Home | 12 ஆம் வகுப்பு | 12வது கணினி அறிவியல் | தரவுதள கருத்துருக்கள் : நினைவில் கொள்க

கணினி அறிவியல் : தரவுதள கருத்துருக்கள் மற்றும் MySql - தரவுதள கருத்துருக்கள் : நினைவில் கொள்க | 12th Computer Science : Chapter 11 : Database concepts and MySql : Database Concepts

   Posted On :  17.08.2022 07:42 pm

12 வது கணினி அறிவியல் : அலகு 11 : தரவுதள கருத்துருக்கள் மற்றும் MySql : தரவுதள கருத்துருக்கள்

தரவுதள கருத்துருக்கள் : நினைவில் கொள்க

DBMS என்பது பதிவுகளை கொண்டிருக்கும் கணிப்பொறிதழுவிய ஒரு அமைப்பாகும்.

நினைவில் கொள்க

• DBMS என்பது பதிவுகளை கொண்டிருக்கும் கணிப்பொறிதழுவிய ஒரு அமைப்பாகும்.

• தரவு என்பது செயல்படுத்தப்படாத தரவுகளாகும். இது எந்த ஒரு எழுத்து, உரை, வார்த்தை அல்லது எண்ணாகவோ இருக்கலாம்.

• தகவல் என்பது செயற்படுத்தப்பட்ட, ஒருங்கிணைக்கப்பட்ட வடிவூட்டப்பட்ட தரவுகளாகும்.

• mysql, oracle, sql server, ibm db2 ஆகியவை RDBMSக்கான எடுத்துக்காட்டுகளாகும்.

• தரவுத்தளத்தில் உள்ள தரவின் நகலே மிகைமை எனப்படும்.

• தரவு நிலைத்தன்மை என்பது தரவுத்தளத்தில் அனைத்து இடங்களிலும் ஒத்த மதிப்புடைய தரவுகளாகும்.

• தரவு நிலைப்பாடு என்பது அனுமதியற்ற பயனர்களிடம் இருந்து பாதுகாப்பு வழங்குகிறது.

• அட்டவணை என்பது ஒரு தொடர்பு (relation) எனப்படும்.

• ஒரு வரிசை என்பது tuple என்று அழைக்கப்படுகிறது.

• ஒரு நெடுவரிசை என்பது பண்புக்கூறு எனப்படும்.

• படிநிலை, உறவுநிலை, வலையமைப்பு, ER மற்றும் பொருள் மாதிரி போன்றவை தரவு மாதிரியின் வகைகள் ஆகும்.

• படிநிலை மாதிரி ஒன்று ஒன்று உறவுநிலையைக் கொண்ட மரக்கிளை போன்ற கட்டமைப்பு உடையது. இது பெற்றோர் குழந்தை உறவுநிலை எனவும் அழைக்கப்படுகிறது.

• உறவுநிலை மாதிரி இது தரவை தொடர்புகள் அல்லது அட்டவணைகளாக குறிப்பிடுகிறது.

• வலையமைப்பு மாதிரி- இது படிநிலை மாதிரி போன்றதாகும். ஆனால் இது ஒன்றுக்கு மேற்பட்ட பெற்றோரை கொண்டிருக்க அனுமதிக்கிறது.

• ER- பொருள்கள், பண்புக்கூறுகள் மற்றும் தொடர்புகளைக் கொண்ட உயர்நிலை தரவு மாதிரி ஆகும்.

• பொருள் மாதிரி- தரவை பொருள்கள், இனக்குழுக்கள் மற்றும் மரபுரிம மாகச் சேமிக்கிறது.

• இயல்பாக்கம்-தரவுமிகைமைக்குறைக்கிறது மற்றும்தரவு நிலைப்பாட்டை அதிகரிக்கிறது.

• பல்வேறு வகையான உறவுநிலைகள்

• ஒன்று ஒன்று - ஒரு மாணவனுக்கு ஒரு தேர்வெண் மட்டுமே இருக்க முடியும்.

• ஒன்று பல- ஒரு துறையில் பல ஊழியர்கள் இருக்கலாம்.

• பல ஒன்று- பல ஊழியர்கள் ஒரே துறையில் பணி செய்யலாம்.

• பல பல - நூலகத்தில் பல புத்தகங்கள் பல மாணவர்களுக்கு வழங்கமுடியும்.

• தரவுத்தள இயல்பாக்கம் Dr.Edgar F Codd என்பவரால் முன்மொழியப்பட்டது.

• உறவுநிலை இயற்கணிதம் செயல்முறை வினவல் மொழி என அழைக்கப்படுகிறது. இது SQLயைப் பயன்படுத்தி தரவுத்தள அட்டவணைகளில் வினவல்களைக் கொடுக்கவும் பயன்படுகிறது.

Tags : Computer Science : Database concepts and MySql கணினி அறிவியல் : தரவுதள கருத்துருக்கள் மற்றும் MySql .
12th Computer Science : Chapter 11 : Database concepts and MySql : Database Concepts : Database Concepts: Points to remember Computer Science : Database concepts and MySql in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 வது கணினி அறிவியல் : அலகு 11 : தரவுதள கருத்துருக்கள் மற்றும் MySql : தரவுதள கருத்துருக்கள் : தரவுதள கருத்துருக்கள் : நினைவில் கொள்க - கணினி அறிவியல் : தரவுதள கருத்துருக்கள் மற்றும் MySql : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 வது கணினி அறிவியல் : அலகு 11 : தரவுதள கருத்துருக்கள் மற்றும் MySql : தரவுதள கருத்துருக்கள்