அளவீட்டியல் | முதல் பருவம் அலகு 1 | 7 ஆம் வகுப்பு அறிவியல் - வினா விடை | 7th Science : Term 1 Unit 1 : Measurement

   Posted On :  22.05.2022 06:50 pm

7 ஆம் வகுப்பு அறிவியல் : முதல் பருவம் அலகு 1 : அளவீட்டியல்

வினா விடை

7 ஆம் வகுப்பு அறிவியல் : அளவீட்டியல்முதல் பருவம் அலகு 1 : புத்தக வினாக்களுக்கான கேள்வி பதில்கள்
மதிப்பீடு


I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக 

1. பின்வருவனவற்றுள் எது வழி அளவு?

அ) நிறை 

ஆ) நேரம் 

இ) பரப்பு 

ஈ) நீளம் 

விடை :  இ) பரப்பு

 

2. பின்வருவனவற்றுள் எது சரி? 

அ) 1L=1cc 

ஆ) 1L=10cc 

இ) 1L=100cc 

ஈ) 1L=1000cc

விடை :  ஈ) 1L = 1000cc 


3. அடர்த்தியின் SI அலகு 

அ) கிகி/மீ2 

ஆ) கிகி/மீ3 

இ) கிகி/மீ 

ஈ) கி/மீ3

விடை :  ஆ) கிகி/மீ3 


4. சம நிறையுள்ள இரு கோளங்களின் கன அளவுகளின் விகிதம் 2 : 1 எனில், அவற்றின் அடர்த்தியின் விகிதம் 

அ) 1 : 2 

ஆ) 2 : 1

இ) 4 : 1 

ஈ) 1 : 4 

விடை :  அ) 1 : 2 


5. ஒளி ஆண்டு என்பது எதன் அலகு? 

அ) தொலைவு 

ஆ) நேரம் 

இ) அடர்த்தி 

ஈ) நீளம் மற்றும் நேரம்

விடை :  அ) தொலைவு 



II. கோடிட்ட இடத்தை நிரப்புக

1. ஒழுங்கற்ற வடிவமுள்ள பொருள்களின் பருமனை அளக்க __________ விதி பயன்படுகிறது. 

விடை : நீர் இடப்பெயர்ச்சி

2. ஒரு கன மீட்டர் என்பது __________ கன சென்டிமீட்டர்

விடை : 1,000,000 cm3 (or) (100 cm3

3. பாதரசத்தின் அடர்த்தி __________

விடை : 13.6 gkm3 (or) 13.600 kg/m3

4. ஒரு வானியல் அலகு என்பது __________

விடை :  1.496 x 1011m

5. ஓர் இலையின் பரப்பை __________ பயன்படுத்தி கணக்கிடலாம். 

விடை : வரைபடத் தாள் 



III. சரியா அல்லது தவறா எனக் கூறுக. தவறான கூற்றைத் திருத்தி எழுதுக 

1. ஒரு பொருளின் எல்லை அடைத்துக் கொள்ளும் இடமே அப்பொருளின் பரப்பளவு ஆகும்.

விடை : தவறு  

காரணம் : ஒரு பொருளின் மேற்பரப்பே அதன் பரப்பளவு எனப்படும்


2. திரவங்களின் கன அளவை அளவிடும் முகவை மூலம் அளக்கலாம்.

விடை : சரி 


3. நீர் மண்ணெண்ணெயை விட அதிக அடர்த்தி கொண்டது.

விடை : சரி


4. இரும்புக் குண்டு பாதரசத்தில் மிதக்கும்.

விடை : சரி 


5. ஓரலகு பருமனில் குறைந்த எண்ணிக்கையிலான மூலக்கூறுகளைக் கொண்ட பொருள் அடர்த்தி அதிகமுடைய பொருள் எனப்படும். 

விடை : தவறு 

காரணம் : ஓரலகு பருமனின் குறைந்த எண்ணிக்கையிலான மூலக்கூறுகளைக் கொண்ட பொருள் அடர்வு குறைவுடைய பொருள் எனப்படும்.



