Home | 10 ஆம் வகுப்பு | 10வது கணிதம் | பயிற்சி 8.4 : நிகழ்தகவின் கூட்டல் தேற்றம்

கேள்வி பதில்கள் மற்றும் தீர்வுகள் | கணக்கு - பயிற்சி 8.4 : நிகழ்தகவின் கூட்டல் தேற்றம் | 10th Mathematics : UNIT 8 : Statistics And Probability

   Posted On :  21.08.2022 02:23 am

10வது கணக்கு : அலகு 8 : புள்ளியியலும் நிகழ்தகவும்

பயிற்சி 8.4 : நிகழ்தகவின் கூட்டல் தேற்றம்

கணக்கு புத்தக பயிற்சி கேள்விகளுக்கான பதில்கள் மற்றும் தீர்வு - கணிதம் : நிகழ்தகவு : நிகழ்தகவின் கூட்டல் தேற்றம் : பயிற்சி வினாக்கள் விடை தீர்வு

பயிற்சி 8.4

1. P (A) = 2/3, P (B) = 2/5, P (A  B) = 1/3 எனில், P (A Ո B) காண்க. 



2. A மற்றும் B ஆகியவை இரு நிகழ்ச்சிகள். மேலும், (A) = 0. 42,  P (B) = 0.48 , மற்றும் P ( B) = 0.16 எனில் 

(i) PAஇல்லை)

(ii) P(B இல்லை)

(iii) P(A அல்லது B)

ஆகியவற்றைக் காண்க. 



3. ஒரு சமவாய்ப்புச் சோதனையில் A, B ஆகியவை ஒன்றையொன்று விலக்கும் நிகழ்ச்சிகள். மேலும் P(Aஇல்லை) = 0.45, (U B) = 0.65 எனில், (B) -ஐக் காண்க. 



4. A மற்றும் B -யில், குறைந்தது ஏதாவது ஒன்று நிகழ்வதற்கான நிகழ்தகவு 0.6. A மற்றும் B ஒரே நேரத்தில் நடைபெறுவதற்கான நிகழ்தகவு 0.2 எனில், P () + P () -ஐக் காண்க.


 

5. நிகழ்ச்சி A -க்கான நிகழ்தகவு 0.5 மற்றும் B -க்கான நிகழ்தகவு 0.3. A மற்றும் B ஆகியவை ஒன்றையொன்று விலக்கும் நிகழ்ச்சிகள் எனில், A -ம், B -ம் நிகழாமல் இருப்பதற்கான நிகழ்தகவைக் காண்க. 



6. இரண்டு பகடைகள் ஒரு முறை உருட்டப்படுகின்றன. முதல் பகடையில் முக மதிப்பு இரட்டைப் படை எண் அல்லது முக மதிப்புகளின் கூடுதல் 8 ஆகக் கிடைப்பதற்கான நிகழ்தகவைக் காண்க. 



7. நன்கு கலைத்து அடுக்கிய 52 சீட்டுகளைக் கொண்ட கட்டிலிருந்து, சமவாய்ப்பு முறையில் ஒரு சீட்டு எடுக்கப்படுகிறது. அது சிவப்பு இராசாவாக அல்லது கருப்பு இராணியாக இருப்பதற்கான நிகழ்தகவைக் காண்க 



8. ஒரு பெட்டியில் 3, 5, 7, 9, ... 35, 37 என்ற எண்கள் குறிக்கப்பட்ட சீட்டுகள் உள்ளன. சமவாய்ப்பு முறையில் எடுக்கப்படும் ஒரு சீட்டு ஆனது 7-ன் மடங்காக அல்லது பகா எண்ணாக இருப்பதற்கான நிகழ்தகவைக் காண்க. 



9. சீரான மூன்று நாணயங்கள் ஒரு முறை சுண்டப்படுகின்றன. அதிகபட்சம் 2 பூக்கள் அல்லது குறைந்தபட்சம் 2 தலைகள் கிடைப்பதற்கான நிகழ்தகவைக் காண்க.



