பொருளாதாரம் - பேரியல் பொருளாதாரத்தின் குறைகள் | 12th Economics : Chapter 1 : Introduction to Macro Economics
குறைகள்
பேரியல் பொருளாதாரம் கீழ்க்காணும் குறைகளைக் கொண்டுள்ளது. அவையாவன
1. பொருளாதாரம் முழுமைக்கும் மிகைப்படுத்தி பொதுமையாக்கும் ஆபத்து காணப்படுகிறது.
2. தனிப்பட்ட நிறுவனங்கள் அனைத்தும் ஓரினத் தன்மை வாய்ந்தது என்ற எடுகோளை பேரியல் பொருளாதாரம் கொண்டுள்ளது.
3. தொகுத்தலில் தவறுகள் காணப்படும். ஒரு தனி நபருக்கு சரியானவை, ஒரு நாட்டிற்கு சரியாக இருக்காது. ஒரு நாட்டிற்கு பொருந்துவது, மற்ற நாட்டிற்கும் மேலும் மற்றொரு காலத்திற்கும் பொருந்தாது.
4. பொருளாதார நடவடிக்கைகளை பல பொருளாதாரமற்ற காரணிகள் தீர்மானிக்கின்றன. ஆனால் பேரியல் பொருளாதார கோட்பாடுகளில் இக்காரணிகள் இடம் பெறவில்லை.