Home | 7 ஆம் வகுப்பு | 7வது அறிவியல் | நினைவில்கொள்க

அளவீட்டியல் | முதல் பருவம் அலகு 1 | 7 ஆம் வகுப்பு அறிவியல் - நினைவில்கொள்க | 7th Science : Term 1 Unit 1 : Measurement

   Posted On :  22.05.2022 09:53 pm

7 ஆம் வகுப்பு அறிவியல் : முதல் பருவம் அலகு 1 : அளவீட்டியல்

நினைவில்கொள்க

7 ஆம் வகுப்பு அறிவியல் : முதல் பருவம் அலகு 1 :அளவீட்டியல் : நினைவில்கொள்க

* வேறு எந்த இயற்பியல் அளவுகளாலும் குறிப்பிட இயலாத இயற்பியல் அளவுகள் அடிப்படை அளவுகள் எனப்படும். அவற்றிற்குரிய அலகுகள் அடிப்படை அலகுகள் எனப்படும்.

*  அடிப்படை அளவுகளைப் பெருக்கியோ அல்லது வகுத்தோ பெறப்படும் அளவுகள் வழி அளவுகள் எனப்படும். அவற்றிற்குரிய அலகுகள் வழி அலகுகள் எனப்படும். 

*  ஒரு பொருள் அடைத்துக்கொள்ளும் இடமே அதன் பரப்பளவு எனப்படும்.  இதன் SI அலகு சதுர மீட்டர் அல்லது  மீ2 ஆகும். 

*  ஒழுங்கற்ற வடிவமுள்ள பொருள்களின் பரப்பை ஒரு வரைபடத் தாளைப் பயன்படுத்தி காணலாம். 

 * ஒரு முப்பரிமாணப் பொருள் அடைத்துக் கொள்ளும் இடமே அப்பொருளின் கன அளவு அல்லது பருமன் எனப்படும். கன அளவின் SI அலகு கன மீட்டர் அல்லது மீ3  ஆகும்.

*  லிட்டர் என்பது திரவங்களின் கனஅளவைக் குறிக்கப் பயன்படும் பொதுவான ஓர் அலகாகும். ஒரு லிட்டர்= 1000 cc ஆகும். 

 *  ஒரு கொள்கலன் அடைத்துக்கொள்ளும் அதிகபட்ச திரவத்தின் பருமனே அக்கலனின் கொள்ளளவு எனப்படும். 

 *  ஒரு பொருளின் அடர்த்தி என்பது ஓரலகு பருமனில் (1 மீ3) அப்பொருள் பெற்றுள்ள நிறை ஆகும். 

 *  அடர்த்தியின் SI அலகு கிகி / மீ3. அதன் CGS அலகு கி / செமீ3.                1 கி/செமீ3  = 103 கிகி / மீ3

 *  அதிக அடர்த்தியைக் கொண்ட பொருட்கள் அடர்வுமிகு பொருள்கள் எனப்படும். குறைந்த அடர்த்தியைக் கொண்ட பொருள்கள் அடர்வுகுறை  பொருள்கள் எனப்படும். 

*  ஒரு திடப்பொருளின் அடர்த்தி ஒரு திரவத்தின் அடர்த்தியை விட அதிகமானல், அது அத்திரவத்தில் மூழ்கும். ஒரு திடப்பொருளின் அடர்த்தி ஒரு திரவத்தின் அடர்த்தியைவிட குறைவானால், அப்பொருள் அத்திரவத்தில் மிதக்கும். 

* அடர்த்தி = நிறை/கன அளவு 

    நிறை = அடர்த்தி ×  கன அளவு 

கன அளவு = நிறை / அடர்த்தி 

*  ஒரு வானியல் அலகு என்பது பூமிக்கும் சூரியனுக்கும் இடையேயுள்ள சராசரித் தொலைவு ஆகும்.1 வானியல் அலகு = 149.6 × 106 கிமீ = 1.496 × 1011 மீ. 

*  ஒளி ஆண்டு என்பது ஒளியானது வெற்றிடத்தில் ஓர் ஆண்டில் கடக்கும் தொலைவு ஆகும். 1 ஒளி ஆண்டு = 9.46× 1015 மீ.


இணையச்செயல்பாடு

அளவீடுகள்


நிறை மற்றும் கனஅளவினால் அடர்த்தியில் ஏற்படும் விளைவுகளை அறிவோமா!



படிநிலைகள்: 

படி 1: கீழ்க்காணும் உரலி / விரைவுக் குறியீட்டைப் பயன்படுத்தி இச்செயல்பட்டிற்கான இணையப் பக்கத்திற்குச் செல்க. 

படி 2: வலது சாளரத்தின் மேற்புறம் உள்ள customize என்பதை சொடுக்கவும். 

படி 3: Material, Mass மற்றும் Volume என்பதில் மாற்றம் செய்ய மேல் இடது புற சாளரத்தில் உள்ளநகர்த்தியை நகர்த்தவும். இப்பொழுது நிறைமற்றும் கனஅளவினால் அடர்த்தியில் ஏற்படும் விளைவுகளைக் காணலாம். 

படி 4: 'Reset all' என்பதை சொடுக்கி புதுப்பிக்கவும்.


உரலி: https://phet.colorado.edu/en/simulation/density(or) scan the QR Code



Tags : Measurement | Term 1 Unit 1 | 7th Science அளவீட்டியல் | முதல் பருவம் அலகு 1 | 7 ஆம் வகுப்பு அறிவியல்.
7th Science : Term 1 Unit 1 : Measurement : Points to remember Measurement | Term 1 Unit 1 | 7th Science in Tamil : 7th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 7 ஆம் வகுப்பு அறிவியல் : முதல் பருவம் அலகு 1 : அளவீட்டியல் : நினைவில்கொள்க - அளவீட்டியல் | முதல் பருவம் அலகு 1 | 7 ஆம் வகுப்பு அறிவியல் : 7 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
7 ஆம் வகுப்பு அறிவியல் : முதல் பருவம் அலகு 1 : அளவீட்டியல்