10. ஒருவருக்கு மின்சார ஒப்பந்தம் கிடைப்பதற்கான நிகழ்தகவு 3/5 மற்றும் குழாய்கள் பொருத்துவதற்கான ஒப்பந்தம் கிடைக்காமல் இருப்பதற்கான நிகழ்தகவு 5/8 ஆகும். மேலும் குறைந்தபட்சம் ஏதாவது ஒரு ஒப்பந்தம் கிடைக்கப்பெறுவதற்கான நிகழ்தகவு 5/7 எனில், இரண்டு ஒப்பந்தங்களும் கிடைப்பதற்கான நிகழ்தகவு என்ன? 



11. 8000 மக்கள்தொகை கொண்ட ஒரு நகரத்தில், 1300 பேர் 50 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் 3000 பேர் பெண்கள். மேலும் 50 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் 30% உள்ளனர் எனவும் தெரியவருகிறது. தேர்ந்தெடுக்கப்படும் ஒரு நபர், பெண்ணாக அல்லது 50 வயதிற்கு மேற்பட்டவராக இருப்பதற்கான நிகழ்தகவைக் காண்க. 



12. ஒரு நாணயம் மூன்று முறை சுண்டப்படுகிறது. சரியாக இரண்டு தலைகள் அல்லது குறைந்தபட்சம் ஒரு பூ அல்லது அடுத்தடுத்து இரண்டு தலைகள் கிடைப்பதற்கான நிகழ்தகவைக் காண்க. 



13. A, B, C என்பன ஏதேனும் மூன்று நிகழ்ச்சிகள். மேலும் B கிடைப்பதற்கான நிகழ்தகவு A -ன் நிகழ்தகவைப் போல இருமடங்காகவும், C கிடைப்பதற்கான நிகழ்தகவு A -ஐ விட மூன்று மடங்காகவும் உள்ளன. மேலும் P (A ∩ B) = 1/6.  ( C) = 1/4, P ( C) = 1/8, P ( B C) = 9/10, P ( B C) = 1/15, எனில், (A), P (B) மற்றும் P (C) -ஐக் காண்க? 



14. 35 மாணவர்கள் உள்ள ஒரு வகுப்பில் ஒவ்வொருவருக்கும் 1 முதல் 35 வரை எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. மாணவர்களுக்கும் மாணவிகளுக்கும் உள்ள விகிதமானது 4:3 ஆகும். வரிசை எண்கள் மாணவர்களில் தொடங்கி மாணவிகளில் முடிவடைகிறது. ஒருவர் வகுப்பிலிருந்து தேர்ந்தெடுக்கப்படுகிறார். அவர் பகா எண்ணை வரிசை எண்ணாகக் கொண்ட மாணவராகவோ அல்லது பகு எண்ணை வரிசை எண்ணாகக் கொண்ட மாணவியாகவோ அல்லது இரட்டை எண்ணை வரிசை எண்ணாகக் கொண்டவராகவோ இருப்பதற்கான நிகழ்தகவைக் காண்க.



விடைகள்:

1. 11/15

2. (i) 0.58 (ii) 0.52 (iii) 0.74

3. 0.1

4. 1.2

5. 0.2

6. 5/9

7. 1/13

8. 13/18

9. 7/8

10. 73/280

11. 17/40 

12. 1 

13. 11/48, 11/24, 11/16

14. 29/35



Tags : Problem Questions with Answer, Solution | Mathematics கேள்வி பதில்கள் மற்றும் தீர்வுகள் | கணக்கு.
10th Mathematics : UNIT 8 : Statistics And Probability : Exercise 8.4: Addition Theorem of Probability Problem Questions with Answer, Solution | Mathematics in Tamil : 10th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 10வது கணக்கு : அலகு 8 : புள்ளியியலும் நிகழ்தகவும் : பயிற்சி 8.4 : நிகழ்தகவின் கூட்டல் தேற்றம் - கேள்வி பதில்கள் மற்றும் தீர்வுகள் | கணக்கு : 10 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
10வது கணக்கு : அலகு 8 : புள்ளியியலும் நிகழ்தகவும்