Home | 12 ஆம் வகுப்பு | 12வது இயற்பியல் | நிலை மின்னியல்: பாடச்சுருக்கம் மற்றும் சூத்திரங்கள்

இயற்பியல் - நிலை மின்னியல்: பாடச்சுருக்கம் மற்றும் சூத்திரங்கள் | 12th Physics : UNIT 1 : Electrostatics

   Posted On :  15.10.2022 01:43 am

12 வது இயற்பியல் : அலகு 1 : நிலை மின்னியல்

நிலை மின்னியல்: பாடச்சுருக்கம் மற்றும் சூத்திரங்கள்

ஓரின மின் துகள்கள் ஒன்றையொன்று விலக்கும், வேறின மின் துகள்கள் ஒன்றையொன்று கவரும்

பாடச்சுருக்கம்

• ஓரின மின் துகள்கள் ஒன்றையொன்று விலக்கும், வேறின மின் துகள்கள் ஒன்றையொன்று கவரும்

• பிரபஞ்சத்தின் மொத்த மின்னூட்ட மதிப்பு மாறாதது.

• மின்னூட்டம் குவாண்டமாக்கல் தன்மை உடையது.

• அதாவது, ஒரு பொருளின் மொத்த மின்னூட்டம் q = ne. இங்கு n = 0,1,2,3..... மற்றும் e என்பதுஎலக்ட்ரானின் மின்னூட்டம்.

• கூலூம் விதியின் வெக்டர் வடிவம்  r^ என்பது r^ q1, மற்றும் q2 ஐ இணைக்கும்கோட்டின் திசையில் செயல்படும் ஓரலகு வெக்டர்)

• மின் துகள்களின் தொடர் பரவல்களுக்கு தொகையிடல் முறைகளைப் பயன்படுத்தலாம்.

• நிலைமின் விசைகள் மேற்பொருந்துதல் தத்துவத்திற்கு உட்படும்.

• ஒரு புள்ளி மின்துகளிலிருந்து r தொலைவில் உள்ள புள்ளியில் மின்புலமானது

• மின்புலக் கோடுகள் நேர் மின்துகளிலிருந்து தொடங்கி எதிர் மின்துகளிலோ அல்லது முடிவிலாத் தொலைவிலோ முடிவடையும்.

• மின் இருமுனையால் அதன் அச்சுக்கோட்டில் உள்ள புள்ளிகளில் ஏற்படும் மின்புலம் 

• மின் இருமுனையால் நடுவரைக் கோட்டில் உள்ள புள்ளிகளில் ஏற்படும் மின்புலம் 

• சீரான மின்புலத்தில் வைக்கப்படும் இருமுனை மீது செயல்படும் திருப்பு விசை 

• புள்ளி மின்துகளிலிருந்து r தொலைவில் நிலை மின்னழுத்தம் 

• மின் இருமுனையால் ஏற்படும் நிலை மின்னழுத்தம் 

• சம மின்னழுத்தப் பரப்பிலுள்ள அனைத்துப் புள்ளிகளிலும் நிலை மின்னழுத்தம் சமமாகும்.

• மின்புலத்திற்கும் நிலை மின்னழுத்தத்திற்கும் இடையேயான தொடர்பு 

• மின்துகள்களினால் ஆன அமைப்பின் நிலை மின்னழுத்த ஆற்றலானது மின்துகள்களைஅவ்வடிவமைப்பில் நிலை நிறுத்துவதற்குச் செய்யப்படும் வேலைக்குச் சமமாகும்.

• சீரான மின்புலத்திலுள்ள மின் இருமுனை அமைப்பில் தேக்கி வைக்கப்படும் நிலை மின்னழுத்தஆற்றல் 

• ஒரு மூடிய பரப்பின் வழியே செல்லும் மொத்த மின்பாயம்  இங்கு Q என்பது மூடியபரப்பினுள் உள்ள மின்துகள்களின் நிகர மின்னூட்டமாகும்.

• மின்னூட்டம் பெற்ற முடிவிலா கம்பியினால் ஏற்படும் மின்புலம் 

• மின்னூட்டம் பெற்ற முடிவிலா சமதளப் பரப்பினால் ஏற்படும் மின்புலம் (சமதளத்திற்கு செங்குத்தாக அமையும்).

• மின்னூட்டம் பெற்ற கோளகக் கூட்டின் உட்புறம் மின்புலம் சுழி; வெளிப்புள்ளிகளுக்கு 

• ஒரு மின்கடத்தியின் உட்புறம் மின்புலம் சுழியாகும். அதன் புறப்பகுதியில் மின்புலமானது கடத்தியின் பரப்பிற்கு செங்குத்தாகவும் எண்மதிப்பு  கொண்டதாகவும் இருக்கும்.

• கடத்தியின் பரப்பின் மீதுள்ள அனைத்து புள்ளிகளிலும் மின்னழுத்தம் சமமாகும்.

• மின் தூண்டல் முறையைப் பயன்படுத்தி கடத்தியை மின்னேற்றம் செய்யலாம்.

• மின்காப்பு அல்லது மின்கடத்தாப் பொருள்களில் கட்டுறா எலக்ட்ரான்கள் கிடையாது. ஆனால் மின்புலத்தில் அவை வைக்கப்படும் போது மின்முனைவாக்கம் அடைகின்றன.

• மின்தேக்குத்திறன் C = Q/V

• இணைத்தட்டு மின்தேக்கியின் மின்தேக்குத்திறன் C = 

• மின்தேக்கி ஒன்றில் சேமித்து வைக்கப்படும் நிலை மின்னழுத்த ஆற்றல் U = 1/2 CV2

• மின்தேக்கிகள் பக்க இணைப்பில் உள்ள போது தொகுபயன் மின்தேக்குத்திறனானது தனித்தனி மின்தேக்குத் திறன்களின் கூடுதலுக்குச் சமமாகும்.

• மின்தேக்கிகள் தொடரிணைப்பில் உள்ள போது தொகுபயன் மின்தேக்குத் திறனின் தலைகீழ் மதிப்பு தனித்தனி மின்தேக்குத் திறன்களின் தலைகீழ் மதிப்புகளின் கூடுதலுக்குச் சமமாகும்.

• ஒரு கடத்தியில் மின்துகள்களின் பரவலானது கடத்தியின் வடிவத்தைப் பொறுத்தது. கடத்தியின் கூர்முனைகளில், மின்னூட்டப் பரப்படர்த்தி அதிகமாகும். இத்தத்துவம் மின்னல் கடத்திகளில் பயன்படுகிறது.

• பெரிய அளவிலான மின்னழுத்த வேறுபாடுகளை உருவாக்க (~107 V), வான் டி கிராப் இயற்றி பயன்படுத்தப்படுகிறது.


Tags : Physics இயற்பியல்.
12th Physics : UNIT 1 : Electrostatics : Electrostatics: Summary and Formulas Physics in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 வது இயற்பியல் : அலகு 1 : நிலை மின்னியல் : நிலை மின்னியல்: பாடச்சுருக்கம் மற்றும் சூத்திரங்கள் - இயற்பியல் : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 வது இயற்பியல் : அலகு 1 : நிலை மின்னியல்