கேள்வி பதில்கள் மற்றும் தீர்வுகள் | இயற்கணிதம் | இரண்டாம் பருவம் அலகு 3 | 7ஆம் வகுப்பு கணக்கு - பயிற்சி 3.3 | 7th Maths : Term 2 Unit 3 : Algebra
பயிற்சி 3.3
1. கோடிட்ட இடங்களை நிரப்புக.
(i) a3b2c4d2 என்னும் உறுப்பின் படி ________
விடை : 11
(ii) மாறிலி உறுப்பின் படி ________
விடை : 0
(iii) 3z2y + 2x - 3 என்னும் கோவையின் அதிகபட்சப் படி உடைய தலையாய உறுப்பின் கெழு
விடை : 3
2. சரியா, தவறா எனக் கூறுக.
(i) m2n மற்றும் mn2 இன் படிகள் சமமானவை.
விடை : சரி
(ii) 7a2b மற்றும் -7ab2 ஆகியன ஒத்த உறுப்புகள் ஆகும்.
விடை : தவறு
(iii) -4x2yz என்னும் கோவையின் படி -4 ஆகும்.
விடை : தவறு
(iv) ஒரு கோவையின் படி என்பது, ஏதேனும் ஒரு முழுக்களாக இருக்கக்கூடும்.
விடை : சரி
3. பின்வரும் உறுப்புகளின் படியைக் காண்க.
(i) 5x2
(ii) -7ab
(iii) 12pq2r2
(iv) -125
(v) 3z
தீர்வு :
(i) 5x2 ---------------- படி 2
(ii) -7ab ---------------- படி 2
(iii) 12pq2r2 ---------------- படி 5
(iv) -125 ---------------- படி 0
(v) 3z ---------------- படி 1
4. பின்வரும் கோவைகளின் படியைக் காண்க.
(i) x3 - 1
(ii) 3x2 + 2x + 1
(iii) 3t4 - 5st2 + 7s3t2
(iv) 5 - 9y + 15y2 - 6y3
(v) u5 + u4v + u3v2 + u2v3 + uv4
தீர்வு :
(i) x3 – 1 ---------------- படி 3
(ii) 3x2 + 2x + 1 ---------------- படி 2
(iii) 3t4 - 5st2 + 7s3t2 ---------------- படி 5
(iv) 5 - 9y + 15y2 - 6y3 ---------------- படி 3
(v) u5 + u4v + u3v2 + u2v3 + uv4 ---------------- படி 5
5. ஒத்த உறுப்புகளைக் கண்டறிக :
12x3y2z, -y3x2z, 4z3y2x, 6x3z2y, -5y3x2z
தீர்வு :
ஒத்த உறுப்புகள்
–y3x2z மற்றும் -5y3x2z
6. பின்வரும் கோவைகளைக் கூட்டி, அதன் படியைக் காண்க.
(i) (9x + 3y) மற்றும் (10x - 9y)
(ii) (k2 - 25k + 46) மற்றும் (23 - 2k2 + 21k)
(iii) (3m2n + 4pq2) மற்றும் (5nm2 - 2q2p)
தீர்வு :
(i) (9x +3y) + (10x - 9y)
= 9x + 3y + 10x - 9y
= 19x - 6y
படி 1
(ii) (k2 - 25k + 46) + (23 - 2k2 + 21k)
= k2 - 25k + 45 + 23 - 2k2 + 21k
= -k2 - 4k + 69
படி 2
(iii) (3m2n + 4pq2) + (5nm2 - 2q2p)
= 3m2n + 4pq2 + 5nm2 - 2q2p
= 8m2n + 2pq2
படி 3
7. பின்வரும் கோவைகளைச் சுருக்கி, அதன் படியைக் காண்க.
(i) 10x2 - 3xy + 9y2 - (3x2 - 6xy - 3y2)
(ii) 9a4 - 6a3 - 6a4 - 3a2 + 7a3 + 5a2
(iii) 4x2 - 3x - [8x - (5x2 - 8)]
தீர்வு :
(i) (10x2 - 3xy + 9y2 ) - (3x2 - 6xy - 3y2)
= 10x2 - 3xy + 9y2 - 3x2 + 6xy + 3y2
= 7x2 + 3xy + 12y2
படி 2
(ii) 9a4 - 6a3 - 6a4 - 3a2 + 7a3 + 5a2
= 9a4 - 6a4 - 6a3 + 7a3 - 3a2 + 5a2
= 3a4 + a3 + 2a2
படி 4
(iii) 4x2 - 3x - [8x - (5x2 - 8)]
= 4x3 – 3x - (8x - 5x2 + 8)
= 4x3 – 3x - 8x + 5x2 - 8
= 9x2 - 11x - 8
படி 2
கொள்குறி வகை வினாக்கள்
8. 3p3 - 5pq + 2q2 + 6pq – q2 + pq என்பது ஒரு
(i) ஓருறுப்புக்கோவை
(ii) ஈருறுப்புக் கோவை
(iii) மூவுறுப்புக் கோவை
(iv) நான்கு உறுப்புக் கோவை
விடை : (iii) மூவுறுப்புக் கோவை
9. 6x7 - 7x3 + 4 இன் படி
(i) 7
(ii) 3
(iii) 6
(iv) 4
விடை : (i) 7
10. p(x) மற்றும் q(x) என்பன படி 3 உடைய இரு கோவைகள் எனில், p(x) + q(x) இன் படி
(i) 6
(ii) 0
(iii) 3
(iv) வரையறுக்கப்படவில்லை
விடை : (iii) 3
விடைகள் :
பயிற்சி 3.3
1. (i) 11 (ii) 0 (iii) 3
2. (i) சரி (ii) தவறு (iii) தவறு (iv)
3. (i) 2 (ii) 2 (iii) 5 (iv) 0 (v) 1
4. (i) 3 (ii) 2 (iii) 5 (iv) 3 (v) 5
5. − y3 x2z மற்றும் −5y3 x2z
6. (i) 19x − 6y ; 1 (ii) − k2 − 4k + 69 ; 2 (iii) 8m2n + 2 pq2 ; 3
7. (i) 7x2 + 3xy + 12 y2 ; 2 (ii) 3a4 + a3 + 2a2 ; 4 (iii) 9x2 − 11x − 8 ; 2
கொள்குறி வகை வினாக்கள்
8. (iii) மூவுறுப்புக் கோவை
9. (i) 7
10. (iii) 3