இந்தியாவில் கூட்டாட்சி | அரசியல் அறிவியல் - அருஞ்சொற்பொருள் | 12th Political Science : Chapter 5 : Federalism in India

   Posted On :  02.04.2022 11:36 pm

12 ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 5 : இந்தியாவில் கூட்டாட்சி

அருஞ்சொற்பொருள்

கூட்டாட்சி : அரசமைப்பு வழியாக மத்திய மாநில அரசாங்கங்கள் இடையே அதிகாரப் பகிர்வை வழங்கி இருக்கும் அரசியல் முறைக்கு கூட்டாட்சி என்று பெயராகும்.

அருஞ்சொற்பொருள்




கூட்டாட்சி: அரசமைப்பு வழியாக மத்திய மாநில அரசாங்கங்கள் இடையே அதிகாரப் பகிர்வை வழங்கி இருக்கும் அரசியல் முறைக்கு கூட்டாட்சி என்று பெயராகும். 


நெகிழா அரசமைப்பு: அரசியல் சாசனத்தில் திருத்தங்கள் ஏற்படுத்துவதற்கு சிறப்பு அரசியல் சாசன திருத்த முறை அல்லது அறுதிப் பெரும்பான்மை ஆதரவு முறையுள்ள அமைப்பிற்கு நெகிழா அரசமைப்பு என்பது பெயராகும். அரசமைப்பை எளிதில், சாதாரண சட்டங்கள் மூலம் மாற்ற முடியாது. 


நெகிழும் அரசமைப்பு: சாதாரண சட்டங்கள் மூலமாக ஒரு அரசமைப்பை திருத்த முடியும் என்றால் அதற்கு நெகிழும் அரசமைப்பு என்பது பெயராகும்.


அதிகாரப் பகிர்வு: கூட்டாட்சி முறையின் முக்கியமான தன்மை அதிகாரப் பகிர்வு ஆகும். அதிகாரங்கள் மத்திய மாநில அரசாங்கங்களுக்கிடையே அரசமைப்பின் வழியாக பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. 


கூட்டுறவுக் கூட்டாட்சி: கிரான்வில் ஆஸ்டின் என்ற புகழ்பெற்ற அரசமைப்பு அறிஞர் இந்தியக் கூட்டாட்சியை கூட்டுறவுக் கூட்டாட்சி என வர்ணித்தார். மத்திய மாநில அரசாங்கங்கள் இடையே கூட்டுறவு காணப்படுகின்றது. ஒன்றியப் பட்டியல்: அரசமைப்பின் ஏழாவது அட்டவணையில் உள்ள முதலாவது பட்டியல் ஒன்றிய (யூனியன்) பட்டியல் என்று அழைக்கப்படுகிறது. மத்திய அரசாங்க அதிகாரங்கள் இப்பட்டியலில் உள்ளன. 


மாநிலப் பட்டியல்: இரண்டாவது பட்டியிலில் அரசமைப்பின் ஏழாவது அட்டவனையில் மாநில அரசுக்கு மட்டும் பொருந்தகூடிய துறைகளை கொண்டுள்ளது. பொதுப் பட்டியல்: அரசமைப்பின் ஏழாவது அட்டவணையில் உள்ள மூன்றாவது பட்டியல் பொதுப் பட்டியல் ஆகும். மத்திய, மாநில அரசாங்கங்களுக்கு பொதுவாக உள்ள அதிகாரங்கள் இப்பட்டியலில் இடம் பெற்றுள்ளன. மத்திய, மாநில அரசுகள் இடையே பொதுப்பட்டியலில் உள்ள அதிகாரத்தில் முரண்பாடுகள் ஏற்பட்டால் மத்திய அரசாங்கத்தின் அதிகாரமே செல்லும்.


இதரப் பட்டியல்: அரசமைப்பின் ஏழாவது அட்டவணையில் உள்ள மூன்று பட்டியல்களில் இடம் பெறாத அதிகாரம் இதர அதிகாரமாகக் கருதப்படும். இதர அதிகாரங்கள் மத்திய அரசாங்கத்திற்கே சொந்தமாகும். 


அனைத்து இந்தியப் பணிகள்: அனைத்து இந்தியப் பணிகள் அரசமைப்பின் உறுப்பு 312 பிரகாரம் தோற்றுவிக்கப்படுகின்றன. மாநிலங்களவை அறுதிப் பெரும்பாண்மை ஆதரவுடன் புதிய அனைத்து இந்தியப் பணிகளை உருவாக்கலாம். மாநிலங்களவையின் தற்போதைய உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை அல்லது மாநிலங்களவையின் மொத்த உறுப்பினர்களில் அறுதிப்பெரும்பான்மை ஆதரவுடன் தீர்மானம் இயற்றி அனைத்து இந்தியப் பணிகளை உருவாக்கலாம். 


இராஜமன்னார் குழு: தமிழ்நாடு அரசு 1968-ஆம் ஆண்டு மத்திய மாநில உறவுகளை ஆய்வு செய்து பரிந்துரை வழங்கியதற்காக இராஜா மன்னார் குழுவை அமைத்தது. மாநில உரிமைகள் வரலாற்றில் இராஜ மன்னார் அறிக்கை மிக முக்கியமானதாக உள்ளது. 


சர்க்காரிய குழு: மத்திய அரசாங்கம் 1983ஆம் ஆண்டு மத்திய மாநில உறவுகளை ஆய்வதற்காக சர்க்காரிய குழுவை அமைத்தது. அரசமைப்பு மதிப்பாய்வு தேசிய குழு (National Commission to Review the Working of the Constitution[NCRWC]): மத்திய அரசாங்கத்தால் 2000-ஆம் ஆண்டு அரசமைப்பு மதிப்பாய்வு தேசிய குழு அமைக்கப்பட்டது. இதுவெங்கட செல்லையா குழு என்றும் அழைக்கப்படுகிறது. 


ஒற்றையாட்சி அரசமைப்புகள்: இவ்வகையான அரசமைப்புகளில் மத்திய அல்லது தேசிய அரசாங்கம் மட்டுமே அரசமைப்பால் உருவாக்கப்படுகிறது. மாநில அரசாங்கங்களை அரசமைப்பு உருவாக்கவில்லை அல்லது அங்கீகரிக்கவில்லை . 


நடுவர்மன்றம்: மாநிலங்களுக்கிடையேயான நதி நீர்ப் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு உருவாக்கப்படும் அமைப்பிற்கு நடுவர் மன்றம் அல்லது தீர்ப்பாயம் என்பது பெயராகும்.


Tags : Federalism in India | Political Science இந்தியாவில் கூட்டாட்சி | அரசியல் அறிவியல்.
12th Political Science : Chapter 5 : Federalism in India : Glossary Federalism in India | Political Science in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 5 : இந்தியாவில் கூட்டாட்சி : அருஞ்சொற்பொருள் - இந்தியாவில் கூட்டாட்சி | அரசியல் அறிவியல் : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 5 : இந்தியாவில் கூட்டாட்சி