Home | 10 ஆம் வகுப்பு | 10வது கணிதம் | பலவுள் தெரிவு வினாக்கள்

புள்ளியியலும் நிகழ்தகவும் | கணக்கு - பலவுள் தெரிவு வினாக்கள் | 10th Mathematics : UNIT 8 : Statistics And Probability

   Posted On :  21.08.2022 02:39 am

10வது கணக்கு : அலகு 8 : புள்ளியியலும் நிகழ்தகவும்

பலவுள் தெரிவு வினாக்கள்

கணக்கு : புள்ளியியலும் நிகழ்தகவும் : பலவுள் தெரிவு வினாக்கள் : விடைகள் / சரியான விடையை தேர்ந்தெடுத்து பதில்களுடன் எழுதுக - கணக்கு புத்தகத்திலுள்ள ஒரு மதிப்பெண் பயிற்சி வினா விடைகள்

பயிற்சி 8.5

பலவுள் தெரிவு வினாக்கள் 


1. கீழே கொடுக்கப்பட்டவைகளில் எது பரவல் அளவை இல்லை?

(அ) வீச்சு

(ஆ) திட்டவிலக்கம் 

(இ) கூட்டுச் சராசரி

(ஈ) விலக்க வர்க்கச் சராசரி 


2. 8, 8, 8, 8, 8..., 8 ஆகிய தரவின் வீச்சு 

(அ) 0 

(ஆ) 1 

(இ) 8

(ஈ) 3 



3. சராசரியிலிருந்து கிடைக்கப் பெற்ற தரவுப் புள்ளிகளுடைய விலக்கங்களின் கூடுதலானது -------------.

(அ) எப்பொழுதும் மிகை எண்

(ஆ) எப்பொழுதும் குறை எண் 

(இ) பூச்சியம்

(ஈ) பூச்சியமற்ற முழுக்கள் 



4. 100 தரவுப் புள்ளிகளின் சராசரி 40 மற்றும் திட்டவிலக்கம் 3 எனில், தரவுகளின் வர்க்கங்களின் கூடுதலானது 

(அ) 40000 

(ஆ) 160900 

(இ) 160000 

(ஈ) 30000



5. முதல் 20 இயல் எண்களின் விலக்க வர்க்கச் சராசரியானது 

(அ) 32.25 

(ஆ) 44.25 

(இ) 33.25

(ஈ) 30 



6. ஒரு தரவின் திட்டவிலக்கமானது 3. ஒவ்வொரு மதிப்பையும் 5-ஆல் பெருக்கினால் கிடைக்கும் புதிய தரவின் விலக்க வர்க்கச் சராசரியானது 

(அ) 3 

(ஆ) 15 

(இ) 5

(ஈ) 225 



7. x, y, z ஆகியவற்றின் திட்டவிலக்கம் p-எனில், 3x + 5, 3y + 5, 3z + 5 ஆகியவற்றின் திட்டவிலக்கமானது 

(அ) 3p + 5

(ஆ) 3p 

(இ) p + 5

(ஈ) 9p + 15



8. ஒரு தரவின் சராசரி மற்றும் மாறுபாட்டுக் கெழு முறையே 4 மற்றும் 87.5% எனில் திட்டவிலக்கமானது 

(அ) 3.5 

(ஆ) 3 

(இ) 4.5

(ஈ) 2.5 



9. கொடுக்கப்பட்டவைகளில் எது தவறானது?

(அ) P (A) > 1

(ஆ) 0 ≤ P (A) ≤ 1

(இ) P(ɸ) = 0

(ஈ) P (A) + P () = 1



10. p சிவப்பு, q நீல, r பச்சை நிறக் கூழாங்கற்கள் உள்ள ஒரு குடுவையில் இருந்து ஒரு சிவப்பு கூழாங்கல் எடுப்பதற்கான நிகழ்தகவானது 




11. ஒரு புத்தகத்திலிருந்து சமவாய்ப்பு முறையில் ஒரு பக்கம் தேர்ந்தெடுக்கப்படுகிறது. அந்தப் பக்க எண்ணின் ஒன்றாம் இட மதிப்பானது 7-ஐ விடக் குறைவாக இருப்பதற்கான நிகழ்தகவானது

(ஆ) 3/10

(ஆ) 7/10

(இ) 3/9

(ஈ) 7/9



12. ஒரு நபருக்கு வேலை கிடைப்பதற்கான நிகழ்தகவானது x/3 வேலை கிடைக்காமல் இருப்பதற்கான நிகழ்தகவு 2/3 எனில் x -யின் மதிப்பானது 

(அ) 2

(ஆ) 1

(இ) 3

(ஈ) 1.5 



13. கமலம், குலுக்கல் போட்டியில் கலந்துகொண்டாள். அங்கு மொத்தம் 135 சீட்டுகள் விற்கப்பட்டன. கமலம் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு 1/9 எனில், கமலம் வாங்கிய சீட்டுகளின் எண்ணிக்கை, 

(அ) 5

(ஆ) 10

(இ) 15

(ஈ) 20 



14. ஆங்கில எழுத்துகள் {a,b,...,z} -யிலிருந்து ஓர் எழுத்து சமவாய்ப்பு முறையில் தேர்வு செய்யப்படுகிறது. அந்த எழுத்து x-க்கு முந்தைய எழுத்துகளில் ஒன்றாக இருப்பதற்கான நிகழ்தகவு

(அ) 12/13

(ஆ) 1/13

(இ) 23/26

(ஈ) 3/26



15. ஒரு பணப்பையில் ₹2000 நோட்டுகள் 10-ம், ₹500 நோட்டுகள் 15-ம், ₹200 நோட்டுகள் 25-ம் உள்ளன. ஒரு நோட்டு சமவாய்ப்பு முறையில் எடுக்கப்படுகின்றது எனில், அந்த நோட்டு ₹500 நோட்டாகவோ அல்லது ₹200 நோட்டாகவோ இருப்பதற்கான நிகழ்தகவு என்ன?

(அ) 1/5

(ஆ) 3/10

(இ) 2/3

(ஈ) 4/5





Tags : Statistics and Probability | Mathematics புள்ளியியலும் நிகழ்தகவும் | கணக்கு.
10th Mathematics : UNIT 8 : Statistics And Probability : Multiple choice questions Statistics and Probability | Mathematics in Tamil : 10th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 10வது கணக்கு : அலகு 8 : புள்ளியியலும் நிகழ்தகவும் : பலவுள் தெரிவு வினாக்கள் - புள்ளியியலும் நிகழ்தகவும் | கணக்கு : 10 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
10வது கணக்கு : அலகு 8 : புள்ளியியலும் நிகழ்தகவும்