்காட்டு 5 (அட்டவணை 11.2ஐ பயன்படுத்தி)


கார்டீசியன் பெருக்கல் (Symbol : X )

இரண்டு தொடர்புகளை சேர்க்க குறுக்குப் பெருக்கல் வழிவகுக்கிறது. இதன் விடை இரண்டு தொடர்புகளின் இணைப்பைக் கொண்டுள்ளது.

A X B என்பது A times B, இங்கு A தொடர்புகள் மற்றும் B தொடர்புகள் என்பன வேறுபட்ட பண்புக்கூறுகளாகும். இந்த வகை செயற்பாடுகள் இரண்டு தொடர்புகளிலிருந்து நெடுக்கைகளை ஒன்று சேர்க்க பயன்படுகிறது.



Tags : Database Concepts தரவுதள கருத்துருக்கள்.
12th Computer Science : Chapter 11 : Database concepts and MySql : Database Concepts : Relational Algebra in DBMS Database Concepts in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 வது கணினி அறிவியல் : அலகு 11 : தரவுதள கருத்துருக்கள் மற்றும் MySql : தரவுதள கருத்துருக்கள் : DBMS- ல் உறவுநிலை இயற்கணிதம் - தரவுதள கருத்துருக்கள் : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 வது கணினி அறிவியல் : அலகு 11 : தரவுதள கருத்துருக்கள் மற்றும் MySql : தரவுதள கருத்துருக்கள்