IV. பொருத்துக

I II 

1. பரப்பு - அ) ஒளி ஆண்டு

2. தொலைவு - ஆ) மீ3

3. அடர்த்தி - இ) மீ2 

4. கன அளவு - ஈ) கிகி

5. நிறை - உ) கிகி/மீ3


விடைகள் 

1. பரப்பு - இ) மீ2 

2. தொலைவு - அ) ஒளி ஆண்டு

3. அடர்த்தி - உ) கிகி / மீ3

4. கன அளவு - ஆ) மீ3

5. நிறை - ஈ) கிகி


II.

1. பரப்பு - அ) கி / செமீ3 

2. நீளம் - ஆ) அளவிடும் முகவை 

3. அடர்த்தி - இ) பொருளின் அளவு

4. கன அளவு - ஈ) கயிறு

5. நிறை - உ) தள வடிவ பொருள்


விடைகள் 

1. பரப்பு - உ) தள வடிவ பொருள் 

2. நீளம்  - ஈ) கயிறு 

3. அடர்த்தி - அ) கி/செமீ3 

4. கன அளவு - ஆ) அளவிடும் முகவை 

5. நிறை - இ) பொருளின் அளவு



V. பின்வருவனவற்றை சரியான வரிசையில் எழுதவும் 

1. 1L, 100cc, 10L, 10 cc 

விடை : 10cc, 100cc, 1L, 10L 

2. தாமிரம், அலுமினியம், தங்கம், இரும்பு 

விடை : அலுமினியம், இரும்பு, தாமிரம், தங்கம்.


VI. ஒப்புமையைக் கொண்டு நிரப்புக. 

1. பரப்பு : மீ2 :: கன அளவு : ________.

விடை :  மீ 3 

2. திரவம் : லிட்டர் :: திடப்பொருள் : ________

விடை:  கிலோகிராம் 

3. நீர் : மண்ணெண்ணெய் :: ________ : அலுமினியம்.

விடை :  இரும்பு 


VII. கீழ்க்காணும் கூற்றுக்களை ஆராய்ந்து, சரியான ஒன்றைத் தேர்வு செய்க 

1. கூற்று : கல்லின் கன அளவை அளவிடும் முகவை மூலம் அளக்கலாம்.

காரணம் : கல் ஒரு ஒழுங்கற்ற வடிவமுடைய பொருள்.

அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம். 

ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமல்ல. 

இ) கூற்று சரி. ஆனால், காரணம் தவறு. 

ஈ) கூற்று தவறு. ஆனால், காரணம் சரி.

விடை: அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம். 


2. கூற்று : மரக்கட்டை நீரில் மிதக்கும். 

காரணம் : நீர் ஒரு ஒளி ஊடுருவும் திரவம். 

 அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம். 

ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமல்ல. 

இ) கூற்று சரி. ஆனால், காரணம் தவறு. 

ஈ) கூற்று தவறு. ஆனால், காரணம் சரி. 

விடை: ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமல்ல 


3. கூற்று : ஓர் இரும்புக் குண்டு நீரில் மூழ்கும். 

காரணம் : நீர் இரும்பைவிட அடர்த்தி அதிகமுடையது. 

  அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம். 

ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமல்ல. 

இ) கூற்று சரி. ஆனால், காரணம் தவறு. 

ஈ) கூற்று தவறு. ஆனால், காரணம் சரி. 

விடை:  இ) கூற்று சரி. ஆனால், காரணம் தவறு.


VIII. மிகச் சுருக்கமாக விடையளி 

1. ஒருசில வழி அளவுகளைக் கூறுக. 

• பரப்பு

• கன அளவு (அ) பருமன் 

• வேகம்

• மின்னூட்டம்

• அடர்த்தி


2. ஓர் ஒளி ஆண்டின் மதிப்பைத் தருக.

ஒரு ஒளி ஆண்டு = 9.46 x 1015 மீ.


3. ஓர் உருளையின் கன அளவைக் காண உதவும் சூத்திரத்தை எழுதுக.

ஓர் உருளையின் கனஅளவை கண்டறிய பயன்படும் சூத்திரம்

= 𝝅 × r2 × h

(h என்பது உயரம்)

= 𝝅 r2 h


4. பொருள்களின் அடர்த்தியைக் காண்பதற்கான வாய்ப்பாட்டைத் தருக.  

ஃ அடர்த்தி =  நிறை ( M ) / பருமன் ( V )

 D = (M) / (V)


5. எந்தத் திரவத்தில் இரும்பு மூழ்கும்? 

