Home | 12 ஆம் வகுப்பு | 12வது இயற்பியல் | மின்புலத்திற்கும் மின்னழுத்தத்திற்கும் இடையேயான தொடர்பு

நிலை மின்னியல் - மின்புலத்திற்கும் மின்னழுத்தத்திற்கும் இடையேயான தொடர்பு | 12th Physics : UNIT 1 : Electrostatics

   Posted On :  04.12.2023 10:42 am

12 வது இயற்பியல் : அலகு 1 : நிலை மின்னியல்

மின்புலத்திற்கும் மின்னழுத்தத்திற்கும் இடையேயான தொடர்பு

இயற்பியல் : நிலை மின்னியல்: நிலை மின்னழுத்தமும் மின்னழுத்த ஆற்றலும் : மின்புலத்திற்கும் மின்னழுத்தத்திற்கும் இடையேயான தொடர்பு

மின்புலத்திற்கும் மின்னழுத்தத்திற்கும் இடையேயான தொடர்பு

ஆதிப்புள்ளியில் வைக்கப்பட்டுள்ள நேர் மின்துகள் q வைக் கருதுவோம். E மின்புலத்தில்ஓரலகு மின்னோட்டம் கொண்ட நேர் மின்துகள் ஒன்றை dx தொலைவு நகர்த்த செய்யப்படும் வேலை dW = -E dx.இங்கு எதிர்க்குறியானது மின்புலத்திற்கு எதிராக வேலை செய்யப்படுகிறது என்பதை உணர்த்துகிறது. இந்த வேலை மின்னழுத்த வேறுபாட்டிற்குச் சமமாகும். எனவே,


இதிலிருந்து, மின்புலமானது எதிர்க்குறியிடப்பட்ட மின்னழுத்தச் சரிவுக்கு சமம் என்றாகிறது. மேலே உள்ள சமன்பாடு (1.43) x - கூறுக்கு மட்டும் பொருந்தும். மின்புலமானது மூன்று கூறுகளுக்கும் பொதுவாக பின்வருமாறு எழுதப்படுகிறது.



எடுத்துக்காட்டு 1.14

x-ஆயத்தொலைவின் சார்பாக மட்டும் குறிக்கப்படும் மின்னழுத்தம் படத்தில் காட்டப்பட்டுள்ளது. X ன்  சார்பாக மின்புலத்தை வரைந்து காட்டுக.


 

தீர்வு

இக்கணக்கில் x ஐ சார்ந்து மட்டுமே மின்னழுத்தம்உள்ளதால்  என்ற சமன்பாட்டைப்பயன்படுத்தலாம். (மற்ற இரு உறுப்புகளான  மற்றும்  சுழியாகும்).

0 முதல் 1 cm வரை, சாய்வு மாறிலியாக உள்ளது. மேலும் dv / dx = 25v cm−1 எனவே, 

1 முதல் 4 cm வரை, மின்னழுத்தம் மாறாமல் உள்ளது V = 25 V. அதாவது dv / dx = 0. எனவே, ஆகும். 

4 முதல் 5 cm வரை, சாய்வு dv / dx = 25V cm−1 எனவே, 

x- அச்சின் பல்வேறு புள்ளிகளில் மின்புலத்தின் வரைபடம் இங்கே தரப்பட்டுள்ளது.


Tags : Electrostatics நிலை மின்னியல்.
12th Physics : UNIT 1 : Electrostatics : Relation between electric field and potential Electrostatics in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 வது இயற்பியல் : அலகு 1 : நிலை மின்னியல் : மின்புலத்திற்கும் மின்னழுத்தத்திற்கும் இடையேயான தொடர்பு - நிலை மின்னியல் : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 வது இயற்பியல் : அலகு 1 : நிலை மின்னியல்