Home | 12 ஆம் வகுப்பு | 12வது பொருளாதாரம் | பொருளாதார மேம்பாடு மற்றும் திட்டமிடல்
   Posted On :  17.03.2022 02:13 am

12ஆம் வகுப்பு பொருளாதாரம் : அத்தியாயம் 11 : பொருளாதார மேம்பாடு மற்றும் திட்டமிடல்

பொருளாதார மேம்பாடு மற்றும் திட்டமிடல்

நாட்டின் பொருளாதார கட்டமைப்பில் நிகழும் நல்ல மாற்றங்களை முன்னேற்றம் எனக் கருதலாம்.

பொருளாதார மேம்பாடு மற்றும் திட்டமிடல்


தவறாக நடைமுறைப்படுத்துவதனால் நன்கு வடிவமைக்கப்பட்டத் திட்டம் தோல்வியடையலாம். ஆனால் சரியாக நடைமுறைப்படுத்துவதனாலேயே தவறாக வடிவமை திட்டம் வெற்றியடைந்துவிடாது.

இன்றைக்கும் என்றைக்கும் உன்னுடைய வேலைகளைத் திட்டமிட்டு பிறகு நடைமுறைப்படுத்து.

- மார்கரெட் தாட்சர்



கற்றல் நோக்கங்கள்:

1. தேசிய வருவாயின் பொருள் மற்றும் அதனுடன் தொடர்புடைய கருத்துருக்களைப் புரிதல்

2. தேசிய வருவாயைக் கணக்கிடும் முறைகளை அறிதல்.

3. நிதி ஆயோக்கின் பணிகளை மதிப்பிடுதல்.





முன்னேற்றம் மற்றும் வளர்ச்சி குன்றிய பொருளாதாரம் - பொருள்


அறிமுகம்

பொருளாதார "மேம்பாடு" மற்றும் முன்னேற்றம் ஆகிய இரண்டு சொற்களும் ஒரே பொருளைக் குறிக்கக்கூடியவை. பொருளாதார வளர்ச்சி நாட்டு வருமானம் அதிகரித்தலைக் குறிக்கப் பயன்படும் சொல். நாட்டின் பொருளாதார கட்டமைப்பில் நிகழும் நல்ல மாற்றங்களை முன்னேற்றம் எனக் கருதலாம். இரண்டாம் உலகப்போர் வரையில் மூன்றாம் உலக நாடுகள் என்றழைக்கப்படும் ஏழை நாடுகளின் பிரச்சினைகளைப் பற்றி படிக்க யாரும் ஆர்வம் காட்டவில்லை . அதன் பிறகே பொருளியல் வல்லுநர்கள் நாடுகளின் பிரச்சினைகளை ஆய்வு செய்து புதிய முன்னேற்ற மற்றும் வளர்ச்சிக் கோட்பாடுகளையும், மாதிரிகளையும் (Models) உருவாக்க ஆரம்பித்தனர். இன்றைய வளரும் நாடுகள் அனைத்தும் இங்கிலாந்து மற்றும் பிற ஐரோப்பிய நாடுகளிடம் அடிமைப்படுத்தப்பட்டிருந்த நாடுகள். விடுதலைக்குப் பிறகு இந்த நாடுகள் துரிதமான பொருளாதார முன்னேற்றமடைவதையே விருப்பமாக கொண்டிருந்தன.

பொருளாதார முன்னேற்றத்தின் அணுகுமுறைகள்

பொருளாதார முன்னேற்றம் இருவகையான அணுகுமுறையை கொண்டு விளக்கப்படுகிறது முறையே i) பழமையான அணுகுமுறை மற்றும் ii) நலம் சார்ந்த புதிய அணுகுமுறை.

