மனிதக் குடியிருப்புகள் - புவியியல் - மைய மண்டல கோட்பாடு | 12th Geography : Chapter 2 : Human Settlements
மைய மண்டல கோட்பாடு (Concentric Zone Theory)
இந்த கோட்பாடு எர்னெஸ்ட் பர்கேஸ் (Ernest Burgess) என்பவரால் 1925ல் வெளியிடப்பட்டது. இவர் மைய மண்டலத்தில் உள்ள ஒரு மையத்திலிருந்து ஒரு சிற்றலையைப் போன்று வெளிப்புறமாக வளர்ச்சியடையும் நகரத்தைப் பற்றி விளக்குகிறார். இவர் கீழ்க்கண்ட அனுமானங்களை உருவாக்கினார்.
அ. ஆறுகள் அல்லது குன்றுகள் போன்ற இயற்கைத் தடைகள் இவற்றைக்
குறுக்கிடாதவரை ஒரு நகரமானது ஐந்து மைய மண்டலங்கள் அல்லது வளையங்களிலிருந்து வெளிப்புறமாக
வளர்ச்சியடைகிறது.
ஆ. ஒரு நகரம் ஒரே ஒரு மையத்தைக் கொண்டுள்ளது.
இ. நகரமானது ஒவ்வொரு மண்டலமாக வெளிப்புறத்தை நோக்கி வேறொரு மண்டலமாக
வளர்ச்சியடைகிறது.
ஐந்து மண்டலங்களின் தன்மைகள் கீழே தனித்தனியாக விவரிக்கப்பட்டுள்ளன.
இது வணிக சமூகத்தின் மையப்பகுதியாகும். இங்கு வணிக, சமூக மற்றும்
குடிமை செயல்பாடுகள் குழுமிக் காணப்படுகின்றன. மத்திய வணிக மையத்தின் மையப்பகுதி அலுவலகக்
கட்டிடங்கள், வணிகக் கடைகள், திரையரங்குகள், உணவகங்கள், வங்கிகள், குடிமை அரசு கட்டிடங்கள்
போன்றவற்றைக் கொண்டுள்ள போது இதன் வெளிப்புறப் பகுதி பண்டக சாலைகள் மற்றும் இலகுரக
தொழிற்சாலைகளைக் கொண்டுள்ளது.
இங்கு வணிக செயல்பாடுகளும் தொழிற்சாலைகளும் இணைந்து காணப்படுகின்றன.
இது பழைய குடியிருப்புப் பகுதிகளை ஆக்கிரமிக்கிறது. இது குடியிருப்பு சிதைவு மண்டலம்
என்றும் அழைக்கப்படுகிறது. இங்கு குறைவான வாடகையும் பணிபுரியுமிடதிற்கு செல்ல போக்குவரத்து
செலவும் குறைவாக இருப்பதால் புதிதாக குடியேறுகிறார்கள். ஆகவே, இது நகரக் குடிசைகள்
ஆகும்.
இந்தப் பகுதி இரண்டாம் தர குடியேற்றக் காரர்களான நீலக் கழுத்துப்
பட்டை பணியாளர்கள் தங்கும் இடங்களாகும். வணிக மையப் பகுதிக்கு வெளியே இவர்களால் சொந்தமாக
வீடு வைத்துக்கொள்ளும் திறன் இருந்தாலும் பணிபுரியும் இடங்களுக்கு செல்ல ஏற்றதாக இது
இருப்பதால் இங்கு தங்கியிருக்கிறார்கள். குடும்ப குழுக்கள் அதிகமாக காணப்படுகின்றன.
குற்ற விகிதங்கள் மிகவும் குறைவாகக் காணப்படுகிறது.
இது நடுத்தர மற்றும் உயர் வர்க்க குடியிருப்புகளைக் கொண்டுள்ளது.
மண்டலம் 1 லிருந்து 15 - 20 நிமிடங்களில் போது வாகனங்கள் மூலம் வீட்டிற்கு செல்லும்
தூரத்தில் அமைந்துள்ளது.
இந்த மண்டலம் நகரத்தைச் சுற்றிக் காணப்படுகிறது. இது தொடர்ச்சியான
குடியிருப்புப் பகுதிகளுக்கு அப்பாலும் காணப்படுகிறது. பெரும்பாலான இப்பகுதி நகர எல்லைக்கு
அப்பால் திறந்த வெளியில் காணப்படுகிறது. திறந்த வெளியில் காணப்படும் சிறிய கிராமங்கள்
நாளடைவில் புற நகர் பகுதிகளாக வளர்ச்சியடைகின்றன. இந்த பகுதியிகுள் வசிப்போர் மத்திய
வணிக மையத்தில் பணிபுரிவதால் பயணிகள் மண்டலம் ஒரு மணிநேர பயண தூரத்திலேயே அமைந்துள்ளது.
நகரின் வெளிப்புற வளர்ச்சியானது இந்த மண்டலம் நிலையற்றது என்பதைக் குறிப்பதாக பர்கேஸ் கூறுகிறார். வணிக வளர்ச்சி மாற்றநிலை மண்டலத்தை நோக்கி விரிவடைவதால் குறைந்த வருமான குழுக்களை இது வெளியேறச் செய்கிறது. இந்த குழுக்கள் நடுத்தர மற்று உயர் வர்க்கத்தினரை வெளிப்புறத்தை நோக்கி இடம்பெயரச் செய்கின்றன.