Home | 7 ஆம் வகுப்பு | 7வது அறிவியல் | அடிப்படை மற்றும் வழி அளவுகள்

அளவீட்டியல் | முதல் பருவம் அலகு 1 | 7 ஆம் வகுப்பு அறிவியல் - அடிப்படை மற்றும் வழி அளவுகள் | 7th Science : Term 1 Unit 1 : Measurement

7 ஆம் வகுப்பு அறிவியல் : முதல் பருவம் அலகு 1 : அளவீட்டியல்

அடிப்படை மற்றும் வழி அளவுகள்

பொதுவாக இயற்பியல் அளவுகள் இரண்டு வகைப்படும். அவை அடிப்படை அளவுகள் மற்றும் வழி அளவுகள்.

அடிப்படை மற்றும் வழி அளவுகள் 

பொதுவாக இயற்பியல் அளவுகள் இரண்டு வகைப்படும். அவை அடிப்படை அளவுகள் மற்றும் வழி அளவுகள்.


அடிப்படை அளவுகள் 

வேறு எந்த இயற்பியல் அளவுகளாலும் குறிப்பிடப்பட இயலாத இயற்பியல் அளவுகள் அடிப்படை அளவுகள் எனப்படும். எ.கா: நீளம், நிறை, காலம். அடிப்படை அளவுகளை அளந்தறியப் பயன்படும் அலகுகள் அடிப்படை அலகுகள் எனப்படும். SI (System International Unit) அலகு முறையில் ஏழு அடிப்படை அளவுகள் உள்ளன. அடிப்படை அளவுகளும் அவற்றின் அலகுகளும்  அட்டவணை 1.1 ல் கொடுக்கப்பட்டுள்ளன.


அட்டவணை 1.1 அடிப்படை அளவுகள் மற்றும் அலகுகள் 


அடிப்படை அளவுகள் அடிப்படை அலகுகள் 

நீளம் மீட்டர் (m) 

நிறை கிலோகிராம் (kg) 

காலம் வினாடி (s) 

வெப்பநிலை கெல்வின் (K) 

மின்னோட்டம் ஆம்பியர் (A) 

பொருளின் அளவு மோல் (mol ) 

ஒளிச்செறிவு கேண்டிலா (cd)




வழி அளவுகள்

அடிப்படை அளவுகளைப் பெருக்கியோ, வகுத்தோ அல்லது கணித முறைப்படி இணைத்தோ பெறப்படும் பிற இயற்பியல் அளவுகள் வழி அளவுகள் எனப்படும். எ.கா : பரப்பளவு , கனஅளவு. வழி அளவுகளை அளவிடப் பயன்படும் அலகுகள் வழி அலகுகள் எனப்படும். ஒரு சில வழி அளவுகளும் அவற்றின் அலகுகளும் கீழே உள்ள அட்டவணையில் தரப்பட்டுள்ளன.


அட்டவணை 1.2 வழி அளவுகளும் அலகுகளும் 

வழி அளவுகள் அலகுகள் 

பரப்பு = நீளம் × அகலம்       மீ2

கன அளவு = நீளம் ×  அகலம்  ×    உயரம் மீ3

வேகம் = தூரம் / காலம் மீ வி-1 

மின்னூட்டம் = மின்னோட்டம்  ×   நேரம் கூலும் 

அடர்த்தி = நிறை / கனஅளவு கிகிமீ-3





Tags : Measurement | Term 1 Unit 1 | 7th Science அளவீட்டியல் | முதல் பருவம் அலகு 1 | 7 ஆம் வகுப்பு அறிவியல்.
7th Science : Term 1 Unit 1 : Measurement : Fundamental and derived quantities Measurement | Term 1 Unit 1 | 7th Science in Tamil : 7th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 7 ஆம் வகுப்பு அறிவியல் : முதல் பருவம் அலகு 1 : அளவீட்டியல் : அடிப்படை மற்றும் வழி அளவுகள் - அளவீட்டியல் | முதல் பருவம் அலகு 1 | 7 ஆம் வகுப்பு அறிவியல் : 7 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
7 ஆம் வகுப்பு அறிவியல் : முதல் பருவம் அலகு 1 : அளவீட்டியல்