பேரியல் பொருளாதாரத்தின் கருத்துக்கள் - இருப்பு (Stock) மற்றும் ஓட்டம் (Flow) மாறிலிகள். | 12th Economics : Chapter 1 : Introduction to Macro Economics
பேரியல் பொருளாதாரத்தின் கருத்துக்கள்
பேரியல் பொருளாதாரத்தின் பயன்படுத்தும் முக்கிய கருத்துக்கள் கீழ்கண்டபடி விளக்கப்பட்டுள்ளன.
1. இருப்பு (Stock) மற்றும் ஓட்டம் (Flow) மாறிலிகள்.
பொருளாதார ஆய்வில் பயன்படுத்தும் மாறிலிகளை இருப்பு மற்றும் ஓடும் மாறிலிகள் என வகைப்படுத்தலாம். இந்த இரு இருப்பு மற்றும் ஓட்ட மாறிலிகளும் கால அடிப்படையில் அதிகரிக்கவோ அல்லது குறையவோ செய்யும்.
* இருப்பு (Stock) என்பது ஒரு குறிப்பிட்ட காலத்தில் (Point of Time) கணக்கிடப்படும் பொருட்களின் அளவினை குறிப்பதாகும். பேரியல் பொருளாதாரத்தில், பண அளிப்பு, வேலை இல்லாமை அளவு, வெளிநாட்டு மாற்று இருப்பு, மூலதனம் போன்றவை இருப்பு மாறிலிகளுக்கு எடுத்துக்காட்டாகும்.
* ஓட்டம் (Flow) மாறிலிகள் என்பவை ஒரு குறிப்பிட்ட காலகட்ட அளவில் (Period of Time) கணக்கிடப்படுபவையாகும். தேசிய வருவாய், ஏற்றுமதி, இறக்குமதி, நுகர்வு, உற்பத்தி, முதலீடு போன்றவை ஓட்ட மாறிலிகளுக்கு எடுத்துக்காட்டாகும்.
2. பொருளாதார மாதிரிகள் (Economic Models)
மாதிரி (Model) என்பது உண்மை சூழலை எளிமையாக பிரதிபலிப்பது ஆகும். பொருளாதார வல்லுநர்கள், பொருளாதார நடவடிக்கைகள், அவைகளுக்கிடையேயான உறவுகள், நடத்தைகள் பற்றி விவரிப்பதற்கு மாதிரிகளை பயன்படுத்துகின்றனர். மாதிரி என்பது, பொருளாதாரம் எவ்வாறு இயங்குகிறது என்பதை விளக்குகிறது. பெரும்பாலான பொருளாதார மாதிரிகள், கணிதம், (Mathematic) வரைபடங்கள் (Graphs) மற்றும் சமன்பாடுகளால் (Equations) அமைக்கப்பட்டு, பொருளாதார மாறிலிகளுக்கிடையேயான உறவுகளை விளக்க உதவுகின்றன. அளிப்பு - தேவை (Supply - Demand) மாதிரிகள், வட்ட ஓட்டம் (Circular flow) மாதிரிகள் மற்றும் ஸ்மித் மாதிரிகள் ஆகும்.