இந்தியாவில் கல்வி வளர்ச்சி | அலகு 5 | வரலாறு | எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் - சுதந்திர இந்தியாவின் கல்வி வளர்ச்சி | 8th Social Science : History : Chapter 5 : Educational Development in India
சுதந்திர
இந்தியாவின் கல்வி வளர்ச்சி
1947ஆம் ஆண்டு பெற்ற சுதந்திரமானது சுதந்திர இந்தியக்
கல்வி வரலாற்றில் ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்கியது. அது இந்தியர்களுக்கான ஒரு புதிய
நம்பிக்கை , ஒரு புதிய பார்வை , ஒரு புதிய எதிர் காலத்தை கொண்டு வந்தது. பல்கலைக்கழக
கல்வி குறித்த அறிக்கை தயாரிக்க 1948ஆம் ஆண்டு டாக்டர் இராதாகிருஷ்ணன் கல்விக்குழு
நியமிக்கப்பட்டது. இக்கல்விக் குழுவின் பரிந்துரைகளைப் பின்பற்றி உயர்கல்வியின் தரத்தை
நிர்ணயிக்க பல்கலைக்கழக மானியக் குழு அமைக்கப்பட்டது. 1952-53ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட
இடைநிலைக் கல்விக்குழு, இடைநிலை கல்வி துறையில் நிகழ்ந்த மிக முக்கியமான நிகழ்வு ஆகும்.
அது கல்வியில் புதிய அமைப்பு முறைகளையும், பாடப்புத்தகங்களின் தரம், பாடத்திட்டம்,
கற்பித்தல் முறைகளில் முன்னேற்றங்களையும் பரிந்துரைத்தது. 1964இல் இந்திய அரசு டாக்டர்
D.S. கோத்தாரி தலைமையில் ஒரு கல்விக்குழுவை நியமித்தது. அக்குழு 14 வயது வரையிலான அனைத்து
குழந்தைகளுக்கும் இலவச மற்றும் கட்டாய தொடக்க கல்வியையும் நாடு முழுவதும் ஒரே மாதிரியான
10 + 2 + 3 கல்வி அமைப்பையும் பரிந்துரை செய்தது.