நீரில் இரும்பு குண்டு மூழ்கும். 


6. வானியல் பொருள்களின் தொலைவைக் காண உதவும் அலகுகளைக் கூறுக. 

• வானியல் அலகு 

• ஒளி ஆண்டு 


7. தங்கத்தின் அடர்த்தி எவ்வளவு? 

தங்கத்தின் அடர்த்தி : 19,300 கிகி / மீ3


IX. சுருக்கமாக விடையளி 

1. வழி அளவுகள் என்றால் என்ன? 

• அடிப்படை அளவுகளைப் பெருக்கியோ அல்லது வகுத்தோ பெறப்படும் அளவுகள் வழி அளவுகள் எனப்படும்.. 

• எ.கா : பரப்பு, கன அளவு 

• வழி அளவுகளை அளவிடப் பயன்படும் அலகுகள் வழி அலகுகள் எனப்படும். 


2. ஒரு திரவத்தின் கன அளவையும் ஒரு கலனின் கொள்ளளவையும் வேறுபடுத்துக. 

ஒரு திரவத்தின் கன அளவு

  1. ஒரு லிட்டர் என்பது திரவங்களின் கன அளவைக் குறிக்கப் பயன்படும். பொதுவான ஓர் அலகாகும்.

  2. 1 லிட்டர் = 1000 cc.


ஒரு கலனின் கொள்ளவு 

  1. ஒரு கொள்கலனின் ஊற்றக்கூடிய அதிக பட்ச திரவத்தின் பருமனே கலனின் கொள்ளளவு எனப்படும். 


3. பொருள்களின் அடர்த்தியை வரையறு.

• ஒரு பொருளின் அடர்த்தி என்பது அதன் ஓரலகு பருமனில் (1மீ3) அப்பொருள் பெற்றுள்ள நிறைக்குச் சமம் ஆகும். 

• SI அலகு கிகி / மீ3 


4. ஓர் ஒளி ஆண்டு என்றால் என்ன? 

• ஒளி ஆண்டு என்பது ஒளியானது வெற்றிடத்தில் ஓர் ஆண்டில் கடக்கும் தொலைவே ஆகும். 

• ஒளி ஆண்டு = 9.46 × 1015 m. 


5. ஒரு வானியல் அலகு - வரையறு.

• ஒரு வானியல் அலகு என்பது பூமிக்கும் சூரியனுக்கும் இடையேயுள்ள சராசரித் தொலைவு ஆகும். 

• வானியல் அலகு = 149.6 x 106 கிமீ

                   = 1.496 x 1011 மீ.



X. விரிவாக விடையளி 

1. ஒழுங்கற்ற வடிவமுள்ள பொருள்களின் பரப்பை ஒரு வரைபடத்தாளைப் பயன்படுத்தி கணக்கிடும் முறையை விவரி.

 

• உன் வீட்டின் அருகில் உள்ள ஏதேனும் ஒரு மரத்திலிருந்து ஒர் இலையை எடுத்துக் கொள்க. 

• அந்த இலையை ஒரு வரைபடத் தாளின் மீது வைத்து அதன் எல்லைக் கோடுகளை ஒரு பென்சில்லைக் கொண்டு வரைந்து கொள்க. 

• இலையை நீக்கினால் அதன் எல்லைக் கோட்டை வரைபடத்தாளின் மீது காணலாம். 

ஒழுங்கற்ற வடிவமுள்ள பொருளின் பரப்பு : 

• இப்போது இலையின் எல்லைக் கோட்டுக்குள் அமைந்த முழு சதுரங்களை எண்ணிக் கொள்க. இந்த எண்ணிக்கைளை M எனக் கொள்க.

• பிறகு பாதி அளவு பரப்பிற்கு மேல் உள்ள சதுரங்களை எண்ணிக் கொள்க. இந்த எண்ணிக்கையை N எனக் கொள்க. 

• அடுத்து பாதி அளவு பரப்புள்ள சதுரங்களை எண்ணிக் கொள்க. இந்த எண்ணிக்கையை A எனக் கொள்க. 

• இறுதியாக பாதி அளவு பரப்பிற்குக் கீழ் உள்ள சதுரங்களை எண்ணிக் கொள்க. இந்த எண்ணிக்கையை Q எனக் கொள்க 

• M = 51 செ.மீ 

N = 11 செ.மீ 

P = 8 செ.மீ

Q = 9 செ.மீ. 

