பொருளாதாரம் - இருவர் முற்றுரிமையின் பண்புகள் | 11th Economics : Chapter 5 : Market Structure and Pricing
இருவர் முற்றுரிமை (Duopoly)
இந்த வகை அங்காடி தனிப்பட்ட இரு விற்பனையாளர்களைக் கொண்டுள்ளது. இரண்டு விற்பனையாளரும் தனித்து செயல்படுவதுடன் அவர்களுக்கு எந்தவிதமான ஒப்பந்தமும் கிடையாது என அனுமானிக்கப்படுகிறது. இருவர் முற்றுரிமையில் இருவரும் விலை மற்றும் உற்பத்தியை மாற்றும் சுதந்திரம் பெற்றிருப்பர். ஒரு விற்பனையாளர் தன் நடவடிக்கையால் தன் எதிரி பாதிக்கப்படவில்லை என நினைத்துக் கொள்வார். அதன் அடிப்படையில் தன் விலையை நிர்ணயிப்பார்.
1. ஒவ்வொரு விற்பனையாளரும் போட்டியாளரின் நோக்கம் மற்றும் செயல்பாடுகளை முழுமையாக அறிந்திருப்பார்.
2. இரண்டு விற்பனையாளரும் உடன்பாடு செய்திருப்பர். (விற்பனை தொடர்பான அனைத்திலும்)
3. அவர்கள் முறையற்ற மிகக் கடினமாக போட்டியில் ஈடுபடலாம்.
4. உற்பத்தி பண்டங்களின் வேறுபாடு இல்லை.
5. அவர்கள் தங்கள் உற்பத்தி பண்டத்திற்கு நிர்ணயிக்கும் விலை அதிக இலாபம் பெறுவதற்காகவே இருக்கும்.