Home | 12 ஆம் வகுப்பு | 12வது பொருளாதாரம் | பேரியல் பொருளாதாரம்
   Posted On :  14.03.2022 08:33 pm

12ஆம் வகுப்பு பொருளாதாரம் : அத்தியாயம் 1 : பேரியல் பொருளாதாரம்

பேரியல் பொருளாதாரம்

பொருளாதார பாடமானது, நுண்ணியல் பொருளாதாரம் மற்றும் பேரியல் பொருளாதாரம் என்று இரண்டு கிளைகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.

"பேரியல் பொருளாதாரம் என்பது உண்மைகள் மற்றும் கோட்பாடுகளை ஒருங்கிணைப்பது பற்றியதே"

- டான் புஸ், பிஸ்சார், ஸ்டார்டிஸ்.


புரிதலின் நோக்கங்கள்

1 பேரியல் பொருளாதாரத்தின் பரிணாம வளர்ச்சி, முக்கியத்துவத்துவம் மற்றும் அடிப்படை கருத்துகள் ஆகியவற்றை தெளிவுப்படுத்துவது, மேலும் 

2. ஒரு பொருளாதார அமைப்பின் செயல்பாட்டினை புரிந்து கொள்வது.




அறிமுகம்

பொருளாதார பாடமானது, நுண்ணியல் பொருளாதாரம்மற்றும் பேரியல் பொருளாதாரம் என்று இரண்டு கிளைகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. நார்வேயைச் சேர்ந்த பொருளியல் வல்லுனரும், பொருளியல் அறிவியலுக்கான முதல் நோபல் பரிசைப் பெற்ற இணை பெறுநர் ரேக்னர்ஃபிர்ஸ்ச் (Ragnar Frisch) என்பவர், சிறிய என பொருள் கொண்ட மைக்ரோ (Micro) மற்றும் பெரிய என்று பொருள் கொண்ட மேக்ரோ (Macro) என்னும் பதங்களை 1933-ல் உருவாக்கினார். இருப்பினும், பேரியல் பொருளாதாரத்தின் நவீன வடிவமானது ஜான் மேனாட் கீன்ஸ் (John Maynard Keynes) ஆல் 1936ம், ஆண்டு வெளியிட்ட "வேலைவாய்ப்பு, வட்டி மற்றும் பணம் பற்றிய பொதுக் கோட்பாடு" (The General Theory of Employment, Interest and Money) - நூலிலிருந்து தோன்றியதாகும். உலக மகாமந்த (World Great Depression) காலத்தில், பொருள்கள் விற்பனையின்றி தேங்குதல் மற்றும் உழைப்பாளர்கள் வேலையில்லாமை நிலவியதிலிருந்து மீளும் விளக்கத்தை கீன்ஸ் வழங்கினார். எனவே, கீன்ஸ் ஐ நவீன பேரியல் பொருளாதாரத்தின் தந்தை என்பர்.







12th Economics : Chapter 1 : Introduction to Macro Economics : Introduction to Macro Economics in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12ஆம் வகுப்பு பொருளாதாரம் : அத்தியாயம் 1 : பேரியல் பொருளாதாரம் : பேரியல் பொருளாதாரம் - : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12ஆம் வகுப்பு பொருளாதாரம் : அத்தியாயம் 1 : பேரியல் பொருளாதாரம்