•  இலையின் தோரயமான பரப்பு

= M + (¾) N + (½) P + (¼) Q சதுர. செ.மீ. 

     = 51 + (0.75) 11 + (0.5) 8 + (0.25) 9 

= 51 + 8.25 + 4 + 2.25 

= 65.5 மீ 2

இலையின் பரப்பு = 65.5 மீ2  


2. ஒரு கல்லின் அடர்த்தியை ஒரு அளவிடும் முகவை மூலம் எவ்வாறு கண்டறிவாய்? 

• ஒரு அளவிடும் குவளையை எடுத்து அதில் சிறிது நீரை ஊற்றவும். 

• நீரின் கன அளவினை அளவிடும் குவளையின் அளவீட்டிலிருந்து குறித்துக் கொள்ளவும் அதனை V1 எனக் குறிக்கவும். 

• இப்போது ஒரு சிறிய கல்லை எடுத்துக் கொண்டு அதை ஒரு நூலினால் கட்டவும்.

• நூலைப் பிடித்துக் கொண்டு கல்லை நீரினுள் மூழ்கச் செய்யும். இவ்வாறு மூழ்கச் செய்யும் போது கல் குவளையின் சுவர்களில் தொடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். 

• தற்போது குவளையில் நீரின் மட்டம் உயர்ந்து இருக்கும். 

• நீரின் கன அளவினை அளவிடும் குவளையின் அளவீட்டிலிருந்து குறித்துக் கொள்ளவும். 

• அதனை V2 எனக் குறிக்கவும். 

• கல்லின் கனஅளவு அதிகரித்துள்ள நீரின் கன அளவிற்குச் சமம். 

• V1 = 30 மீ;  V2 = 40 மீ3

கல்லின் கனஅளவு = V2 - V1

= 40 - 30 

= 10 மீ3




XI. உயர் சிந்தனை வினாக்கள்

1. கீழே காட்டப்பட்டுள்ளவாறு மூன்று கோளங்கள் உள்ளன.


கோளங்கள் 'A' மற்றும் 'B' ஒரே பொருளால் செய்யப்பட்டவை.

கோளம் - 'A' வேறு ஒரு பொருளால் செய்யப்பட்டது. கோளங்கள் 'A' மற்றும் 'C' ஒரே ஆரம் கொண்டவை. கோளம் - 'B' -இன் ஆரம் கோளம் 'A'-ன் ஆரத்தில் பாதியாக இருக்கும். கோளம் 'A' ன் அடர்த்தி கோளம் ‘C’ -ஐ விட இரு மடங்காக உள்ளது. இப்போது, பின்வரும் வினாக்களுக்கு விடையளி. 

  1. கோளங்கள் 'A' மற்றும் 'B' இன் நிறைகளின் விகிதத்தைக் காண்க. 

2. கோளங்கள் 'A' மற்றும் 'B' இன் கன அளவுகளின் விகிதத்தைக் காண்க. 

3. கோளங்கள் 'A' மற்றும் 'C' இன் நிறைகளின் விகிதத்தைக் காண்க. 

விடை:


A' மற்றும் ‘B' சமம் 

RA = RC

RB = ½ RA 

ρA = 2 ρc 

               

அடர்த்தி ρ  =  நிறை / பருமன்

1) ρA  = MA / 4/3 𝜋 RA 3


   ρB  = MB / 4/3 𝜋 RB 3

   MA / RA3 = MB / R3B

 MA / MB = RA3 / RB= (2RB)3 / RB3 = 8/1     

         =  8 : 1


2) VA / VB = 𝜋 RA3 / 4/3 𝜋 RB3


                       = R3A / R3B = (2RB)3 / R3B


                      = 8 : 1


3) MA = 2 Ρc 4/3 𝜋 RC3

   MA / MC = 2R3A / R3C 

   2 : 1


XII. கணக்கிடுக 

1. ஒரு வட்ட வடிவத் தட்டின் ஆரம் 10 செ.மீ எனில், அதன் பரப்பை சதுர மீட்டரில் காண்க (𝜋 =22 / 7 எனக் கொள்க).



