பொருளாதாரம் - சில்லோர் முற்றுரிமை மற்றும் சில்லோர் முற்றுரிமையின் இயல்புகள் | 11th Economics : Chapter 5 : Market Structure and Pricing
சில்லோர் முற்றுரிமை
சில்லோர் முற்றுரிமை அங்காடியில் சில நிறுவனங்களே ஒரே மாதிரியான அல்லது வித்தியாசமான பண்டங்களை உற்பத்தி செய்யும். உதாரணம். எண்ணெய் மற்றும் வாயு. சில்லோர் முற்றுரிமைப் போட்டியில் எத்தனை நிறுவனங்கள் என்பதைக் குறிப்பிட முடியாது. சில நிறுவனங்களே இருப்பதால், ஒரு நிறுவனத்தின் நடவடிக்கை மற்ற நிறுவனங்களின் நடவடிக்கைகளைப் பாதிக்க வாய்ப்பு உள்ளது.
1. சில பெரிய நிறுவனங்கள்: சில பெரிய நிறுவனங்களே அங்காடி முழுவதிலும் உற்பத்தி மற்றும் தேவையைக் கட்டுப்படுத்தும்.
2. நிறுவனங்களுக்குள் சார்ந்திருத்தல்: ஒரு நிறுவனத்தின் விலை மற்றும் உற்பத்தி அளவை நிர்ணயிக்கும் முடிவுகள் போட்டி நிறுவனம் எடுக்கும் முடிவுகளைச் சார்ந்து அமையும்.
3. குழுச் செயல்பாடு: சில்லோர் முற்றுரிமை நிறுவனங்கள் அனைத்தும் தமக்குள் ஒற்றுமையுடன் செயல்படவேண்டிய முக்கியத்துவத்தை உணர்ந்திருக்கும்.
4. விளம்பரச் செலவு: சில்லோர் முற்றுரிமையாளர், விளம்பரம் அல்லது உற்பத்தியின் தரத்தை மேம்படுத்தி தனது விற்பனையை அதிகரிப்பர்.
5. பண்டத்தின் தன்மை: நிறைவு சில்லோர் முற்றுரிமை என்பது ஒரே விதமான பொருள் உற்பத்தி செய்வதையும், நிறைகுறை சில்லோர் உற்பத்தி என்பது பலவிதமான பொருட்கள் உற்பத்தி செய்வதையும் குறிக்கும்.
6. மாறாத விலை (Price rigidity): விலையை மாற்றி அமைப்பது என்பது இந்த அங்காடியில் கடினம் ஆகும். சில்லோர் முற்றுரிமையில் விலையை மாற்றாமல் இருப்பதற்கு காரணம் எதிராளிகளின் போட்டி பற்றிய அச்சமாகும்.