Home | 12 ஆம் வகுப்பு | 12வது பொருளாதாரம் | பொருளாதார வளர்ச்சி மற்றும் பொருளாதார முன்னேற்றம்
   Posted On :  17.03.2022 02:21 am

12ஆம் வகுப்பு பொருளாதாரம் : அத்தியாயம் 11 : பொருளாதார மேம்பாடு மற்றும் திட்டமிடல்

பொருளாதார வளர்ச்சி மற்றும் பொருளாதார முன்னேற்றம்

பொருளாதார வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்குமிடையேயான வேற்றுமைகள்

பொருளாதார வளர்ச்சி மற்றும் பொருளாதார முன்னேற்றம்


1. பொருளாதார முன்னேற்றம்

பொதுவாக பார்த்தால், முன்னேற்றம் என்பது பின்தங்கிய நாடுகளின் பிரச்சனைகளையும், வளர்ச்சி என்பது முன்னேறிய நாடுகளின் பிரச்சனைகளையும் கொண்டதாக உள்ளது.

2. வளர்ச்சியின் இயல்பும் அளவும்

முன்னேற்றம் என்பது தொடர்ச்சியற்றதாகவும் மற்றும் தன்னிச்சையாகவும் நிகழக்கூடிய மாற்றம், வளர்ச்சி என்பது நீண்ட காலத்துக்கும், படிப்படியாகவும், நிதானமாகவும் நடைபெறும் மாற்றமாகும்.

3. மாற்றத்தின் நோக்கம்

வளர்ச்சி என்பது அதிகமான வெளியீட்டைக் குறிக்கிறது. ஆனால் முன்னேற்றம் என்பது உற்பத்தியில் அதன் செயல்திறனைக் குறிக்கிறது. அதாவது, உற்பத்தியில் ஒரு அலகு உள்ளீட்டிற்கான வெளியீட்டின் அளவைக் குறிக்கும். இது வெளியீடு, வளங்களுக்கான ஒதுக்கீடு, வறுமை, சமத்துவமின்மை மற்றும் வேலையின்மை ஆகியவற்றின் கலவை மாற்றங்களை குறிக்கிறது.

4. மாற்றத்தின் விரிவு

பொருளாதார முன்னேற்றம் (பொருளாதார வளர்ச்சியை விட பெரிய கருத்து) என்பது வளர்ச்சி மற்றும் கட்டமைப்பில் ஏற்படும் மாறுதல்களை உள்ளடக்கியது.





பொருளாதார வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்குமிடையேயான வேற்றுமைகள்

பொருளாதார வளர்ச்சி 

* வளர்ந்த நாடுகளின் பொருளாதார பிரச்சனைகளை கையாளுகிறது

* மாற்றங்கள் படிப்படியாகவும் நிதானமாகவும் நிகழ்கிறது

* அதிக அளவான உற்பத்தியைக் குறிக்கிறது.

* எண்ணிக்கை அடிப்படையிலானது (அதாவது) தலா வருமான அதிகரிப்பைக் குறிக்கும்.

* குறுகிய எல்லையுடையது.

பொருளாதார முன்னேற்றம்

* வளரும் நாடுகளின் பிரச்சனைகளைக் கையாளுகிறது 

* தொடர்ச்சியற்ற தன்னிச்சையான மாற்றங்கள் நிகழ்கிறது 

* உற்பத்தி அதிகரிப்பது மட்டுமல்லாமல் உற்பத்தியாகும் பொருட்களின் வகைகளும் மாறுகிறது

* எண்ணிக்கை மற்றும் தர அடிப்படையிலானது 

* விரிவான பொருள் கொண்ட சொல் முன்னேற்றம் = வளர்ச்சி + மாற்றம்


12th Economics : Chapter 11 : Economics of Development and Planning : Economic Growth Vs Economic Development in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12ஆம் வகுப்பு பொருளாதாரம் : அத்தியாயம் 11 : பொருளாதார மேம்பாடு மற்றும் திட்டமிடல் : பொருளாதார வளர்ச்சி மற்றும் பொருளாதார முன்னேற்றம் - : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12ஆம் வகுப்பு பொருளாதாரம் : அத்தியாயம் 11 : பொருளாதார மேம்பாடு மற்றும் திட்டமிடல்