• கொடுக்கப்பட்டுள்ள ஆரம் = 10 செ.மீ (அ) 0.1 மீ

• தீர்வு

தட்டின் பரப்பு = 𝜋 r2

                  = 3.14 × 0.1 × 0.1

                  = 0.0314 மீ2


2. ஒரு பள்ளியின் விளையாட்டுத் திடலின் பரிமாணம் 800 மீ x 500 மீ அத்திடலின் பரப்பைக் காண்க. 

• கொடுக்கப்பட்டவை 𝑙 = 800 மீ : 𝑏 = 500 மீ

     அத்திடலின் பரப்பு = 𝑙 × 𝑏

                      = 800 x 500 

                       = 4000 மீ2


3. ஒரே அளவுடைய இரு கோளங்கள் தாமிரம் மற்றும் இரும்பினால் செய்யப்பட்டுள்ளன. அவற்றின் நிறைகளின் விகிதத்தைக் காண்க (தாமிரம் மற்றும் இரும்பின் அடர்த்தி முறையே 8900 கிகி / மீ3 மற்றும் 7800 கிகி / மீ3). 

              

 அடர்த்தி =  நிறை / பருமன்

       dc = Mc / V

       d1 = M1 / V

  MC / M1 = dc / d1 = 8900 / 7800

          = 1.14 / 1

          MC : M1  = 1 : 1     

        

          

 

4. 250 கி  நிறையுள்ள  ஒரு  திரவம் 1000 கன செ.மீ  இடத்தை நிரப்புகிறது. திரவத்தின் அடர்த்தியைக் காண்க.

                

ஃ அடர்த்தி = நிறை / பருமன்

           = 250 × 10-3 / 1000

           =  250 × 10-6 கிகி / மீ3


5. 1 செமீ ஆரமுள்ள ஒரு கோளம் வெள்ளியினால் செய்யப்படுகிறது. அக்கோளத்தின் நிறை 33 கி எனில், வெள்ளியின் அடர்த்தியைக் காண்க.  ( 𝜋 = 22 / 7 எனக் கொள்க )

நிறை = 33 கி

1 கிகி = 1000 

   33 × 10-3

ஃ அடர்த்தி = நிறை / பருமன்

            

           = 33 × 10-3 / 4/3 𝜋 r3

               

           =  33 × 10-3 / 4/3 × 3.14 × ( 1 × 10-2)3

              = 33 × 3 × 10-3 / 4 × 3.14 × 10-6

           = 99 / 12.56

 அடர்த்தி  =  7.88 × 103

          


XIII. குறுக்கெழுத்துப் புதிர்



இடமிருந்து வலம்

1. வெப்பநிலையின் SI அலகு (4)

2. திரவங்களின் கன அளவைக் காண உதவுவது (8)

3. ஓரலகு கன அளவில் உள்ள நிறை (5)

4. இரும்பைவிட அடர்த்தி அதிகம் கொண்ட திரவம் (5)


மேலிருந்து கீழ் 

அ) ஓர் அடிப்படை அளவு (6) 

ஆ) ஒரு முப்பரிமாணப் பொருள் ஆக்கிரமித்துக் கொள்ளும் இடம் (5) 

இ) நீண்ட தொலைவின் அலகு (5) 

ஈ) ஒரு வழி அளவு (5) 


விடைகள் : 

  1. கெல்வின் 

2. கன அளவு 

3. .அடர்த்தி 

4. கொள்ளளவு 


அ) திசைவேகம் 

ஆ) கன மீட்டர்

இ) மெர்குரி

ஈ) ஓளி ஆண்டு 



Tags : Measurement | Term 1 Unit 1 | 7th Science அளவீட்டியல் | முதல் பருவம் அலகு 1 | 7 ஆம் வகுப்பு அறிவியல்.
7th Science : Term 1 Unit 1 : Measurement : Questions Answers Measurement | Term 1 Unit 1 | 7th Science in Tamil : 7th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 7 ஆம் வகுப்பு அறிவியல் : முதல் பருவம் அலகு 1 : அளவீட்டியல் : வினா விடை - அளவீட்டியல் | முதல் பருவம் அலகு 1 | 7 ஆம் வகுப்பு அறிவியல் : 7 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
7 ஆம் வகுப்பு அறிவியல் : முதல் பருவம் அலகு 1 : அளவீட்டியல்