1. பழமையான அணுகுமுறை

இந்த அணுகுமுறை பொருளாதார அடிப்படைகளைக் கொண்டு மட்டுமே முன்னேற்றத்துக்கு விளக்கமளிக்கிறது. மொத்த உள்நாட்டு உற்பத்தி அதிகரிப்புடன் உற்பத்தி மற்றும் வேலை வாய்ப்பில் விவசாயத்தின் பங்கு குறைந்து தொழில் மற்றும் பணித்துறையின் பங்கு உயர்வடைதலையே பழைய அணுகுமுறையில் பொருளாதார முன்னேற்றம் என்கிறது. இது தொழில் துறை வளர்ச்சியை வலியுறுத்தும் அணுகுமுறையாக உள்ளது. தனிநபர் வருமான உயர்வு அடித்தட்டு மக்களின் வருவாயையும் அதிகப்படுத்தும் என்ற எடுகோளின் அடிப்படையில் முன்னேற்றத்துக்கு விளக்கமளிக்கிறது.

2. நலம் சார்ந்த புதிய அணுகுமுறை

பொருளாதார முன்னேற்றம் 1970களில் மறுவரையறை செய்யப்பட்டது. இதன்படி வறுமை, வருமான ஏற்றத்தாழ்வு மற்றும் வேலையின்மை குறைத்தல் மற்றும் நாட்டின் உள்நாட்டு உற்பத்தி அதிகப்படுத்ததல் ஆகியவை ஒருசேர நிகழ்வதே பொருளாதார முன்னேற்றமாகும். அந்த காலக்கட்டத்தில் “வளர்ச்சியுடன் கூடிய பங்கீடு" என்பதே புகழ்பெற்ற முழக்கங்கங்களாயின.

மைக்கேல் பி.டொடாரோவின் கருத்தின்படி, "முன்னேற்றத்தை சமூக அமைப்பு, பொது மக்களின் மனநிலை மற்றும் நாட்டின் நிறுவன அமைப்புகள் ஆகியவற்றில் நிகழும் பெரிய மாற்றங்கள் மற்றும் விரைவான வளர்ச்சி, வருவாய் ஏற்றத்தாழ்வினை குறைத்தல் மற்றும் வறுமை ஒழிப்பு ஆகிய அனைத்தையுமே பொருளாதார முன்னேற்றமாக கருத வேண்டும்" என்கிறார்.


பொருளாதார வளர்ச்சிகுன்றிய நாடுகளின் சிறப்பியல்புகள்

அறிமுகம்

* வளர்ச்சி குன்றிய நாடுகளை ஒன்றுடன் ஒன்று தொடர்புபடுத்தி அறியலாம். 

• உலகவங்கியின் வளர்ச்சி அறிக்கையின்படி தலாவீத மொத்த நாட்டு வருமானத்தின் அடிப்படையில் நாடுகளை வகைப்படுத்துகிறது.

 

வளர்ச்சி குன்றிய பொருளாதாரம்

வளர்ச்சி குறைந்த பொருளாதாரம் என்பது ஒரு நாட்டில் குறைவான தலா வருமானம், பரவலான வறுமை, வருவாய் மற்றும் செல்வ பகிர்வில் கடுமையான ஏற்றத்தாழ்வு, அதிக மக்கள் தொகை, குறைவான மூலதன ஆக்கம், அதிக அளவு வேலையின்மை, பழமையான உற்பத்தி முறை, எதிரும் புதிருமான பண்புகள் ஒருசேர நிலவுதல் (Dualism) போன்றவற்றை பண்புகளாகக் கொண்டதாகும்.

வளர்ச்சி குன்றிய பொருளாதாரம் பொருள்

வளர்ச்சி குன்றிய பொருளாதாரம் என்பது ஒரு நாட்டில், அதிக மக்கள் தொகையினால் உற்பத்தி குறைந்து, அவற்றின் விளைவாக குறைந்த தலா வருமானம் உடைய அதிக மக்களைக் கொண்ட பொருளாதாரமாகும்.


12th Economics : Chapter 11 : Economics of Development and Planning : Meaning of Development and Underdevelopment in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12ஆம் வகுப்பு பொருளாதாரம் : அத்தியாயம் 11 : பொருளாதார மேம்பாடு மற்றும் திட்டமிடல் : பொருளாதார மேம்பாடு மற்றும் திட்டமிடல் - : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12ஆம் வகுப்பு பொருளாதாரம் : அத்தியாயம் 11 : பொருளாதார மேம்பாடு மற்றும் திட்டமிடல்