வறுமையின் நச்சு சுழற்சி
முன்னேற்றம் குறைவாக உள்ள நாடுகளில் குறைவான முன்னேற்றமே முன்னேற்றத்தைக் குறைவான அளவிலே தொடர்ந்து நீடிக்க செய்யும் சுழற்சியினை உருவாக்குகிறது. நச்சுச் சுழலானது ஒன்றைத் தொடர்ந்து மற்றொன்று ஏழைநாடுகளை தொடர்ந்து வறுமை நிலையிலேயே வைத்திருக்கும் விதத்தில் செயல்படுவதைக் குறிப்பதாக ராகனர் நர்க்ஸ் கூறுகிறார். உதாரணமாக ஒரு ஏழையிடம் உண்பதற்கு போதுமான உணவு இல்லை - குறைவான உணவு அவருடைய உடல் நிலையை பலவீனப்படுத்திவிடும். பலவீனமாக இருப்பவரின் உழைக்கும் தகுதி குறைவாக இருக்கும். உழைக்கும் திறன் குறைவாக இருந்தால் குறைவான வருமானம் ஈட்டுவார் வருமானம் குறைவாக இருப்பதால் அவர் ஏழை. அவர் உண்பதற்கு போதுமான உணவு இருக்காது. இந்த சுழல் தொடர்ந்து கொண்டே செல்லும். இந்த வகையான சூழ்நிலையை ஒருநாட்டுக்கு ஒப்பிட்டுப் பார்த்தால் கீழ்கண்ட கருத்துரையாக சுருக்கலாம் "ஒரு நாடு ஏழை ஏனென்றால் அது ஏழைகளின் நாடு"
வறுமையின் நச்சு சுழற்சி
வறுமையின் நச்சு சுழற்சி தேவைப் பக்கத்திலிருந்தும் அளிப்பின் பக்கத்திலிருந்தும் செயல்படுகிறது. அளிப்பின் பக்கத்திலிருந்து பார்த்தால், குறைவான உண்மை வருமானம் காரணமாக சேமிப்பு அளவு குறைகிறது. இது முதலீட்டு அளவைக் குறையச் செய்து மூலதன பற்றாக்குறையை உருவாக்குகிறது. இதனால் உற்பத்தித் திறன் குறைந்து வருமானமும் குறைகிறது. இவ்வாறு அளிப்பு பக்கத்தில் வறுமை நச்சு சுழற்சி செயல்படுகிறது.
தேவைப் பக்கத்திலிருந்து பாரத்தால், குறைவான உண்மை வருமானம் காரணமாக தேவையும் குறைவாக இருக்கும். இது முதலீட்டைக் குறைக்கச் செய்யும், இதனால் மூலதன பற்றாக்குறை ஏற்பட்டு உற்பத்தி குறைந்து வருமானத்தை குறைக்கும்...
வறுமையின் நச்சு சூழற்சியை உடைத்தல்
அளிப்பு பக்கத்தில் வறுமையின் நச்சு சுழற்சி குறைவான சேமிப்பு மற்றும் குறைவான முதலீட்டினால் இயங்கத் துவங்குகிறது. ஆகவே பின்தங்கிய நாடுகளில் முதலீட்டையும் மூலதன ஆக்கத்தையும் அதிகரிக்ககும் போது நுகர்வு அளவு குறையாமல் இருக்க வேண்டும்... இதற்கு கடந்த கால சராசரி சேமிப்பு விகிதத்தை விட இறுதிநிலை சேமிப்பு அளவை அதிகமாக இருக்குமாறு செய்ய வேண்டும்.
தேவைப் பக்கத்தில் வறுமை நச்சு சுழற்சியை உடைத்தெரிய, நர்க்ஸ் சரிசம வளர்ச்சி உத்தியை பரிந்துரை செய்கிறார். ஒரே நேரத்தில் பலவகைத் தொழில்களில் ஒருநாடுமுதலீடுசெய்தால் தொழிலாளர்களுக்கு அந்தத் தொழில்களில் வேலை கிடைக்கும். அவர்கள் மற்றத் தொழில்களில் உற்பத்தி செய்த பொருட்களுக்கு நுகர்வோர்களாக மாறுவார்கள். இவ்வாறு ஒவ்வொரு தொழிலிலும் வேலை கிடைத்த தொழிலாளர்கள் தங்களின் வருமானத்தை வேறு தொழிலிலும் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை வாங்கும்போது சரிநிகர் சமமான முன்னேற்றம் நடைபெறும் என நார்க்ஸ் கூறுகிறார். எனவே அனைத்துத் தொழில்களின் சரிநிகர் சமமான வளர்ச்சியின் மூலம் தேவையின் பக்கத்தில் இயங்கும் வறுமையின் நச்சு சுழற்சியைத் தடுக்க முடியும்.