அலகு 5 | வரலாறு | எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் - இந்தியாவில் கல்வி வளர்ச்சி | 8th Social Science : History : Chapter 5 : Educational Development in India
அலகு - 5
இந்தியாவில் கல்வி வளர்ச்சி
கற்றலின்
நோக்கங்கள்
>பண்டைய கால இந்தியாவில் கல்வி முறையைப் பற்றி அறிதல்
>இடைக்கால மற்றும் நவீன இந்தியாவில் ஏற்பட்ட கல்வி வளர்ச்சி பற்றி
புரிந்து கொள்ளுதல்
>ஆங்கிலேய ஆட்சியின் போது ஏற்பட்ட கல்வி வளர்ச்சியினைப் பகுப்பாய்வு செய்தல்
>தேசியக் கல்விக் கொள்கையின் முக்கியத்துவம் பற்றி கலந்தாய்வு செய்தல்
>தமிழ்நாட்டில் ஏற்பட்ட கல்வி வளர்ச்சி பற்றி புரிந்து
கொள்ளுதல்
’அறிவு என்பது மனிதனின் மூன்றாவது கண்"
அறிமுகம்
கல்வி என்பது அறிவு, திறன்கள் மற்றும் மதிப்புகளைப் பெறுதலும், பகிர்தலுமான
ஒரு தொடர்ச்சியான செயல்முறையாகும். கல்வி ஒரு முற்போக்கான சமுதாயத்தின் அடித்தளமாக
அங்கீகரிக்கப்பட்டுள்ளது. பொறுப்புள்ள குடிமக்களை உருவாக்குவதில் கல்வி முக்கிய பங்கு
வகிக்கிறது. நாம் வாழும் இந்த உலகமானது தொடர்ச்சியான மாற்றங்களையும், வளர்ச்சியையும்
கண்டு வருகிறது. எனவே சவால்களை எதிர்கொள்ளவும் தடைகளைத் தகர்த்தெறியவும், நாம் நன்கு
படித்தவர்களாக இருப்பதுடன் மனிதனை மேம்படுத்தும் செயலில் கல்வி எவ்வாறு பங்காற்றுகிறது
என்பதையும் அறிந்து கொள்ள வேண்டும். இந்தியாவில் பல்வேறு காலக்கட்டங்களில் ஏற்பட்ட
கல்வி வளர்ச்சியைப் பற்றி இப்பாடத்தில் கற்றுக் கொள்வோம்.