பொருளாதாரம் - பல்வகை அங்காடிகளின் இயல்புகள்: ஓர் ஒப்பீடு | 11th Economics : Chapter 5 : Market Structure and Pricing
தொகுப்புரை
அங்காடி அமைப்பு, அங்காடியின் பல்வேறு நிலைகள் மற்றும் பல்வேறு அங்காடியின் பண்புகள் பற்றி இந்த அத்தியாயத்தில் விளக்கப்பட்டது. அங்காடி பொதுவாக நிறைவுப்போட்டி அங்காடி, நிறைகுறைப் போட்டி அங்காடி என பிரிக்கப்படுகிறது.
நிறைகுறைப்போட்டி அங்காடி முற்றுரிமை, முற்றுரிமை போட்டி, இருவர் முற்றுரிமை, சில்லோர் முற்றுரிமை ஆகியவற்றை உள்ளடக்கியதாக இருக்கும். நிறுவனங்கள் இலாபம் பெறுவது அந்நிறுவனங்கள் கடைப்பிடிக்கும் யுக்திகளைப் பொறுத்தது. முற்றுரிமை அங்காடியில் விற்பனையாளர் தன்னுடைய முற்றுரிமை சக்தியின் அடிப்படையில் அதிக இலாபமே பெறுவார்.
சொற்களஞ்சியம்
சமநிலை
நிறுவனம் மாறாநிலை அடைதல்
சமநிலை விலை
பண்டத்தின் தேவையும், அளிப்பும் சமமாகும் விலை
நிறுவனம்
ஒரு தனி அமைப்பு, உற்பத்திக் காரணிகளை பயன்படுத்தி உற்பத்தி மற்றும் விற்பனை செய்தல்.
நீண்டகாலம்
உற்பத்தி காரணிகள் அனைத்தும் மாறக் கூடிய காலம்
இறுதிநிலை செலவு
ஓர் அலகு பண்டத்தை கூடுதலாக உற்பத்தி செய்ய ஏற்படும் செலவு
இறுதிநிலை வருவாய்
ஓர் அலகு பண்டத்தை கூடுதலாக விற்பதால் கிடைக்கும் வருவாய்
முற்றுரிமையாளர்
ஒரு தனி விற்பனையாளர் மொத்த உற்பத்தியையும் கட்டுப்படுத்துபவர் இதற்கு நெருங்கிய பதிலீடு இல்லை
விலை நிர்ணயிப்பவர்
அங்காடியில் தனது பண்டத்திற்கு விலை நிர்ணயம் செய்யும் சக்தி
விலை ஏற்பவர்
நிறுவனம் தொழிற்சாலை நிர்ணயிக்கும் விலையை ஏற்றல்