தரவுதள கருத்துருக்கள் - உறவு நிலைகளின் வகைகள் | 12th Computer Science : Chapter 11 : Database concepts and MySql : Database Concepts
உறவு நிலைகளின் வகைகள்
தரவுத்தளத்தில் பயன்படும் உறவுநிலைகளின் வகைகள்.
1. ஒன்றுடன் ஒன்று உறவுநிலை (One-to-One Relationship)
2. ஒன்றுடன் பல உறவுநிலை (One-to-Many Relationship)
3. பலவற்றுடன் ஒன்று உறவுநிலை (Many-toOne Relationship)
4. பலவற்றுடன் பல உறவுநிலை (Many-to Many Relationship)
இந்த உறவுநிலையில், ஒரு பொருள் வேறு ஒரு பொருளுடன் மட்டுமே தொடர்பு
கொண்டிருக்கும். ஒரு அட்டவணையின் ஒரு பதிவு மற்றொரு அட்டவணையின் ஒரு பதிவுடன் மட்டுமே
இணைக்கப்பட்டிருக்கும். எடுத்துக்காட்டு ஒரு மாணவனுக்கு ஒரு தேர்வெண் மட்டுமே இருக்க
முடியும்.
இந்த உறவுநிலையில் ஒரு பொருள் வேறு பல பொருள்களுடன் தொடர்பு
கொண்டிருக்கும். அட்டவணை A-வின் ஒரு பதிவு அட்டவணை B யின் பல பதிவுகளுடன் தொடர்பு கொண்டிருக்கலாம்.
ஆனால் அட்டவணை Bயின் ஒரு பதிவு அட்டவணை A-வின் ஒரு பதிவுடன் மட்டுமே தொடர்பு கொண்டிருக்க
முடியும். எடுத்துக்காட்டு: ஒரு துறை பல ஊழியர்களைக் கொண்டுள்ளது.
இந்த உறவுநிலையில் பல
பொருள்கள் வேறு ஒயொரு பொருள்களுடன் மட்டுமே தொடர்பு கொண்டிருக்கும்.
எடுத்துக்காட்டு: ஒரு துறையில் வேலை செய்யும் ஊழியர்களின் எண்ணிக் ளகயில், ஊழியர்கள் அட்டவணையின் பல பதிவுகள் துறை அட்டவணையின் ஒரு
பதிவுகள் மட்டுமே தொடர்பு படுத்தப்பட்டிருக்கும்.
இந்த உறவுநிலையில் ஒரு அட்டவணையில் உள்ள பல பதிவுகள் மற்றொரு
அட்டவணையில் உள்ள பலபதிவுகளுடன் தொடர்பு கொண்டிருக்கும்.
எடுத்துக்காட்டு1
. நுகர்வோர் மற்றும் விலை பொருள்
நுகர்வோர் பல விலைப்பொருள்களை வாங்குகிறார் மற்றும் விலைப்பொருள்கள்
பல நுகர்வோரால் வாங்கப்படலாம்.
எடுத்துக்காட்டு
2 மாணவர்கள் மற்றும் பாடப்பிரிவுகள்
ஒரு மாணவன் பல பிரிவுகளில் பதியலாம் மற்றும் ஒரு பாடப்பிரிவு
பல மாணவர்களைக் கொண்டிருக்கலாம்.
எடுத்துக்காட்டு
3: புத்தகங்கள் மற்றும் மாணவன்.
நூலகத்தில் உள்ள பல புத்தகங்கள் பல மாணவர்களுக்கு வழங்கப்படும்.
உங்களுக்குத்
தெரியுமா
உறவுநிலை
மாதிரி, எட்கர்ஃபிராங்க் காட் (Edgar Frank Codd) (உறவுநிலை மாதிரியின் தந்தை) என்பவரால்
கண்டுபிடிக்கப்பட்டது. இது தரவின் பொது மாதிரி ஆக உள்ளது. இது கிரிஸ்டேட் மற்றும் ஹக்
டார்வென் மற்றும் பலரால் மேம்படுத்தப்பட்டது.