மனிதக் குடியிருப்புகள் - புவியியல் - கலைச்சொற்கள் | 12th Geography : Chapter 2 : Human Settlements

   Posted On :  27.07.2022 05:37 pm

12 வது புவியியல் : அலகு 2 : மனிதக் குடியிருப்புகள்

கலைச்சொற்கள்

கலைச்சொற்கள் : மனிதக் குடியிருப்புகள் : புவியியல்

கலைச்சொற்கள்

1. பாலைவனச் சோலை: பாலைவனத்தில் ஒரு பசுமையான இடம்.

2. நகர்ப்புற விரிவாக்கம்: நாட்டுப் புறமாக இருந்த பகுதியில் நகர்ப்புறக் கட்டிடங்களும் வீடுகளும் பரவுதல்.

3. ஒருங்கிணைப்பு: மத்தியப் பகுதியின் கட்டப்பட்ட பகுதி மற்றும் ஏதாவது புறநகர் ஆகியவற்றை உள்ளடக்கிய நகர்புறத்தின் நீட்டிப்பு மற்றும் தொடர்ந்த நகர்ப்புறப்பகுதி மூலம் தொடர்பு படுத்தப்பட்டது.

4. குற்றம்: ஒரு செயலைச் செய்தல் அல்லது செய்யாதிருத்தல் குற்றத்தை ஏற்படுத்துகிறது. இது சட்டத்தின் மூலம் தண்டிக்கப்படக்கூடியது.

5. ஆற்றல் சிக்கல்: பொருளாதாரத்திற்குத் தேவையான சக்தி வளங்களைத் தருவதில் ஏற்படும் முக்கியமான சிக்கல்.

6. ஸ்மார்ட் சிட்டி (Smart City): ஒரு நகர்ப்புற பகுதி பலவிதமான மின்னணு தகவல்களைச் சேகரிக்கும் நுண்ணுணர்வுகளைப் (Sensors) பயன்படுத்தி தகவல் அனுப்பி, சொத்துக்களையும், வளங்களையும் திறமையாகக் கையாளும் பகுதி.

7. வேலையின்மை: வேலையற்ற நிலை.

8. தலம்: புவியின் மேற்பரப்பின் காணும் இடம்.

9. மானுடவியலாளர்: மானுடவியல் பற்றிய பயிற்சியில் ஈடுபட்டுள்ள ஒரு மனிதர்.

10. இணைந்த நகரம்: இரண்டு மாநகரங்களின் இணைப்பினால் உருவான நகர்ப்புற வளர்ச்சிப் பரப்பு.


இணையச் செயல்பாடு

மனிதக் குடியிருப்புகள்




இந்த செயல்பாடு மாணவர்களுக்கு குடியேற்ற நாடுகள் குறித்த புரிதலையும் அவர்கள் ஏன் அங்கு குடியேறினார்கள் என்பது குறித்த அறிவையும் கொடுக்கும்.


படிகள்

படி 1: URL அல்லது QR குறியீட்டினைப் பயன்படுத்தி இச்செயல்பாட்டிற்கான இணையப்பக்கத்திற்கு செல்க. அங்கு பக்கம் ஒன்று இடது பக்கத்தில் விருப்பத் தேர்வுகளுடன் திறக்கும். தேவையானதை தெரிவு செய்க

படி 2: இது தெரிவு செய்யப் பட்ட தலைப்பைக் குறித்த அநேக குறிப்புகளை படங்களோடு தரும்.

படி 3: எல்லா விருப்ப தேர்வுகளையும் தெரிவு செய்து அதில் கொடுக்கப் பட்டுள்ள குறிப்புகள் மூலம் அதிகமான அறிவைத் தெரிந்து கொள்ளவும்.




உரலி

https://www.projects.yrdsb.edu.on.ca/pioneer/home eng.htm

*படங்கள்  அடையாளத்திற்கு மட்டுமே

Tags : Human Settlements | Geography மனிதக் குடியிருப்புகள் - புவியியல்.
12th Geography : Chapter 2 : Human Settlements : Glossary Human Settlements | Geography in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 வது புவியியல் : அலகு 2 : மனிதக் குடியிருப்புகள் : கலைச்சொற்கள் - மனிதக் குடியிருப்புகள் - புவியியல் : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 வது புவியியல் : அலகு 2 : மனிதக் குடியிருப்புகள்