Home | 12 ஆம் வகுப்பு | 12வது பொருளாதாரம் | பொருளாதார அமைப்பு மற்றும் அதன் வகைகளும்

பொருளாதாரம் - பொருளாதார அமைப்பு மற்றும் அதன் வகைகளும் | 12th Economics : Chapter 1 : Introduction to Macro Economics

   Posted On :  20.05.2022 05:38 am

12ஆம் வகுப்பு பொருளாதாரம் : அத்தியாயம் 1 : பேரியல் பொருளாதாரம்

பொருளாதார அமைப்பு மற்றும் அதன் வகைகளும்

"நுகர்வோரின் விருப்பங்களை பூர்த்தி செய்வதற்கான பொருட்கள் மற்றும் சேவைகளை தயாரிக்கும் உற்பத்தியாளர் மற்றும் பணியாளர்களுக்கிடையே உள்ள கூட்டுறவே பொருளாதார அமைப்பு”

பொருளாதார அமைப்பு மற்றும் அதன் வகைகளும்


பொருளாதார அமைப்பு என்ற கருத்தினை ஏ ஜே. பிரவுண் (A.J. Brown) என்பவர், "மக்கள் தங்கள் பிழைப்பை அமைத்துக் கொள்ளும் முறையை குறிப்பது" என்று வரையறுத்துள்ளார். ஜே.ஆர். ஹிக்ஸ் (J.R. Hicks) "நுகர்வோரின் விருப்பங்களை பூர்த்தி செய்வதற்கான பொருட்கள் மற்றும் சேவைகளை தயாரிக்கும் உற்பத்தியாளர் மற்றும் பணியாளர்களுக்கிடையே உள்ள கூட்டுறவே பொருளாதார அமைப்பு” என கூறுகிறார்.

சுருங்க கூறின், ஒரு பொருளாதார அமைப்பு என்பது பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொள்ளும் எந்த முறையையோ அல்லது பகுதியையே குறிப்பதாகும். ஒவ்வொரு பொருளாதார அமைப்பும் அதனது தனி தன்மைகளை கொண்டு காணப்படும். அதன்படி, அதன் பணிகள் அல்லது நடவடிக்கைகளும் வேறுபடும். ஒரு பொருளாதார அமைப்பின் நடவடிக்கைகள் மற்றும் செயல்பாடுகளை கீழ்காணும் வரைபடம் மூலம் விளக்கலாம்.


ஒரு பொருளாதார அமைப்பின் அடிப்படை நடவடிக்கைகள் உற்பத்தி (Production) மற்றும் நுகர்வு (Consumption) ஆகும். இந்த இரு நடவடிக்கைகளும் பல்வேறு பிற நடவடிக்கைகளால் உதவப்படுகின்றன. இந்த நடவடிக்கைகளின் தலையான நோக்கம் வளர்ச்சியை (Growth) அடைவதாகும். பரிமாற்றம் பணி (Exchange Activity) யானது உற்பத்தி மற்றும் நுகர்வு பணிகளுக்கு உதவுகின்றன. இந்த நடவடிக்கைகள் பல்வேறு பொருளாதார மற்றும் பொருளாதார மற்ற நடவடிக்கைகளால் பாதிக்கப்படுகின்றன. முக்கிய பொருளாதார நடவடிக்களாவன (Economic Activities): போக்குவரத்து, வங்கிப்பணி, விளம்பரம், திட்டமிடல், அரசின் கொள்கை மற்றும் பிற பணிகள். முக்கிய பொருளாதார மற்ற நடவடிக்கைகளாவன (Non - Economic Activities): சுற்றுச்சூழல், ஆரோக்கியம், கல்வி, பொழுது போக்கு, ஆட்சிமுறை, நெறிப்படுத்துதல் போன்றவை. இந்த உதவிப் பணிகளுக்கு மேலாக, பிற பொருளாதாரத்தின் வெளி நடவடிக்கைகளான இறக்குமதி, ஏற்றுமதி, பன்னாட்டு உறவுகள், குடியேற்றம், இடப்பெயர்ச்சி, பன்னாட்டு முதலீடு, பன்னாட்டு மாற்று வருவாய் போன்றவை பொருளாதார அமைப்பின் மொத்த செயல்பாட்டையும் பாதிக்கின்றன.


பொருளாதார அமைப்புகளை பல்வேறு அடிப்படையில் வகைப்படுத்தலாம்.


1. வளர்ச்சி நிலை: வளர்ந்த, வளராத, முன்னேறாத மற்றும் வளரும் பொருளாதார அமைப்புகள்


2. நடவடிக்கைகளின் முறை: முதலாளித்துவ, சமத்துவ மற்றும் கலப்பு பொருளாதார அமைப்புகள்


3. நடவடிக்கைகள் அளவு: சிறிய மற்றும் பெரிய பொருளாதார அமைப்புகள்


4. செயல்படும் தன்மை : நிலையான மற்றும் இயங்கும் பொருளாதார அமைப்புகள்


5. செயல்பரப்பு தன்மை : மூடிய மற்றும் திறந்த வெளி பொருளாதார அமைப்புகள்


6. முன்னேற்ற தன்மை: பழைமையான மற்றும் நவீன பொருளாதார அமைப்புகள்


7. தேசிய வருவாய் அளவு:
குறைந்த வருவாய், இடைநிலை வருவாய் மற்றும் அதிக வருவாய் பொருளாதார அமைப்புகள்


Tags : Economics பொருளாதாரம்.
12th Economics : Chapter 1 : Introduction to Macro Economics : Economy and its Types Economics in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12ஆம் வகுப்பு பொருளாதாரம் : அத்தியாயம் 1 : பேரியல் பொருளாதாரம் : பொருளாதார அமைப்பு மற்றும் அதன் வகைகளும் - பொருளாதாரம் : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12ஆம் வகுப்பு பொருளாதாரம் : அத்தியாயம் 1 : பேரியல் பொருளாதாரம்